கட்சி அமைப்பின் அவசியம்!

நமது கட்சியின் அகில இந்திய 18வது மாநாடு நடத்திய கட்சி அமைப்பு பற்றிய பரிசீலனை அறிக்கையின் கோடிட்டு காட்ட வேண்டிய பகுதி என்று எங்களுக்கு பட்டதை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மக்கள் மனதை கவ்விப்பிடிக்கும் ஒர புரட்சிகரமான பாட்டாளி வர்க்க கட்சியாக நாம் உயர அயராது பாடுபட வேண்டியுள்ளது. இன்றைய பலகீனத்தை களைந்து, நாடு தழுவிய அளவில் நமது செயல் விரிவடைய வேண்டுமானால், திட்டமிட்ட செயல் பாடுகள் அவசியமாகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது….

ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவது என்பது பலமுறைகளிலும் ஒரு முக்கிய நிகழ்வாகவே காண வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது அந்த நபருடைய வாழ்க்கையில் மட்டுமின்றி அவருடைய சிந்தனைகள் உலகத்தைப் பற்றியும், சமூகத்தைப் பற்றிய பார்வை அவரின் மனோ நிலை ஆகியவற்றிலும் பெரிய மாறுதல்கள் ஏற்படுகின்றன.