March 2022
-
2022 ரஷ்ய – உக்ரைன் போர்:ஒரு பார்வை!
போர் என்பது எப்படியாக இருந்தாலும், எங்கே நடந்தாலும், அது மனித உயிர்களைப் பலி வாங்குகிறது. அரும்பாடுபட்டு உருவாக்கிய உற்பத்தி சாதனங்களும் வளங்களும் இமைப்பொழுதில் அழிக்கப்படுகின்றன. போரில் ஈடுபடும் தேசங்களில், உழைக்கும் மக்களே கடும் இழப்புக்கு ஆளாகின்றனர். இது வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த இரு தேச உழைப்பாளிகளுக்கும் பொருந்தும். ஆனால், சுரண்டும் வர்க்கங்கள் போர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவற்றில் இருந்து விலகி நின்று போர்களை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். Continue reading
-
தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்… அரசியல் போராட்டமே!!!
முதலாளித்துவ உற்பத்தி முறையில், சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை, தொழிலாளி வர்க்கம் அந்தந்த வளர்ச்சிக்கு ஏற்ப நடத்தியுள்ளது. வேலை நேர குறைப்பு உள்ளிட்ட, பல உரிமைகளை வென்றிட உதவியது. 1838 – 1848 காலங்களில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் தொழிலாளர் மீதான வேலை நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்கள் நடந்தன. பிரிட்டிஷ் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்த போராட்டங்கள், புரட்சிகர சக்திகளின் முன்னெடுப்பால் நடந்தது என அரசியல் ஆய்வாளர்கள்… Continue reading
-
2022-23 ஒன்றிய ‘பட்ஜெட்’ : ஒரு மதிப்பீடு !
வரிப்பகிர்வு மூலமும், வேறு வகைகளிலும் மாநிலங்களுடன் ஒன்றிய அரசு வளங்களை பகிர்கிறது.பொதுவாக, ஒன்றிய அரசுகள் இப்பகிர்வுகள் வாயிலாக தங்களது அதிகாரத்தை செலுத்த முனைகின்றன. பாஜக ஆட்சியில் இந்த முனைவு பெரிதும் அதிகரித்துள்ளது. அனைத்து அதிகாரங்களையும் மாநிலங்களிடமிருந்து பறித்து, மையப்படுத்துவது என்பது பாஜக அரசின் அணுகுமுறையாக இருந்துவருகிறது. Continue reading
-
இந்தியாவில் அதிகாரப் பரவலாக்கமும், கூட்டாட்சி அமைப்பும்

ஒன்றிய அரசுகளுக்கு என்று சில அதிகாரங்களும், மாநில அரசுகளுக்கு என்று சில அதிகாரங்களும் அதனுடன் மூன்றாவதாக பொது (concurrent) பட்டியலும் இருக்கிறது. பொதுப்பட்டியலில் ஒன்றிய அரசும் சட்டங்களை கொண்டு வரலாம். மாநில அரசுகளும் சட்டங்களை கொண்டு வரலாம். ஆனால் ஒன்றிய அரசின் அதிகாரமே இறுதியில் செல்லுபடியாகும். Continue reading
-
சமூக ஒடுக்குமுறையும் இடது ஜனநாயக திட்டமும்
ஒன்றிய அரசின் சாதிய மதவெறி கொள்கைகள், மாநில உரிமைகள் பறிப்பு, பொருளாதார சுரண்டல் போன்றவற்றை எதிர்த்த போராட்டங்களில் மாநில முதலாளித்துவ கட்சிகளை இணைத்துக் கொள்ள வேண்டும். பெரு முதலாளி வர்க்க பிரதிநிதிகளான பாஜக, காங்கிரசையும், மாநில முதலாளித்துவ கட்சிகளையும் சமப்படுத்தி பார்க்கக்கூடாது Continue reading
-
இந்திய வர்க்கங்களின் நிலைமையில் மாற்றமும், கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியதும் !

கொல்கத்தா பிளீனம் ஆவணத்தில் இருந்து, இந்தியாவின் ஊரக மற்றும் நகர்ப்புற சூழலில் நவ-தாராளமய காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு தக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விளக்கும் பகுதிகள் சுருக்கமாக வழங்கப்படுகின்றன Continue reading
