நவீன தொழிலாளர்களும், கம்யூனிஸ்ட் அறிக்கையும்

மார்க்ஸ் “பொருளாதார போராட்டங்களை” புரட்சிகர அரசியல் உணர்வு மட்டத்துடனோ அல்லது சோசலிசத்துடனோ தொடர்புடையது அல்ல என்று ஒரு போதும் சொல்லவில்லை. மார்க்சைப் பொறுத்த வரையில், “பொருளாதாரப் போராட்டங்கள்”தான் ஒரு பிரத்தியேகமான, பரந்துபட்ட அரசியல் உணர்வினை உருவாக்குவதற்கு மையமான முக்கிய அம்சமாகும்.

எங்கெல்ஸ் என்ற புரட்சியாளன் !

இந்தக் கட்டுரை கார்ல் மார்க்ஸ் – எங்கெல்ஸ் இடையிலான அறிமுகத்திலிருந்து தொடங்குகிறது. அவரின் மிக முக்கியமான படைப்புகள் மற்றும் பங்களிப்புகளை நமக்கு கவனப்படுத்துகிறது

தேர்தல்கள் பற்றி மார்க்சும் எங்கெல்சும்

ஒரு வர்க்கம் என்ற வகையில் அதன் அளவு எவ்வளவு சிறியதாக இருப்பினும் சரி, அதன் வளர்ச்சி எவ்வளவு குறைவாக இருந்தபோதிலும் சரி, பாட்டாளி வர்க்கம் தன்னை முதலில் ஓர் அமைப்பாகவும், பின்னர் ஓர் அரசியல் கட்சியாக வும் அணிதிரட்டிக் கொள்ள வேண்டும்

கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் !

இரா. சிந்தன் கீழ் வெண்மணியில் நிகழ்த்தப்பட்டபடுகொலைகள், தனித்த சம்பவம் அல்ல. அது கீழத் தஞ்சையில் (இப்போதைய நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில்) கூர்மையடைந்திருந்த வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடே. பிரிட்டிஷ் காலனியாதிக்க காலமாக இருந்தாலும், இந்திய விடுதலைக்கு பிறகான சூழலிலும், மாநிலத்தில் ஆட்சி மாறிய பின்னணியிலும், தொடரும் வர்க்கப் போராட்டத்தின் உக்கிரத்தை வெளிக்காட்டும் நிகழ்வுகளில் ஒன்றே கீழ்வெண்மணி தியாகம் ஆகும். பிரிட்டிஷ் ஆதிக்க காலம் : அப்போதைய தஞ்சாவூர் இந்திய அரிசி உற்பத்தியில் சுமார் 30 சதவீதத்தை கொடுத்து வந்தது. … Continue reading கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் !

சமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு

ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் தத்துவங்களையும் ஆதிக்கம் புரியும் அரசியல் அதிகாரத்தையும் எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் புதிய மாற்றங்களினால் பழைய ஆதிக்க வர்க்கங்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே அவர்களது தத்துவங்களை எதிர்ப்பது அவசியமாகிறது.

லெனினின் பார்வையில் அரசும் புரட்சியும் …

- ஜி.செல்வா ரகசிய உத்தரவு வந்திருக்கிறது. லெனின் யார் தெரியுமா? அவர் இங்கே மறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிடிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கெள்ளுங்கள். லெனினைப் பிடித்தால் பெரும் பரிசுகள் கிடைக்கும். இது, ரஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக அப்போதிருந்த பின்லாந்து நாட்டின் கவர்னர் ஜெனரல் தனது தலைமை காவல்துறை அதிகாரியான ரேவியேவிடம் சொன்னது. உத்தரவுகளை உள்வாங்கிக் கொண்டு ரேவியே நேரடியாக ரயில் நிலையம் செல்கிறார். அங்கிருந்த தபால்காரரிடம் கடிதங்களை பெற்று தனது சட்டைப்பைக்குள் செருகிக்கொள்கிறார். மளிகைக் கடைக்கு சென்று பத்து முட்டைகள், ரொட்டி, … Continue reading லெனினின் பார்வையில் அரசும் புரட்சியும் …

கூலியுழைப்பும் மூலதனமும் …

அளவு கடந்த செல்வமுடைய ஒரு சிறு வர்க்கம், சொத்து ஏதுமற்ற கூலித் தொழிலாளர்களைக் கொண்ட ஒரு பெரிய வர்க்கம் எனச் சமுதாயம் பிளவுறுவதானது, இந்தச் சமுதாயத்தைத் தன்னுடைய தேவைக்கதிக உற்பத்தியில் தானே சிக்கி மூச்சுத் திணரும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

மார்க்ஸ் பற்றி எங்கல்ஸ் – லெனின் …

மார்க்ஸ் பற்றி எங்கல்ஸ் தனது காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு நிந்திக்கப்பட்டவர் மார்க்ஸ். வெறுக்கப்பட்டவர் மார்க்ஸ்.சர்வாதிகார அரசுகளும் குடியரசுகளும் ஒருசேர அவரை வெறூத்தனர், நாடு கடத்தினர், முதலாளி வர்க்கங்கள், அவை பிற்போக்காக இருந்தாலும், அதிதீவிர ஜனநாயகவாதியாக இருந்தாலும், ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு மார்க்ஸ் மீது அவதூறுகளைப் பொழிந்தனர். இவற்றையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. தூசுகள் எனக் கருதினார்.மிகவும் அவசியம் எனக் கருதியபொழுது மட்டுமே பதில் அளித்தார். மேலும், அவர் இறக்கும் போழுது, சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிஃபோர்னியா வரை, அனைத்து … Continue reading மார்க்ஸ் பற்றி எங்கல்ஸ் – லெனின் …

வெல்வதற்கோர் பொன்னுலகம்

‘கம்யூனிஸ்ட் பிரகடனம்’ பற்றிய இந்த நூல், அதன் நூற்றைம்பதாம் ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி வெளியிடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து பிரகடனத்தின் நூற்றைம்பது ஆண்டு நிறைவு விழா உலகளாவிய அளவில் கொண்டாடப்பட்டது. மகத்தானதொரு ஆவணமாகிய கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை மறுமதிப்பீடு செய்வதற்கு, மார்க்சியத் தத்துவத்தின் சமகால நிலைமை பற்றி விமர்சனப் பூர்வமான முறையில் கூர்மையாகப் பரிசீலிப்பதற்கு, 21 ஆம் நூற்றாண்டுக்குள் நுழையும் வேளை யில் உழைப்பாளி வர்க்க இயக்கம் பயணிக்க வேண்டிய புதிய திசைவழிகளை … Continue reading வெல்வதற்கோர் பொன்னுலகம்

சாதியமைப்பு – ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள்!

இதுவரை உள்ள மனிதகுல வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே (ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயம் தவிர) என பிரகடனப்படுத்துகிறது மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை. இது இந்தியாவின் வரலாறு மற்றும் சமூக அமைப்புக்கும் பொருந்தும். உலகின் பல்வேறு நாடுகளின் சமூக அமைப்பும், வர்க்கப் போராட்டங்களும் ஒரே மாதிரியானதாக இல்லை. இந்த அம்சங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்யேகத்தன்மைகளும் பின்னணியும் உண்டு. இந்தியாவின் பிரத்யேகத் தன்மை: ஒவ்வொரு நாட்டின் பிரத்யேகத்தன்மையை சரிவர ஆய்வு செய்து புரிந்து கொண்டுதான் அந்நாடுகளின் நடைபெற … Continue reading சாதியமைப்பு – ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள்!