மீண்டு வருமா வெனிசுவேலா?

சோசலிசமே தீர்வு என்கிற கருத்தும் மக்களிடத் தில் அவ்வாட்சி உருவாகிற வரையிலும் அழுத் தமாக சொல்லப்படவுமில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்ததுமே சாவேசும் அவரது அரசும், முதலாளித் துவத்தின் காலடியில் மண்டியிட்டெல்லாம் எவ்வித சமூக மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என்றும், சோசலிசப் பாதையை நோக்கி நடைபோடுவது மட்டுமே சரியான தீர்வை நோக்கை அழைத்துச் செல்லும் என்றும் பேசத் துவங்கினர்.

தடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா!

கியூபாவின் ராணுவ சர்வாதிகாரி படிஸ்ட்டா அரசை வீழ்த்திடும் நோக்கில், மான்கடா படைத் தளத்தின் மீது ஃபிடல் தலைமையிலான புரட்சிகர குழு தாக்குதல் துவக்கிய நாள் 1953ம் ஆண்டு ஜூலை 26. 1959 ஜனவரியில் புரட்சி வெற்றி பெற்று, தன்னை சோசலிச நாடாக பிரகடனம் செய்த நாள் முதல், கியூபாவின் தேசிய விடுமுறை தினமாக ஜூலை 26, அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அரசு அலுவலகங்களில் இனிப்பு வழங்கும் விழாவாக காண இயலவில்லை. இல்லம் தோறும் இனிப்பு … Continue reading தடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா!

புதிய மனிதன் ஹியுகோ சாவேசும் பொலிவேரியன் புரட்சியும்

முதலாளித்துவ அமைப்பில் ஜனநாயகம் இருக்க இயலாது. முதலாளித்துவம் என்பது அநீதி ஆட்சி செய்யும் இடமாகவும், பணக்காரர்கள் ஏழைகளுக்கெதிரான கொடுமை கள் செய்யும் அமைப்பாகவும் இருக்கிறது.. அதிகாரம் பலம் படைத்தவர்கள் பலமற்ற ஏழைகளை நசுக்குகிறார்கள். சட்டத்தின் ஆட்சி மட்டுமே அவர்களை விடுவிக்கு மென்று ரூசோ சொன்னார். உலகை ஜனநாயக சோசலிசத் தின் மூலம் மட்டுமே காப்பாற்ற முடியும். ஜனநாயகமென்பது 5 ஆண்டிற்கு ஒரு முறை வாக்குரிமை கொடுப்பது மட்டுமல்ல. அதைவிட அதிகமானது. அது ஒரு வாழ்வியல் வழி. அது மக்கள் கையில் அதிகாரத்தை கொடுப்பது. மேலை நாட்டு முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி என்று கூறப்படுகிற நாடுகளில் இருப்பதைப்போல்.பணக்காரர்களின் அரசு ஏழைகளை ஆட்சி செய்வதல்ல.