தேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …

தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் நூற்றாண்டை முன்னிட்டு (19.11.1918 – 8.5.1993) சமீபத்தில் சென்னையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது குறித்தும், அதில் முன்வைக்கப்பட்ட கருத்துரைகள் வரவிருக்கும் மார்க்சிஸ்ட் இதழில் பிரசுரிக்கப்படும் என்றும் சென்ற இதழில் அறிவித்திருந்தோம். கட்டுரைகளின் அளவு அதிகமாக இருந்தாலும், கட்டுரையின் உள்ளடக்கம் கருதி முழுமையாக கொண்டு வரும் நோக்கோடு இந்த இதழ் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் நூற்றாண்டு சிறப்பிதழாக கொண்டுவரப்படுகிறது.

பிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)

ஜனவரி 28 ஆம் தேதி முதல் மார்க்சிஸ்ட் செயலி அப்டேட் செய்யப்பட்டு ஒலி இதழாக வெளிவருகிறது. சந்தா சேர்ப்பும், வாசகர் வட்டங்களும் துணையாக இல்லாமல் புதிய முயற்சிகளைத் தொடர்வது சாத்தியமில்லை. மார்க்சிஸ்ட் வாசகர் வட்ட தோழர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

இடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்

மக்கள் ஜனநாயக அணியை கட்டுவதை நோக்கி முன்னேறும்போது, தேவைப்படும் நேரங்களில் இடைக்கால நிலைமைகளுக்கேற்ப இடைக்கால முழக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்று கட்சியின் திட்டம் விளக்குகிறது.

இடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் பங்கு

இந்திய சமூக அமைப்பில் சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. சாதிய அமைப்பின் மீதே, இன்றைய முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளி வர்க்கமும் பிறந்திருக்கின்றன என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புரிதலாகும். கட்சி திட்டத்தின் பிரிவு 3.15, சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்பதை புரட்சிகர மாற்றத்தின் ஒரு முக்கிய பகுதியாக முன்னிறுத்துகிறது. இந்திய சூழலில், வகுப்புவாத நடவடிக்கைகளால் சிறுபான்மை மக்கள் பாகுபடுத்தப்படுகின்றனர் என்ற அடிப்படையில், விடுதலை என்பதில், சாதியம், மதவெறி போன்றவற்றிலிருந்து விடுதலை என்பதும் உள்ளடங்கும் எனவும் அது விளக்குகிறது.

தமிழகத்தில் இடது ஜனநாயக அணி …

https://ia601506.us.archive.org/20/items/LDFspecialGR/JancyRani_Feb_2018_Marxist%20tamil%20GR.mp3 ஜி.ராமகிருஷ்ணன் "கல்லாமை, இல்லாமை, அறியாமை இல்லாத ஏற்றத்தாழ்வற்ற நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் கொண்ட சுதந்திர நாடாக இந்தியா மலர வேண்டும், இதுகாறும் நாம் சந்தித்து வந்த கேடுகளை அகற்றுவது தான் விடுதலை” - நேரு 1947 ஆம் ஆண்டு, செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நேரு ஆற்றிய பிரகடன உரையின் வாசகங்கள் அவை. கடந்த 70 ஆண்டுகளில் என்ன நடந்துள்ளது?. சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் விடுதலைப் போராட்டத்தில் முன்நின்று போராடிய … Continue reading தமிழகத்தில் இடது ஜனநாயக அணி …

இடது ஜனநாயக அணிக்கான வர்க்கங்களைத் திரட்டுதல்!

தொழிற்சாலை மட்டத்தில் வர்க்க அதிகாரம் வெளிப்படையாக கோலோச்சுகிறது. தொழிற்சாலை மட்டங்களில் ஊதிய உயர்வு, சங்க உரிமை போன்ற பிரச்சனைகளில் போராட்டங்களை உருவாக்குவதும், அவற்றின் ஊடாக வர்க்க உணர்வை உயர்த்துவதும் மிக அவசியம். இதில் தொழிற்சங்கங்களில் பணியாற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.