January 2022
-
மார்க்சிய தத்துவ போராட்டத்தை முன்னெடுக்கும் வழிமுறைகள் !

மக்களிடத்தில் அரசியல் தத்துவார்த்த இயக்கம் நடத்துவது மிகவும் முக்கியமானதாகும். கட்சி உறுப்பினர்களின் தத்துவார்த்த புரிதலை உயர்த்துவது அணிகளுக்கு ஊக்கம் கொடுத்து கட்சிக்கு வலிவும் பொலிவும் கொடுக்கும். Continue reading
-
காந்தியும் மதமும்

காந்தியின் சமூக, பொருளாதார கருத்துக்கள் அனைத்தும் மதக் கண்ணோட்டம் சார்ந்த நெறிமுறைகள் அடிப்படையில் அமைந்துள்ளன. ஒழுக்கம், நேர்மை, உண்மைத்தன்மை போன்ற நெறிகளை அவர் இந்து மத நோக்கில்தான் வலியுறுத்தினார். இந்து மதம் மீது அவர் கொண்டிருந்த பற்றுடன் இணைந்ததாக அவரது சமூக, அரசியல் கருத்துக்கள் அனைத்தும் அமைந்துள்ளன. மதங்களுக்கிடையே சமத்துவமும் பன்முகத் தன்மையும் நிலவுகிறது என அவர் கருதியதால், அதற்கேற்ப இந்து மதம் பற்றிய விளக்கங்களை அவர் பதிவு செய்துள்ளார். Continue reading
-
நூல் விமர்சனம்: திராவிட மாடல் (2021)

நூறு ஆண்டு கால திராவிட அரசியலையும், சமகால தாக்கத்தையும் ஒரு இயக்கத்தின் கீழ் இந்த புத்தகம் அளிக்கின்றது. இதன் மூலம் தமிழகம் கடந்த பத்து ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றம் அனைத்திற்கும் மொத்த திராவிட இயக்க வரலாற்றையும் காரணி ஆக்குகின்றது. ஆனால், சமூக மாற்றத்தை கொள்கையாக கொண்ட திராவிட இயக்கம், பரந்துபட்ட நில சீர்திருத்தத்திற்கு பல முறை வாக்குறுதி அளித்த போதும் அதை நிறைவேற்றாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. Continue reading
-
சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஆணும், பெண்ணும்!

கேரள மாநிலத்தில் வரதட்சணை, குடும்ப வன்முறைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பெண்ணிய நவ கேரளம் இயக்கத்தை ஒட்டி, மார்க்சிய வார இதழான ‘சிந்தா’வில் கேரள மாநில முதல்வரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் எழுதிய கட்டுரை… Continue reading
-
COP26 மாநாட்டின் உண்மைப் பின்னணி !

குறைந்த கார்பன் வெளியேற்றத்துடன் கூடிய வளர்ச்சி என்ற திட்டத்தை முன்னெடுத்து, புவி வெப்பமாதலின் அச்சுறுத்தலுக்கு எதிராக தனது உரிய பங்கை ஆற்றிக்கொண்டே இந்தியா, உலக கார்பன் பட்ஜெட்டில் தனது நியாயமான பங்கினை பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான உத்திகளை வகுக்க வேண்டும். சுய சார்பான உற்பத்தி துறை வளர்ச்சி என்ற இலக்கில் சமரசத்திற்கு இடம் இல்லை. Continue reading
-
வ.உ.சி: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக நீதிக்கான குரலும்

ஒரு வழக்கறிஞர்; விடுதலைக்குப் போராடக் கூடிய ஒரு அரசியல் போராளி; ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்; தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர் என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து விட்டு வ.உ.சி க்கு சொல்ல முடியாத கொடுமைகள் இழைக்கப்பட்டன. வ.உ.சி.க்கு இழைக்கப்பட்ட கொடுமையானது, அவர் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் என்பது மட்டுமல்ல; மாறாக, இந்திய விடுதலை குறித்து அவர் கொண்டிருந்த மாறுபட்ட அணுகுமுறையும் காரணமாகும். Continue reading
