இந்தியாவில் வேலையின்மை நெருக்கடி

வேலையின்மை பிரச்சினையின் இன்றைய அளவு மற்றும் தன்மை ஆகியவற்றுக்குள் செல்வ தற்கு முன், வேலையின்மையை கணக்கிடுவதில் உள்ள சில நுட்பமான அம்சங்கள் பற்றி பார்ப் போம். முதலில், உழைப்பு படை என்பதன் இலக்கணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மே தினத்தின் புரட்சிகரப் பாரம்பரியம்

உலகெங்கும் உள்ள உழைப்பாளர்களின் ஒருமைப்பாட்டையும் போராட்ட உணர்வையும் மே தினக் கொண்டாட்டாங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் மே தினத்தைக் கொண்டாடும் போது இந்திய பாட்டாளி வர்க்கம் ஒரு கடுமையான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்தியாவின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் உலகின் பல்வேறு பகுதியிலுள்ள பாட்டாளி மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை இந்தியப் பாட்டாளி வர்க்கமும் எழுப்பியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை பொறுத்த வரை கூலி, பணிப்பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப் பாதகாப்பு போன்றவை முக்கியமான சில பிரச்சினைகளாகும்.

பொருளாதார தத்துவத்தின் வறுமை!

வறுமையின் தத்துவம் என்று புருதோன் எழுதிய புத்தகத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் மார்க்ஸ் எழுதிய புத்தகம் தான் தத்துவத்தின் வறுமை. ஆனால், இந்தக்கட்டுரை அதை விளக்கிச் சொல்ல எழுதப்பட்டதொன்று அல்ல. இரண்டாண்டு கால ஐக்கிய முன்னணி அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு அடிப்படையாக இருக்கும் தத்துவப் பார்வையை விமர்சன ரீதியில் ஆய்வு செய்கிறது.