June 2005
-
நெருக்கடிகளை வேகப்படுத்தும் ஐ.மு. அரசின் பொருளாதாரக் கொள்கை
2004 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசீய ஜனநாயக முன்னணி தோல்வியுற்றது. இது சர்வதேச நிதி வட்டாரங்களில் துயரத்தை ஏற்படுத்தியது. இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் ஏன் அடிக்கடி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கேள்வியை, வால் டீரீட் ஜர்னல் தலையங்கத்தில் எழுப்பியது. இந்திய பொருளாதாரத்தில் அன்னிய முதலீட்டாளர்களுக்கும் ஒரு பங்குண்டு. ஆகவே தேர்தலின் முடிவு மக்கள் விருப்பப்படி விட்டுவிட முடியாது எனவும் இப்பத்திரிகை எழுதியது. வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதி நிறுவனம்… Continue reading
-
வீரம் விளைந்தது – வியட்நாம் எழுந்தது
படைப்பிரிவுகளின் ஏற்ற தாழ்வினை பார்த்து, சிலர் நமது எதிர்ப்பினை, வெட்டுக்கிளிகளுக்கும் யானைகளுக்கும் நடக்கும் சண்டை என வருணித்தனர். படைப்பிரிவுகளின் பலத்தினையும் மாறிக் கொண்டிருக்கும் நிலைமைகளையும் வைத்துப் பார்த்தால், ஓரளவுக்கு அது சரி என்று தோன்றக் கூடும். எதிரியின் குண்டு வீசும் விமானங்கள் மற்றும் போர்த்தளவாடங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மிடம் இருந்ததென்னவோ மூங்கில் ஈட்டிகள் தான். ஆனால், நமது கட்சி மார்க்சிய – லெனினிய கோட்பாட்டின் மேல் கட்டப்பட்டது. நாம் நிகழ்காலத்தை மட்டும் பார்ப்பதில்லை, எதிர் காலத்தையும் முன்னிறுத்துகிறோம்.… Continue reading
-
சம உரிமைகள், சம சட்டங்கள்
நான் மதத்தை வெறுக்கிறேன். ஏனெனில் மதம் பெண்களின் உரிமைகள் பற்றி கவலைப்படுவதில்லை. ஆண் – பெண் சமத்துவத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. எனவே, மதத்தை நான் வெறுக்கிறேன். – தஸ்லீமா நஸ்ரீன், வங்கதேச எழுத்தாளர் இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசாகும். சாதி, இனம், பால், வர்க்க வேறுபாடின்றி அனைவருக்கும் சமஉரிமைகள் உண்டு என அரசியல் சாசனம் உறுதிப்படுத்துகிறது. சைவர், வைணவர், குல தெய்வங்களை கும்பிடுவோர் ஜெயினர், பௌத்தர், முஸ்லீம், கிறித்துவர், சீக்கியர் என பல்வேறு நம்பிக்கைகளைச் சேர்ந்தோர்… Continue reading
-
பஞ்சாலைகளில் இன்றைய நிலை
அமெரிக்காவின் மாபெரும் மோட்டார் உற்பத்தியாளர்கள், ஜெனரல் மோட்டார், தொழிலாளர்கள் தங்களது ஊதிய உயர்வுக்காக நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த பொழுது நிர்வாகம் மறுத்தது, தொழிற்சங்கமும், விடாப்பிடியாக தங்களது நியாயத்தை நிலை நிறுத்த உறுதியாக நிற்க, உற்பத்தி முடக்கம் ஏற்படும் நிலை, நிர்வாகம் தங்களது உயர் மட்டக்குழுவை கூட்டியது. அவர்களும், ஊதிய உயர்வால், கம்பெனி பல கோடி இழப்பு ஏற்படும். புது, புது கம்பெனிகளின் வரவால் சந்தைப் போட்டியுள்ளதாகிவிட்டது. எனவே ஊதிய உயர்வு சாத்தியமில்லை என அறிவித்தது. தொழிற்சங்கமும் தங்களது… Continue reading
-
சுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் மாற்று எரிபொருட்கள்
சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு குறித்து ஒரு புறம் பெரிய அளவில் பேசப்படுகிறது. மறுபுறம் நீரும், நிலமும், காற்றும் மாசுபட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. ஓசோன் மண்டலத்தில் ஓட்டை, அண்டார்டிகா வெப்பத்தால் உருகுகிறது, மாலத்தீவே காணாமல் போகும் அபாயம் உண்டு, பயிரிடக்கூடிய நிலங்கௌல்லாம் தன் ஜீவ சத்தை இழந்து மலட்டுத்தனமாக மாறுகின்றன என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எதிர்காலத்தில் வரக்கூடிய பேராபாயத்தைச் சுட்டிக்காட்டும் நிகழ்கால நிகழ்ச்சிகளாக இவை உள்ளன. சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்கென்றே மத்திய மாநில அரசுகள் தனி இலாகாவையே… Continue reading
-
தமிழகத்தின் அடிமை முறை
தமிழகத்தின் அடிமை முறை என்ற அரிய நூலை ஆ.சிவ சுப்ரமணியன் அவர்கள் வாசிப்பதற்கு இலகுவாகவும், புரிவதற்கு ஆணித்தரமாகவும் ஏராளமான ஆதாரங்களை அழகு தமிழில் அள்ளித் தந்துள்ளார். தலைப்பைப் பார்த்த உடனே சிலர் பதறிப்போய் தமிழகத்திலா, அடிமைகளா? நம் தமிழ் முன்னோர்கள் ஆண்ட அந்தப் பொற்காலத்திலா? என்று வியப்போடு கேட்பவர்கள் இப்பவும் ஏராளம் பேர் இருக்கிறார்கள். பொற்காலம் என்று புகழப்பட்ட அந்தக் காலத்திலிருந்து விஞ்ஞானம் விண்ணை அளக்கும் 21ம் நூற்றாண்டின் இக்காலம் வரையிலும் தமிழகத்தில் அடிமை முறை ஜீவனம்… Continue reading
-
ஜோசப் ஸ்டாலின் – 4

I 1 I – I 2 I – I 3 I – I 4 I – I 5 I லெனின் நலக்குறைவு: 1918 இல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் உள்ளேயே தங்கிவிட்ட குண்டினை அகற்ற 1922 இல் ஏப்ரலில் நடைபெற்ற அறுவை சிகிச்சையும் தோழர் லெனினை வலுக்குறையச் செய்தது. 1922 மே மாதம் பக்கவாதம் தாக்கியது. பேச்சுத் திறனையும் இழந்தார். ஆயினும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுத் தேறினார். இக்காலத்தில் லெனினின்… Continue reading
