இந்திய விடுதலைப் போராட்டத்தின் வர்க்கத் தன்மை

இந்திய விடுதலை என்பது ஆங்கில ஏகபோக முதலாளித்து வர்க்கத்திற்கும், இந்திய நிலப் பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடந்த ஒரு சமரசம் ஆகும். இந்திய முதலாளிகள் சுதந்திரத்திற்குப் பிறகும் நாட்டின் பொருளாதார, அரசியல், சமுதாய, கலாச்சார வளர்ச்சியை முதலாளித்துவப் பாதையிலேயே உருவாக்க விரும்பினர். அதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பாதையிலேயே நிலப்பிரபுத்துவத்தையும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிறுவனங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அப்பொழுது மேலோங்கியிருந்த பிற்போக்கான ஆதிக்க வர்க்கங்களின் ஆட்சி அமைக்கப்பட்டது.

கொரோனா தொற்றும் மைய அரசின் பொருளாதார அணுகுமுறையும்

மேலே கூறப்பட்டுள்ள மூன்று அம்சங்களையும் இணைத்துப் பார்த்தால் இந்தியாவின் கிராமங்களிலும் நகரங்களிலும் ஒரு ஆழமான கிராக்கி நெருக்கடி நிலவுகிறது என்பது தெளிவாகத் தெரியும். மைய அரசு இந்த நெருக்கடி இருப்பதாகவே இன்றுவரை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. மந்த நிலை பற்றி பெருமுதலாளிகள் பகிரங்கமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் -செப்டம்பர் மாதங்களில் பேசினர்.

அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்

பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித் தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல் தான்.

கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளின் 15வது சர்வதேச மாநாடு

ஆழமடைந்து வரும் முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர்கள் மற்றும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் பங்கும், கம்யூனிஸ்ட்டுகளின் கடமையும், ஏகாதிபத்திய மேலாதிக்கம், சர்வதேச சக்திகளின் பலா பலன்களில் மறு அணி சேர்க்கை, தேசிய இனப்பிரச்சனை, வர்க்க விடுதலை மற்றும் சோசலிசத்துக்கான போராட்டம் என்ற முழக்கத்தின் கீழ் நவம்பர் 8-10 தேதிகளில் போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளின் 15வது சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் 61 நாடுகளைச் சேர்ந்த 77 கட்சிகள் பங்கேற்றன. 14 கட்சிகள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி இருந்தன.

தோழர் ஹரிபட்….

சென்னை நகர வரலாறு பலவிதமாக எழுதப்படுகின்றன, ஆனால் சென்னை நகரை உருவாக்கும் பாட்டாளி வர்க்கத்தின் வரலாறு சரியாக சொல்லப்படாமலே உள்ளது. அப்படி எழுதப்படுமானால் தோழர் ஹரிபட்டின் வாழ்க்கை இடம் பெறும். ஹரிபட்டின் வாழ்க்கை ஒரு தனி மனிதனின் வாழ்க்கையல்ல. சென்னை நகர பாட்டாளி வர்க்க போராட்டத்தில் இரண்டற கலந்த வாழ்க்கையாகும்.

ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் தோற்றம் நமது அனுபவம்

கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஸ்தாபன கோட்பாடுகளில் முக்கியமானதாக ஜனநாயக மத்தியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் துவக்கம் ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாகும். இந்தக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் (மாநாடு) 1903 ஆம் ஆண்டு நடைபெற்றது.

கம்யூனிஸ்ட் அறிக்கை முகவுரைகளின் முக்கியத்துவம்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1847 ஆம் ஆண்டு நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கழகம் என்கிற ரகசியமாக செயல்பட வேண்டியிருந்த அமைப்பின் தத்துவார்த்த நடவடிக்கை வேலைத்திட்டமாக காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அறிக்கையின் மேன்மை, மகத்துவம், அமரத்துவம் ஆகியவைகளுக்கு அவ்வப்போது சந்தேகங்கள் எழுப்பப்படுவதும் அதன் மீது விவாதங்கள் நடப்பதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் விவாதங்களின் முடிவில் கம்யூனிஸ்ட் அறிக்கை தனது மேதாவிலாசத்தை உலகுக்கு உணர்த்தி தன்னுடைய தத்துவ மேலாண்மையை நிலைநிறுத்தியே வந்திருக்கிறது. … Continue reading கம்யூனிஸ்ட் அறிக்கை முகவுரைகளின் முக்கியத்துவம்

2வது மாநாட்டு முடிவுகளும் அரசியல் போராட்டங்களும்

இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடாக அமைந்த இரண்டாவது காங்கிரசில் விவாதிக்கப் பட்ட விஷயங்கள் விளக்கமாக எடுத்துரைக்க இங்கு வாய்ப் பில்லை. சுருங்கக் கூறின் மாநாட்டின் முக்கிய ஆவணமாக, ஆழமான விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட பொருள், ‘கட்சியின் அரசியல் நிலைபாட்டின் அடிப்படைகள்’ என்ற ஆவணமாகும். (ஆங்கிலத்தில் பொலிட்டிக்கல் தீசிஸ்) என்று அழைக்கப்படும் இந்த ஆவணம் கல்கத்தா ‘தீசீஸ்’ என்ற பெயரில் பிற்காலத்தில் பிரபலமாயிற்று. இரண்டாவதாக, முந்தைய காலகட்டத்தில் கட்சி பின்பற்றிய அரசியல் நிலைபாடுகள் அடிப்படையிலேயே ‘திருத்தல்வாத பார்வையை’ … Continue reading 2வது மாநாட்டு முடிவுகளும் அரசியல் போராட்டங்களும்

கம்யூனிஸ்ட்டுகளும் கருத்துப் போராட்டமும் – III

மகத்தான ரஷ்யப்புரட்சி உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இந்தப் புரட்சியின் வரலாற்று குறித்தோ அல்லது அந்தக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்தோ விளக்கமாக எடுத்துரைப்பது இந்தக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆயினும், அத்தகையதொரு ஆழமான பரிசீலனையானது பெரும் படிப்பினைகளை அளிக்கக் கூடியவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த காலக்கட்டத்தில் கொந்தளிப்பான நிகழ்வுகளின் போக்கில் எவ்வாறு கருத்துப் போராட்டங்கள் பெரியதோர் பங்கினை அளித்தது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதில் முக்கியமான கருத்து மோதல்களைப் பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

கம்யூனிஸ்ட்டுகளும் – கருத்துப் போராட்டமும் – II

சென்ற இதழில் (அக்டோபர் 2006) புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள ஒரு முக்கிய அம்சத்தை சுட்டிக் காட்டி யிருந்தேன். உண்மையான மார்க்சிஸ்ட் கருத்துகளுக்கு மாறுபட்ட அல்லது தவறான கருத்துக்களை முன்வைத்த பலவிதமான சித்தாந்தப் போக்குகளை கூர்மையாக அந்த அறிக்கை விமர்சனம் செய்தது பற்றி குறிப்பிட்டிருந்தோம். கற்பனாவாத சோசலிசத்திற்கும், விஞ்ஞான சோசலிசத்திற்கும் உள்ள அடிப்படையான வேற்றுமை களை எவ்வாறு மார்க்சும் - ஏங்கெல்சும் விளக்கினார்கள்? என்பதைக் கண்டோம்.