சிங்காரவேலரின் மார்க்சியப் பார்வை

என்.குணசேகரன் மானுட விடுதலைக்கு வழிகாட்டுகிற தத்துவம் மார்க்சியம். காரல் மார்க்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள் ஆன இன்றைய பின்னணியில் சிங்கரவேலரின் மார்க்சிய சிந்தனை தமிழக சிந்தனைப் பரப்பில் முக்கியத்துவம் வாய்ந்தததாக உள்ளது,  அது இன்றைக்கும் பொருத்தப்பாடு கொண்டதாகவும் உள்ளது. இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர், தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்ட் இயக்கப் போராளி,தொழிலாளர்     இயக்கங்களையும், தொழிலாளர் போராட்டங்களையும் தலைமையேற்று நடத்திய தலைவர் ,மிகச்சிறந்த அறிவியல் பரப்புரையாளர், சுயமரியாதை இயக்கத்தின் கருத்தியல் செயல்பாட்டாளர் என பன்முகத் தளங்களில் பணியாற்றியவர் … Continue reading சிங்காரவேலரின் மார்க்சியப் பார்வை

திரைப்பட முன்னோடி மிருணாள் சென்

எம். சிவகுமார் 2018-ம் ஆண்டு நம்மிடமிருந்து விடை பெறுவதற்கு சற்று முன்பாக வங்க சினிமாவின் மூவேந்தர்கள் என போற்றப்பட்டவர்களில் கடைசி வேந்தரான மிருணாள் சென்னும் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுக் கொண்டார். அவர் மறைவு குறித்த செய்திகளை தேசிய ஊடகங்களில் பார்த்தபோது ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. கொல்கத்தாவிற்கு வெளியே இளம் இயக்குநர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினருக்கு அவர் பற்றிய பல விவரங்கள் அவரது மறைவுக்குப் பின் வெளியிடப்பட்ட கட்டுரைகளில் இருந்துதான் தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மேற்கு … Continue reading திரைப்பட முன்னோடி மிருணாள் சென்

புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம் …

ஜி. செல்வா "அது கடினமானதல்ல, சட்டென புரிந்து கொள்ளக்கூடிய எளிமை உள்ளது அது. நீ சுரண்டல்வாதியல்லன். எனவே உன்னால் அதை  எளிதில் புரிந்துகொள்ள முடியும். அது உன் நன்மைக்கு வழி. எனவே அதைப் பற்றி நீ தெரிந்து கொள். அதனை மடமை என்போர் மடையர்கள். அது மோசம் என்போர் மோசடிக்காரர். மோசடிகளுக்கு எதிரானது அது. சுரண்டல்வாதிகள் அதனை 'கிரிமினல்' ஆனது என்பர். ஆனால் உண்மை விஷயம் நமக்குத் தெரியும். கிரிமினல் ஆன அனைத்திற்கும் அது முடிவு கட்டும். … Continue reading புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம் …

தொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி

குரல்: தேவி பிரியா ச. லெனின் “பிரபுத்துவ மீத மிச்சங்களுக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிரான எங்கள் போராட்டத்தில்,  நாங்கள் ருஷ்யாவின் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் ஒன்றுபடச் செய்வதில் வெற்றி பெற்றோம். மூலதனத்தையும், பிரபுத்துவத்தையும் எதிர்த்து விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டதுதான் எங்களுடைய வெற்றி அவ்வளவு சுபலமாக காரணமாய் இருந்தது” என்று குறிப்பிடுகிறார் லெனின். ரஷ்ய புரட்சியின் இந்த அனுபவம் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கான முக்கியமான படிப்பினையாக அமைகிறது. பிரெஞ்சு புரட்சியின் போது  " விவசாய வர்க்கம், முதலாளி வர்க்கத்தின் உதவிப்படையாக செயலாற்றியது. … Continue reading தொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி

கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் !

இரா. சிந்தன் கீழ் வெண்மணியில் நிகழ்த்தப்பட்டபடுகொலைகள், தனித்த சம்பவம் அல்ல. அது கீழத் தஞ்சையில் (இப்போதைய நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில்) கூர்மையடைந்திருந்த வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடே. பிரிட்டிஷ் காலனியாதிக்க காலமாக இருந்தாலும், இந்திய விடுதலைக்கு பிறகான சூழலிலும், மாநிலத்தில் ஆட்சி மாறிய பின்னணியிலும், தொடரும் வர்க்கப் போராட்டத்தின் உக்கிரத்தை வெளிக்காட்டும் நிகழ்வுகளில் ஒன்றே கீழ்வெண்மணி தியாகம் ஆகும். பிரிட்டிஷ் ஆதிக்க காலம் : அப்போதைய தஞ்சாவூர் இந்திய அரிசி உற்பத்தியில் சுமார் 30 சதவீதத்தை கொடுத்து வந்தது. … Continue reading கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் !

சமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு

ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் தத்துவங்களையும் ஆதிக்கம் புரியும் அரசியல் அதிகாரத்தையும் எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் புதிய மாற்றங்களினால் பழைய ஆதிக்க வர்க்கங்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே அவர்களது தத்துவங்களை எதிர்ப்பது அவசியமாகிறது.

மார்க்சிசம், தேசியம் மற்றும் அடையாள அரசியல்

இந்துத்துவ கலாச்சார தேசியத்தின் ஆதிக்கம் மற்றும் பரவலுக்கு மூலதனத்தின் ஒருங்கிணைவு மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு அதன் ஆதரவுமே காரணம். தொழிலாளி வர்க்கத்தின் மீதான இதன் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. பாரம்பரிய தொழிற் சங்கங்கள் முன்பு தொழிலாளர்கள் மத்தியிலான இந்த பிளவு பெரிய சவாலாக உள்ளது. அதே நேரம் அடையாள அரசியலுக்கும் இது வழிகோலுகிறது.

செவ்வியல் நூல்: மார்க்சியமும், தேசிய இனப் பிரச்சனையும் …

பாட்டாளிவர்க்கம் குறிப்பிடும் சுய நிர்ணயம் என்பதும் கூட ஏட்டில் உள்ள உரிமை அல்ல. பிரத்யேக நிலைமைகளுக்கு ஏற்றவாறு நடைமுறைப் படுத்த வேண்டும். எனவே, அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏற்ப சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியம். பாட்டாளி கள் குறிப்பிடும் சுய நிர்ணயம் என்பது வர்க்க நலன் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படு கிறது. எனவே, முதலாளித்துவ முழக்கங்களை அப்படியே ஏற்காது.

இந்தியாவில் சாதி முறை : ஒரு மார்க்சிய பார்வை

சாதியையும், சாதி அமைப்புமுறை யினை மார்க்சிய நோக்கில் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புரிதலின் அடிப்படையில் அதனை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை வகுத்துக்கொள்ள வேண்டும்.