பொது சுகாதாரம்: முதலாளித்துவ பார்வையின் குறைபாடுகள்

ஒருவருடைய சிறப்பான உடல்நலம் அமைவது என்பது அவர் தேவையான மற்றும் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் திறன், அவர் வாழ்க்கையில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பவைகளைப் பொறுத்தது ஆகும். அந்த இடம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதும் முக்கியமாகும். கொள்கைகளை தீர்மானிக்கும் இடத்தில் யார் இருக்கிறார்கள், எந்த வர்க்கம் இருக்கிறது என்பது முக்கியமாகும்.

அவனது ரத்தம் போதிய அளவு வெளியேற்றப்படவில்லை!

மிகப் பெரும் மக்கள் இயக்கங்களை முன்னெடுப்பதன் மூலமே அரசுகளை கட்டாயப்படுத்தி விரிவான பொது சுகாதாரம் மற்றும் கல்விக்கான கட்டமைப்புகளை உருவாக்கச் செய்வது சாத்தியமாகும். உணவுக்கான நீதி, நலவாழ்வுக்கான நீதி ஆகிய முழக்கங்களை முன்வைக்கும் மக்கள் இயக்கங்களை கட்டமைக்கும் தேவை உள்ளது. இதுபோன்ற ஊக்கமளிக்கும் முன்னுதாரண மக்கள் இயக்கங்கள் ஏற்கனவே நடைபெற்றிருக்கின்றன. ஆனால் கார்ப்பரேட் ஊடகங்களின் செய்தி சேகரிப்பில் அவை ஓரங்கட்டப்பட்டு மறைக்கப்பட்டுவிட்டன.

சீனாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் – சில கேள்விகளும் பதில்களும்

சோவியத் யூனியன் சிதறுண்டு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலவிய ஆட்சிகள் வலுவிழந்து உலக அளவில் சோஷலிச சக்திகளை பலவீனப்படுத்திய போதிலும்கூட, குறிப்பிட்ட சில நாடுகளில் தற்போது நீடித்து வரும் சோஷலிசமானது பொருளாயத அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு முரணான ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற உண்மை தொடர்ந்து நீடிக்கிறது.

சோஷலிச கியூபாவும் கொரோனா பெருந்தொற்றும்

ஆரோக்கியம் தொடர்பான மனிதவளம் திட்டமிட்ட அடிப்படையில் தொலைநோக்குடன் போதுமான அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கியூபா நாட்டில் மேலோங்கியுள்ள சமூக விழுமியங்கள் ஆரோக்கியத்தை மனித உரிமை எனக் கருதுகின்றன. (கியூபாவின் சோசலிச அரசியல் சாசனம் இதை உறுதிபடக் கூறுகிறது.)­ கியூபாவின் மருத்துவர்களும் செவிலியர்களும் லாப நோக்கத்தால் உந்தப்பட்டு செயல்படுவதில்லை. மாறாக, மக்கள் நலம் பேண அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தொற்றை வீழ்த்திய சீனாவின் சோசலிசம்!

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து சொந்த மக்களை பாதுகாப்பதில் அரசாங்கங்கள், பெரு நிறுவனங்கள், உள்ளூர் சமூகம் மற்றும் ஊடகங்களுடைய செயல்பாடுகளை பற்றிய ஆய்வினை சிங்கப்பூரின் இரண்டு முன்னணி ஆய்வு நிறுவனங்கள் நடத்தினார்கள். (Singapore’s leading social research agency Blackbox Research and technology company Toluna) 23 நாடுகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் முதல் இடத்தினை சீனமும், இரண்டாம் இடத்தை வியட்நாமும் பிடித்திருந்தன. ஏகாதிபத்திய நாடுகள் இந்த பட்டியலில் 50 புள்ளிகளைக் கூட பெற முடியாமல் பின் தங்கியிருக்கிறார்கள்.

கொரோனா தொற்றும் மைய அரசின் பொருளாதார அணுகுமுறையும்

மேலே கூறப்பட்டுள்ள மூன்று அம்சங்களையும் இணைத்துப் பார்த்தால் இந்தியாவின் கிராமங்களிலும் நகரங்களிலும் ஒரு ஆழமான கிராக்கி நெருக்கடி நிலவுகிறது என்பது தெளிவாகத் தெரியும். மைய அரசு இந்த நெருக்கடி இருப்பதாகவே இன்றுவரை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. மந்த நிலை பற்றி பெருமுதலாளிகள் பகிரங்கமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் -செப்டம்பர் மாதங்களில் பேசினர்.

கொரோனா பெருந்தொற்று: சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்திய பொய்கள்

சீனாவின் சிறப்பான திட்டமிடுதலும், அறிவியல் ரீதியான நடவடிக்கைகளும் உலக நாடுகள் அனைத்துமே கற்க வேண்டிய முக்கிய பாடம். அனால் இதை ஒப்புக்கொண்டால், தங்கள் நாட்டில் கம்யூனிச உணர்வு வளர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில், வலதுசாரி ஏகாதிபத்தியவாதிகள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இன்றும், பல்வேறு ஆய்வுகளும் இந்த வைரஸ் எந்த ஆய்வுக்கூடத்திலும் உருவாக்கவில்ல, இயற்கையில் உருவானதே என்று உறுதியாக கூறிய பின்னும், இந்த வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவானதாக பொய்யுரைத்து வருகிறார் ட்ரம்ப்.

எல்லை மீறிய உழைப்புச் சுரண்டலுக்கு மூலதனத்தை அழைக்கும் பாஜக!

எஸ்.கண்ணன் அரசும், முதலாளித்துவமும் பொது முடக்கத்தில் தொழிலாளர்களையும், ஜனநாயக அமைப்புகளையும் முடக்கி, தீவிரமாக செயல்படுகிறது. மார்க்ஸ் சொன்னது போல் மூலதனம் தன்னை மேலும் மேலும் அதிகரித்து கொள்வதற்கு, இந்த கொரானா கொள்ளை நோய் காலத்தையும் விட்டு வைக்கவில்லை. பொது மருத்துவம் பறிக்கப்பட்ட மக்களுக்கு, கொரானா நோய் இருக்கிறதா இல்லையா என்பதை பரிசோதித்து கொள்வதும் கூட, மிக அதிக செலவு பிடிக்கிறது. தனியார் பரிசோதனை மையங்கள் ரூ. 4500 வசூலிக்க அரசே வழிகாட்டுகிறது. தங்களின் அடிப்படை தேவை என்ன … Continue reading எல்லை மீறிய உழைப்புச் சுரண்டலுக்கு மூலதனத்தை அழைக்கும் பாஜக!

கொரோனாவும் கூட்டாட்சி தத்துவமும்

மேலோட்டமாக ஆய்வு செய்து பார்த்தாலே மோடி அரசின் அணுகுமுறை கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமானது; மாநில உரிமைகளை பறிப்பது என்பது மட்டுமின்றி, மாநிலங்களையே இல்லாததாக்குவது என்பதாக, முழுமையான அரசியல் சட்டத்துக்கு விரோதமானதாக உள்ளது என்பதைக் காண முடியும்.