June 2023
-
மார்க்ஸ்: ‘வேலை நாளும்’ வர்க்கப் போராட்டமும்
வேலைநாள், குறைந்தபட்சக் கூலி, கூட்டுப்பேரம் ஆகிய விதிமுறைகள், அறம் சார்ந்தோ நாகரிக நீதி கருதியோ முதலாளி வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் தெளிவாகிறது. இந்த விதிகளை மீறும் நிலையிலும், அத்தகைய வேலைச் சூழ்நிலைகளில் மனித உரிமை மீறல்கள் ஏற்படும் நிலையிலும், முதலாளிகளின் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் அவற்றுக்கெதிராகக் குரல் எழுப்பபடுவதும் மிக அரிதாகவே உள்ளது. Continue reading
-
புதிய நாடாளுமன்றம்: குடியாட்சிக்கு விடப்பட்ட சவால்!
காலனி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டிய இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள், சுதந்திர இந்தியா எப்படி அமையவேண்டும் என்பதை தீவிரமாக விவாதித்தார்கள். நவீன இந்தியாவிற்கு பாதை வகுக்கும் புதிய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள். அப்போதே அரசமைப்புச் சட்டத்தை ஏற்க மறுத்த ஆர்.எஸ்.எஸ்., மநுநீதியைத்தான் இந்தியாவின் அரசமைப்புக்கு முன்மாதிரியாக முன்வைத்தது Continue reading
-
மாநிலங்களின் உரிமைக்காக ஒன்றுபட வேண்டும் – பிரகாஷ் காரத்
எதிர்க் கட்சிகள் மாநில உரிமைகள், கூட்டாட்சியின் மீதான தாக்குதல்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதில்லை. நிறைய மாநில அரசுகள் எதிர்க்கட்சிகள் வசம் உள்ளன. எல்லா மாநிலங்களும் பாதிக்கப்படும்போது ஒருங்கிணைந்த எதிர்ப்பை காண்பிக்க வேண்டும். Continue reading
-
அகநிலைவாதம் எதிர்த்த போராட்டம்!
சீத்தாராம் யெச்சூரி ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனத்தை வலுப்படுத்துவதன் மீதான கவனம், அனைத்து காலகட்டங்களிலும் அந்தப் புரட்சிகர கட்சிக்கு இருக்க வேண்டும். கட்சியின் ஸ்தாபன அமைப்பு முறை என்ன என்பதையும் அதன் முன்னுரிமைகள் எவை என்பதையும் தீர்மானிப்பதாக கட்சியின் முக்கியமான அரசியல் கடமைகளும், திசைவழியும் அமைகின்றன. அரசியல் திசைவழியானது திட்டவட்டமான காலத்தில் நிலவும் திட்டவட்டமான சூழல்களைப் பற்றிய ஆய்வின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இவை அரசியல் நடைமுறை உத்தியில் உள்ளடங்கும். தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான ஒரு புரட்சிகரமான கம்யூனிஸ்ட்… Continue reading
-
சமகால உலகில் வளர்ந்துவரும் பலதுருவ போக்குகளும் அவற்றின் வரம்புகளும்
பலதுருவப்போக்கு வலுப்பெற்று வந்தாலும், அமெரிக்க வல்லரசும் அதன் நேச நாடுகளும் இன்றுவரை பெரும் ராணுவ-ஆயுத வல்லமையை கைவசம் வைத்துள்ளனர். தொடர்ந்து உலக நாடுகளையும் இயற்கை வளங்களையும் சூறையாடி, தம்மை வலுப்படுத்திக்கொண்டு வருகின்றனர். சீன – ரஷ்யா உறவு முன்னேற்றம் ஏகாதிபத்திய எதிர்ப்பு பங்கு ஆற்ற வாய்ப்பு உள்ளது என்றபோதிலும் ரஷ்யாவும் ஒரு பெரிய பலம் மிகுந்த முதலாளித்துவ நாடு என்பதை நாம் மறந்துவிட முடியாது. Continue reading
-
மேலைநாடுகளின் மிரட்டல்களுக்கு அடிபணியாத தெற்குலகம்
மேலைநாடுகள் தரும் அழுத்தங்களால் ஏற்படுகிற விரக்தி ஒருபுறம், ரஷ்யாவுடன் சீரான உறவைப் பேணுவதால் கிட்டும் பொருளாதார வாய்ப்புகள் மறுபுறம் என்றிருக்கும் இன்றைய யதார்த்தச் சூழலிலேயே, ஆப்பிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுடனான உறவைத் துண்டித்துக்கொள்ளுமாறு வாஷிங்டன் தரும் நெருக்கடியைப் புறந்தள்ளி, அலட்சியம் செய்து வருகின்றன. Continue reading
-
குறைந்தபட்ச ஆதார விலையும் உணவுப்பாதுகாப்பும்
ஒன்றிய அரசாங்கத்தின் ஓர் அனுபவம் வாய்ந்த அமைச்சர், ”இரப்பர் விலை ஸ்திரத்தன்மைக்கு அரசு சந்தையில் ஏன் தலையீடு செய்யவில்லை” என்ற கோரிக்கைக்கு, இத்தகைய முட்டாள்தனமான வாதங்களை எதற்காக முன் வைக்க வேண்டும் என்று நம்மிடையே இந்த இடத்தில் ஒரு கேள்வி தானாகவே எழும். அது இயல்பு தான். பேராசிரியர் இந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கான விடையையும் நாம் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கிறார். Continue reading
-
அமெரிக்க வங்கிகள் ஏன் திவால் ஆகின்றன?
பொருளாதாரத் தடைகள் மூலம் குறிவைக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிப்பது ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படிய மறுக்கும் போக்கு அதிகரிப்பதை காட்டுகிறது. அதில்தான் ஏகாதிபத்தியத்தின் உயிர் நாடி உள்ளது. Continue reading
