May 2019
-
மே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …

வரலாற்று சிறப்பு மிக்க தொழிலாளர் தினத்தை உலகமே உற்சாகமாக கொண்டாடியது. இந்த கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் உள்ள தொழி லாளர்களின் போராட்டக்கனலின் வெளிப்பாடாகவே எழுந்து நிற்கிறது. ஏகாதிபத் தியங்களின் லாப வெறி உழைக்கும் மக்களை மேலும், மேலும் சுரண்டிக் கொழுக் கிறது. எப்போதும்போல் தொழிலாளி வர்க்கமும் அதற்கேற்ற வகையில் எதிர்த்து நிற்கிறது. Continue reading
-
ஏகாதிபத்திய தாக்குதலும் உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்
நவீன தாராளமயமாக்கலின் தோற்றுவாய்க் குப் பின், முதன் முறையாக அரசியலும், அடிப் படை வர்க்கங்களான தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர் மற்றும் ஏழை விவசாயிகளின் இயக்கங்களும் மையப்புள்ளியாக வெளிப்பட்டுள்ளன. வாலிபர், மாணவர், மாதர், சூழலியலாளர்கள், தலித், பழங்குடியினர், சிறு பான்மையினர், அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவினர்களின் முற்போக்கு சமூக இயக்கங்கள் இந்த நீரோட்டத்தில் இணைகிண்றனர். Continue reading
-
மீண்டு வருமா வெனிசுவேலா?

சோசலிசமே தீர்வு என்கிற கருத்தும் மக்களிடத் தில் அவ்வாட்சி உருவாகிற வரையிலும் அழுத் தமாக சொல்லப்படவுமில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்ததுமே சாவேசும் அவரது அரசும், முதலாளித் துவத்தின் காலடியில் மண்டியிட்டெல்லாம் எவ்வித சமூக மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என்றும், சோசலிசப் பாதையை நோக்கி நடைபோடுவது மட்டுமே சரியான தீர்வை நோக்கை அழைத்துச் செல்லும் என்றும் பேசத் துவங்கினர். Continue reading
-
இட ஒதுக்கீடு: சிபிஐ(எம்) அணுகுமுறை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் (மக்களவையிலும், மாநிலங்களவையிலும்) அனைத்துப் பிரிவினருக்கும் தனியார் துறையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான இட ஒதுக் கீட்டினை விரிவாக்க வேண்டுமென சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தனர். ஆனால் மோடி அரசு அதை நிராகரித்து விட்டது. Continue reading
-
இந்தியாவில் வேலையின்மை நெருக்கடி
வேலையின்மை பிரச்சினையின் இன்றைய அளவு மற்றும் தன்மை ஆகியவற்றுக்குள் செல்வ தற்கு முன், வேலையின்மையை கணக்கிடுவதில் உள்ள சில நுட்பமான அம்சங்கள் பற்றி பார்ப் போம். முதலில், உழைப்பு படை என்பதன் இலக்கணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். Continue reading
-
இயக்கவியல் விதி: எதிர்மறைகளின் ஒற்றுமை இருப்பை சாத்தியமாக்கும்
பொருளில் உள்ள எதிர்மறை அம்சங்களின் உறவிலுள்ள ஒற்றுமை என்ற தன்மை பொருளின் இருப்பை சாத்தியமாக்குகிறது. எதிர்மறை அம் சங்களின் உறவில் உள்ள முரண்பாடு என்ற அம்சம்தான் மாற்றத்தை சாத்தியமாக்குகிறது. Continue reading
-
தேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …

தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் நூற்றாண்டை முன்னிட்டு (19.11.1918 – 8.5.1993) சமீபத்தில் சென்னையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது குறித்தும், அதில் முன்வைக்கப்பட்ட கருத்துரைகள் வரவிருக்கும் மார்க்சிஸ்ட் இதழில் பிரசுரிக்கப்படும் என்றும் சென்ற இதழில் அறிவித்திருந்தோம். கட்டுரைகளின் அளவு அதிகமாக இருந்தாலும், கட்டுரையின் உள்ளடக்கம் கருதி முழுமையாக கொண்டு வரும் நோக்கோடு இந்த இதழ் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் நூற்றாண்டு சிறப்பிதழாக கொண்டுவரப்படுகிறது. Continue reading
-
ஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்

(ஏ ஆர் சிந்து, மத்திய குழு உறுப்பினர், சி பி எம்) தமிழில்: ஜி.பாலச்சந்திரன் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கம், வாழ்வின் நாள்தோறுமான மூலதனத்தின் தாக்குதலையும், அரசியல் ரீதியான ஏகாதிபத்திய தாக்குதலையும் தீவிரமான வர்க்க போராட்டத்தால் எதிர்கொண்ட வளமான அனுபவத்துடன் இந்த மே தினத்தை – சர்வதேச தொழிலாளர் தினத்தை – மிகுந்த உற்சாகத்துடனும், வர்க்க பெருமிதத்துடனும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய தாக்குதலும், உலகளாவிய எதிர்ப்பும்: முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியின் பின்புலத்தில் ,சிஐடியு 2018 நவம்பரிலேயே கீழ்வருமாறு… Continue reading
