அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்

பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித் தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல் தான்.

பேரிடரான காலகட்டம்

நவதாராளமயம் நீடித்திருக்கும்வரை பாசிசம் வற்றாது ஜீவித்திருக்கும் நிலையில் சிக்கிக் கொண்டுள்ளோம். இது தற்கால நிலைமையை பேரிடரானதாக ஆக்குகிறது. பாசிசம், பாசிச அரசை நோக்கி நகருமாயின், அபாயம் இன்னும் வெளிப்படையானதாகிறது. அது 'தேர்தல் விளையாட்டுகளை' விளையாடும் போதிலும், வாக்குகளைப் பெற முடியாமல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அது ஒரு மாற்றாக தொடர்ந்திருக்கும், காலச் சுற்றோட்டத்தில் அதிகாரத்திற்கு வரும், அரசியல் மற்றும் சமூக 'பாசிசமயத்தை' நோக்கி சீராக முன்னேறும்.

இந்துத்துவாவை எதிர்கொள்வது எப்படி?

சடங்குகள் எனும் பெயரால் நடைபெறும் மூட நம்பிக்கையோடு கூடிய செயல்பாடுகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள வேண்டுமே தவிர அவற்றில் ஈடுபடும் மக்களோடு உறவை துண்டித்துக் கொள்ளக் கூடாது. அந்த உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் சடங்குகள் பெயரால் நடக்கும் பல அநீதிகளுக்கு இந்த சடங்குகளை கையாளும் மக்களே தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தவறான இந்த நடைமுறைகளை எதிர்க்க வேண்டுமே தவிர, அந்த மக்களிடமிருந்து மதச்சார்பற்றவாதி தனிமைப்பட்டுவிடக்கூடாது.

வரலாற்றைத் திரித்து வழங்குதல்!

பாபரை வரவேற்று முடிசூட்டிய ராணா சங்காவாக இருக்கட்டும்; ராணா பிரதாப்பாக இருக்கட்டும்; சிவாஜியாக இருக்கட்டும்;அவர்கள் முகலாயர்கள் வெளிநாட்டினர் என்பதற்காகவோ, முஸ்லீம்கள் என்பதற்காகவோ எதிர்த்துப் போரிடவில்லை. மாறாக ஏகாதிபத்திய மேலாதிக்கம் என்பதற்காகவே எதிர்த்துப் போரிட்டனர்; அல்லது ஒரு அரசருக்கெதிராக இன்னொருவர் போரிட்டனர்.

வகுப்புவாத தேசியத்தை வீழ்த்தும் மாற்று எது?

சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மாநிலக்கட்சிகள்தான் என்றபோதிலும் அவர்கள் பிராந்திய அடையாளங்களை முன்வைக்கவில்லை, உத்தரப் பிரதேசத்தில் பிராந்திய அரசியலும் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கவில்லை. தங்களை தேசிய அடையாளங்களுடன் இணைத்துப் பார்த் துக் கொள்ளும் உ.பி. மக்களுக்கு பாஜகவின் ‘இந்து தேசியவாத’ அழைப்பு ஈர்ப்பைக் கொடுத் துள்ளது. வகுப்புவாத நெடியுடன் அந்தப் பிரச் சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தேர்தலுக்கு முன்னும் பின்னும் கலவரங்கள் !

தமிழ் நாளேடுகளும் இந்த செய்திகளை வெளியிட்டனர். இது உண்மையற்ற செய்தி என்பதை, உ.பி. அரசு அமைத்த விசாரணைக்குழு மூலம் அறியலாம். பாஜக வெளியிட்ட 119 நபர்கள் கொண்ட பட்டியலில், 10 ஆண்டுகளுக்கு முன், கைரானா நகரத்தை விட வேறு நல்ல வேலை தேடி சென்ற, இடம்பெயர்ந்த 66 மனிதர்கள் உள்ளனர்

காந்தி முதல் கல்புர்க்கி வரை!

மத நல்லிணக்கத்திற்காக போராடிய மகாத்மா காந்தி, அறிவியல் கருத்துக்களை மக்களிடம் விதைத்த நரேந்திர தபோல்கர், மதச்சார்பின் மையே நமது உள்ளூர் வரலாறு, என்பதைப் பதிவு செய்த கோவிந்த் பன்சாரே, எழுத்துக்களின் மூலம் மூடநம்பிக்கைக்கு எதிரான அறிவியல் மற்றும் முற்போக்கு கருத்துக்களை வளர்த்த எம்.எம். கல்புர்க்கி என கொல்லப்படுவோர் பட்டியல் நீண்டு செல்கிறது. எல்லாவற்றிலும், துப்பாக்கி ஆயுதமாகவும், கருத்து ரீதியில் இந்துத்துவா தோட்டாக்களாகவும், காரணமாக இருந்து வருகிறது. இந்தப் பட்டியலில் பல நூறு கம்யூனிஸ்டுகளும், சாதாரண மனிதர்களும் உள்ளடங்குவர். … Continue reading காந்தி முதல் கல்புர்க்கி வரை!

மூன்றாவது அணி பேச்சுக்களும் – சரியான பாதையும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் இடது ஜனநாயக முன்னணி என்பது என்ன, அது எவ்வாறு அமைக்கப்பட வேண்டுமென்று விரிவாக விளக்குகிறது. முதலில், மக்கள் முன் ஒரு மாற்று அரசியல் வழியை மார்க்சிஸ்ட் கட்சி முன் வைக்கிறது.

இந்தியாவில் பேடண்ட் சட்டம் முக்கிய வெற்றியும் தொடரும் போராட்டமும்

ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்பு, சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான சட்டங்களில் ஒன்று இயற்றப்பட்டது. அதுதான் 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய பேடண்ட் சட்டம்.