மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


September 2021

  • ஏ.நல்லசிவன் நூற்றாண்டு : போராட்ட வாழ்க்கை தரும் பாடம் !

    வர்க்க-வெகுஜன அமைப்புகளை வளர்த்திடாமல் கட்சியை பலப்படுத்திட  முடியாது என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவார். கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வர்க்க-வெகுஜன அமைப்பில் வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார். செய்ய வேண்டியது என்ன? நூலில் இருந்து பல அம்சங்களை தோழர் ஏ.என். அடிக்கடி மேற்கோள் காட்டுவார். பின்தங்கிய உழைப்பாளி மக்களை வர்க்க-வெகுஜன அமைப்புகளில் சேர்த்து, அவர்களுடைய கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்க வைத்து, அதனூடே கம்யூனிசக் கொள்கையை அவர்களுக்குப் பயிற்றுவித்து அவர்களைக் கட்சிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை… Continue reading

  • இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல…

    வரலாற்று ரீதியாக ஒரு நிறுவனரால் தொடங்கப்பட்டு அதன் பிறகு ஒரு நேர்க்கோட்டு வகையில் உருவான ஆபிரஹாமிய வகைப்பட்ட மதங்களில் இருந்து (அதாவது யூத மதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகியவை ஆபிரஹாம் என்பவரின் வம்சாவழியாக வந்தது என்ற கருத்தை வலியுறுத்துவது) முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இந்து மதம் இருந்து வந்தது என்பதை நாம் இங்கு அங்கீகரிக்க வேண்டியது அவசியம். இந்து மதத்தின் உள்ளார்ந்த அம்சமான பன்முகத் தன்மை மற்றும் பன்முக வாதம் ஆகியவற்றுக்குப் பதிலாக ஒற்றைக் கடவுள் வடிவத்தை… Continue reading

  • தோழர் உமாநாத்: வர்க்கப் போராட்டக் களத்தின் விளைச்சல்

    சென்னை சதி வழக்கில், சிறைத் தண்டனையிலிருந்து விடுதலை பெற்ற பின் கட்சி அவரை தொழிற்சங்க பணிக்கு அனுப்பியது. அரைப்பட்டினியுடன்தான் பணிகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும். தொழிலாளர்களை சங்கமாக்குவதும் எளிதான காரியமாக இல்லை. காவல்துறை அடக்குமுறையும், முதலாளிகளால் ஏவப்படும் சமூக விரோதிகளின் தாக்குதல் உட்பட எதிர்கொண்டு, கோவை மண்ணில்தான் அவர் தொழிற்சங்க பால பாடத்தை கற்றார். Continue reading

  • மோடி அரசின் பாசிச போக்குகள்: டோக்ளியாட்டி தரும் வெளிச்சத்தில் ஒரு பார்வை

    பாசிசமானது ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு வடிவம் எடுக்கும் . ஒரே நாட்டில் கூட அந்தந்த கால கட்டத்திற்கேற்ப அதன் நோக்கங்கள், அணுகுமுறைகள் மாறும். ஏகபோக முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொள்ளும் பொழுது, பூர்ஷ்வா சக்திகள் சில “முதலாளித்துவ ஜனநாயக” நெறிமுறைகளை கைவிட்டுவிட்டு பாசிசத்தின்பால் திரும்பும் என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் டோக்ளியாட்டி விளக்குகிறார். Continue reading

  • இந்தியாவிற்கான கல்விக் கொள்கை எப்படி அமைய வேண்டும்?

    இந்தியாவின் கல்வி முறை சிறந்த முறையில் செயல்பட்டிருக்குமானால் இந்த முக்கிய அளவுகோள்களில் இந்தியா சிறப்பான இடத்தை பிடித்திருக்க வேண்டும். உண்மை என்னவென்றால் இந்த கொள்கைகளில் பெரும்பலானவை ஒரே மாதிரியான கருத்துகளையே திரும்பத் திரும்ப முன்வைத்தன. மும்மொழி கொள்கை/ மையப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள்/ தேசியமயமாக்கப்பட்ட ஒழுங்குமுறை / பொதுவான ஒரே மாதிரியான கல்விமுறை/ கல்வி கட்டமைப்பு மேம்படுத்துதல் போன்ற கருத்துகளையே முன்வைத்தன. Continue reading