மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


December 2022

  • பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தின் நூறாண்டுகள்

    தொடக்ககால கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட பணிகளில் பெரும்பாலானவை சமூக சீர்திருத்தங்களுக்காகவும் தலித்துகளின் விடுதலைக்காகவுமான சாதிய எதிர்ப்புப் போராட்டங்களாகவே இருந்தன. மிக அதிகமான வகையில் ஒடுக்கப்பட்டுவந்த சாதிகளைச் சேர்ந்த பெண்களிடையே இது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், மேல்மட்ட சாதிகளிடையே பெண்களின் அவமானகரமான அந்தஸ்து குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. கேரளாவில் நம்பூதிரிகளிடையே இ எம் எஸ் தலைமையிலான இயக்கம் அவர்களிடையே பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. Continue reading

  • புனையப்படும் பொய் ‘வரலாறு’!

    அறிவியல்பூர்வமான, மதச்சார்பற்ற கல்விக்கு, வகுப்புவாதக் கண்ணோட்டத்துடனான எதிர்ப்பும், தாக்குதலும் துவக்கத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து வந்து கொண்டிருந்தது.  ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங் எனப்படுகிற ஆர்எஸ்எஸ் அமைப்பு, ஒரு தனியார் இராணுவம் போலச் செயல்படுவதையும், ஹிட்லர் காலத்திய ஜெர்மனியின் நாஜிக்கள் போன்று அவர்களது பயிற்சிகள் அமைந்திருப்பதையும் குறித்து ஜவஹர்லால் நேரு ஆரம்ப நாட்களிலேயே எச்சரிக்கை விடுத்தார். Continue reading

  • தனியார் சொத்துடைமை முடிவாக மறைந்துபோவதால் ஏற்படும் பின்விளைவுகள் எவை?

    மக்கள், உற்பத்தியின் தனியொரு பிரிவுக்கென ஒதுக்கப்பட்டு, அதிலேயே பிணைக்கப்பட்டு, அதனால் சுரண்டப்பட்டு, இன்று இருப்பதைப் போல இனிமேலும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் மற்ற எல்லோரின் செலவில் தங்கள் ஆற்றல்களுள் ஒன்றை மட்டுமே வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். Continue reading

  • சோசலிசம் இன்று !

    முதலாளித்துவச் சுரண்டல் உச்சம் தொட்டிருக்கும் இன்றைய ஏகாதிபத்திய கட்டத்தில் இருந்து, ஒரு மனிதர் இன்னொருவரை சுரண்டாத, ஒரு நாடு மற்றொரு நாட்டை சுரண்டாத சோசலிச அமைப்பை நோக்கி பயணிப்பதற்கான போராட்டமே, சோசலிசத்திற்கான போராட்டம் ஆகும். இந்த போராட்டம் கடுமையானது. மிக அவசியமானது. Continue reading

  • ‘திராவிட மாடல்’ நூல் விமர்சனம்: சர்ச்சைகளும், விடுபடலும் …

    உயர்கல்வி நிலையங்கள் பலவும் தனியாரிடமே உள்ளன. உயர்கல்வியைத் தனியார்வசம் விட்டுவிட்டு, அரசு தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்துகிறது (கல்விக்கான அரசின் செலவு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்). கல்வியின் தரம் குறைவாக இருப்பதால் அது பட்டியலின மக்களின் மீது பாரபட்சமான வகையில் தாக்கம் செலுத்துகிறது. அது குறித்து இந்த அத்தியாயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்… Continue reading

  • கீழவெண்மணித் தீயும் கூலிப் போராட்டமும்

    ஜாதிய சமூகக் கொடுமைகளை எதிர்த்து, மிதிபட்டு, அடித்தட்டில் கிடந்த மக்களை விடுவித்து, மனிதனாக்கி, பண்ணையாளும் ஊராட்சித் தலைவனாக வர முடியும் என்று உயர்த்தி, ஒரு சமூகம் மதிக்க வேண்டிய, மதிக்கக்கூடிய, மனிதனாக உயர்த்தியிருக்கிறது செங்கொடி. இயக்கம் இருக்கும் எந்த கிராமத்திலும் ஜாதியின் பெயரால் ஏழைகள் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. Continue reading

  • சமய வகுப்புகளும் இந்துத்துவ அணிதிரட்டலும்: கன்னியாகுமரி ஒரு ஆய்வு

    கன்னியாகுமரி மாவட்டம் மதரீதியாகப் பிளவுபட்டிருந்த 1980களில் இந்து தேசியவாத அமைப்புகள் இந்து ஒற்றுமை என்ற உணர்வினையூட்டி இந்து வாக்கு வங்கியை உருவாக்கின. விவேகானந்தா ஆசிரமம் சமய வகுப்புகளில் காட்டிய செயல்திறன் மிக்க ஈடுபாடு இதற்கு  உதவியது. சமய வகுப்புகள் வெற்றி பெற முதன்மைக் காரணம், மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க அளவிலான கிறிஸ்தவ மக்கள் தொகையே ஆகும். Continue reading