June 2013
-
இந்தியாவின் சமகால வேளாண் நெருக்கடி!
இந்தியா விடுதலை அடைந்த பொழுது விவசாயம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது. நிலப்பிரபுத்துவச் சுரண்டலும் அதன் மீது தொடர்ந்த காலனீயச் சுரண்டலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. 1900 முதல் 1950 வரையிலான ஐம்பது ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு அரை சதவிகிதம் என்ற அளவில், கிட்டத்தட்ட தேக்க நிலையில் இருந்தது. Continue reading
-
இந்திய – சீன எல்லைப் பிரச்சனை !
கடந்த சில பல வாரங்களாகவே இந்திய ஊடகங்கள் இந்தியா மீது சீனா படையெடுப்பு, எல்லையில் அத்துமீறல், இந்திய பகுதிகளை ஆக்கிரமிப்பு என பல தலைப்புகளில் செய்திகளை வெளியிட்டு வந்தன. தேசிய மாநில கட்சிகளின் அரசியல் தலைவர்களும் சீனாவுக்கு பதிலடி தர வேண்டும் என்று ஆக்ரோஷமாக அறிக்கை விட்டனர். ஆளுங் காங்கிரஸ் கட்சி, ஒரு பக்கம் எதிர்கட்சிகளை சமாளிக்க சீனாவுக்கு சவால் விடுவது போல் பேசிக்கொண்டே மறு பக்கத்தில் இப்பிரச்சனையை சுமூகமாக தீர்க்கவே முயற்சித்தது. Continue reading
-
தோழர் பி. சுந்தரய்யாவின் போதனை “துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமான ஆய்வு“

நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நவீன இந்தியாவை உருவாக்கியதில் மட்டுமல்ல எதிர்காலத்தில் சோசலிஸ்ட் இந்தியாவை நோக்கி நாம் முன்னேறுவதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பை அமைத்துக் கொடுத்ததிலும் அவரது வாழ்விலும் பணியிலும் அவர் மேற்கொண்ட நான்கு மிக முக்கியமான அம்சங்கள் Continue reading
-
இலக்கியம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம்

வரலாறு பற்றிய பொருளியல் வாதக் கோட்பாட்டின் படி வரலாற்றை இறுதியாகத் தீர்மானிக்கிற காரணி மெய்யான வாழ்வை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்வதுதான். இதற்கு மேல் நானோ, மார்க்சோ ஒரு பொழுதும் சொன்னதில்லை. இதையே, வரலாற்றைத் தீர்மானிக்கிற ஒரே காரணி பொருளாதாரக் காரணிதான் என எவரேனும் திரித்துக் கூறுவாரேயானால் அவர் இந்தக் கோட்பாட்டையே அர்த்த மற்றதாக, புரியாததாக, பைத்தியக்காரத்தனமானதாக ஆக்கிவிடுகிறார். Continue reading
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!

“மார்க்ஸ் மற்றும் எங்கெல்சை அறிந்து கொள்ளும் இந்த ஆய்வு அவர்கள் உருவாக்கி செயல்படுத்திய விஞ்ஞான ரீதியான முறையிலேயே பயன்படுத்தி செய்யப்படுவதாகும். ஒவ்வொரு தனி மனிதனும் குறிப்பிட்ட சமூக சூழலின் படைப்பே ஆவான். Continue reading
-
சிறுபான்மையினர் செல்வந்தர் ஆவதை நாங்கள் ஒத்துக் கொள்ளமாட்டோம்! பீட்டர் மெர்டென்ஸ் பெல்ஜியத் தொழிலாளர் கட்சியின் தலைவர்
அக்டோபர் 14,2012-ல் நடந்த நகராட்சி மற்றும் பிராந்திய மன்றங்களின் தேர்தல்களில், பெல்ஜியத் தொழிலாளர் கட்சி கணிசமான வெற்றிகளைக் கண்ட பிறகு பல்வேறு நிகழ்வுகள் நடந்துவிட்டன. கட்சி நிலையான வளர்ச்ச்சியை அடைந்தது. கடந்த வருடம் இரண்டாயிரம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். Continue reading
