இந்திய விடுதலைப் போராட்டத்தின் வர்க்கத் தன்மை

இந்திய விடுதலை என்பது ஆங்கில ஏகபோக முதலாளித்து வர்க்கத்திற்கும், இந்திய நிலப் பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடந்த ஒரு சமரசம் ஆகும். இந்திய முதலாளிகள் சுதந்திரத்திற்குப் பிறகும் நாட்டின் பொருளாதார, அரசியல், சமுதாய, கலாச்சார வளர்ச்சியை முதலாளித்துவப் பாதையிலேயே உருவாக்க விரும்பினர். அதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பாதையிலேயே நிலப்பிரபுத்துவத்தையும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிறுவனங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அப்பொழுது மேலோங்கியிருந்த பிற்போக்கான ஆதிக்க வர்க்கங்களின் ஆட்சி அமைக்கப்பட்டது.

நாணய மாற்றுதலை – தறிகெட்டு அலையவிடலாமா?

நாணய மாற்றுதலில் (மணி - கன்வெர்ட்டபிலிட்டி) தாராள மயத்தை முழுமையாகப் புகுத்த மீண்டும் ஒரு முயற்சி நடக்கிறது. இதனை ஒட்டி ஒரு சூடான சர்ச்சை அரசாங்க மேல்மட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சர்ச்சைகளில் பங்கு பெறுவோர் அமைச்சர்கள், மேல்மட்ட அதிகாரிகள், அரசிடம் சம்பளம் பெறும் நிபுணர்கள், வங்கிகளின் தலைமைப் பீடங்கள், இவர்களோடு எல்லா வகையிலும், நெருக்கமாக குடும்பப் பாசத்தோடு இருக்கும் பெரு முதலாளிகளிடம் சேவகம் செய்யவே பிறப்பெடுத்த கொழுத்த சம்பளம் பெறும் மூளைகள் இவர்கள் எல்லாம் ஒரு பக்கமாக நிற்கிறார்கள்.