December 2010
-
இந்திய மண்ணில் சாதியும் வர்க்கமும் (மார்க்சியம் குறித்த விமர்சனத்திற்கு பதில்)
தலித்துகள் மீதான தீண்டாமை உள்பட சகல சாதிய ஒடுக்குமுறைகளை ஒழிக்கவும், இறுதியாக சாதியமைப்பிற்கு முடிவு கட்டவும் போராட சிபிஐ(எம்) உறுதி பூண்டுள்ளது. Continue reading
-
மேல்சாதி ஆதிக்கம் – இடது அல்லாத அரசியல் கூட்டணிகள் – அரசு எந்திரம்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1, தனது 2004 குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு தனியார்துறை பணிகளில் ஒதுக்கீடு உத்தரவாதப் படுத்தப்படும் என வாக்குறுதி வழங்கியது. ஆறு ஆண்டுகள் கடந்த பின்னும், இதை அமலாக்க அரசு தவறியுள்ளது. சமூக நீதியை வழங்கும் அரசியல் உறுதி ஆளும் அரசிடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது. இப்பிரிவு மக்களுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 27 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்திய முதலாளிகள் பிரதமரிடம்;- “வேலையில் இடஒதுக்கீடு… Continue reading
-
உழவர் சந்தையும் விலைவாசி உயர்வுப் பிரச்சனையும்
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேசிய அளவில் நடந்த மாநில முதல் அமைச்சர்கள் மாநாட்டில் உழவர் சந்தையின் வாயிலாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்றும் இந்தியா முழுவதும் தமிழகத்தைப் போல் உழவர் சந்தைகள் துவக்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் சார்பில் பேசிய துணை முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களின் கருத்தாக அமைந்தது. பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களை பின்பற்றி அப்போதைய மதுரை மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் திரு. ரத்தனவேலு… Continue reading
-
வரலாற்றியல் அறிஞரின் கண்ணோட்டத்தில் “அயோத்தியா பற்றிய தீர்ப்பு”
இந்தத் தீர்ப்பு ஒரு அரசியல் பூர்வமான தீர்ப்பு. இத்தகைய தீர்ப்பை அரசே, பல ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்திருக் கலாம், மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தமானது, இடிக்கப்பட்ட மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்டப்படுவது – இவைதான் இந்தத் தீர்ப்பின் மையக் கருத்தாயிருக்கிறது. சமய அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட, தற்கால அரசியலோடு தொடர்புடையது இந்தத் பிரச்னை. அதே நேரத்தில் வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களை அடிப்படை யாகக் கொண்டது என்றும் கூறப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட போது வரலாற்று… Continue reading
-
சீனப்புரட்சி பற்றி தோழர் மாவோ
சீனப்புரட்சியின் வெற்றிக்கு மாசேதுங் அளித்த பங்கை நாம் ஆழ்ந்து பரிசீலிப்பது அவசியம். ஏனெனில், அவரது பெயரில் இங்கு குட்டி பூர்சுவா குழப்பவாதிகள் கம்யூனிச இயக்கத்திற்கு சொல்லொண்ணா சேதாரத்தைக் கொண்டு வருவதால் அது தேவைப்படுகிறது. சீனாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் 1921-இல் சிறு குழுவாக உதயமானபொழுது சீன சமூக அரசியல் நிலவரத்தை முதலில் கவனிக்க வேண்டும். 1911-இல் சன்யாட்சென் தலைமையில் ஏற்பட்ட எழுச்சியால், மன்னராட்சி அகற்றப்பட்டு சீன குடியரசு உதயமானது. குடியரசின் தலைவராக அவர் இருந்தாலும் சீனாவின் பெரும்பகுதி… Continue reading
-
தொழிலாளர்கள் போராட்டமும் சித்தாந்தப் போரும்
இன்றைய தேதிகளில் பணக்கார நாடுகளில் நடைபெறும் தொழிலாளர்களின் போராட்டங்கள் விளைவுகளை எதிர்ப் பவைகளே. நெருக்கடியை விளைவிக்கும் காரணங்களை அகற்றிடும் மாற்றுகளை முன்வைத்து நடக்கும் சமூக, அரசியல் இயக்கமல்ல என்பதை, உலக நடப்புகளை தொடர்ச்சியாக பார்ப்பவர்களால் உணர முடியும். இருந்தாலும் இப்போராட் டங்களின் உயிர் நாடியாக இருக்கும் தத்துவப்போரின் வீச்சு பாட்டாளி வர்க்கத்தின் தத்துவ ஆயுதத்தை தீட்ட வேண்டிய அவசியத்தை உருவாக்கிவிட்டது என்பதை நாம் பார்க்க மறுக்கக் கூடாது. அது பற்றிய ஒரு கருத்தலசலை வாசகர்களின் சிந்தனைக்கு… Continue reading
