வ.உ.சி: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக நீதிக்கான குரலும்

ஒரு வழக்கறிஞர்; விடுதலைக்குப் போராடக் கூடிய ஒரு அரசியல் போராளி; ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்; தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர் என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து விட்டு வ.உ.சி க்கு சொல்ல முடியாத கொடுமைகள் இழைக்கப்பட்டன. வ.உ.சி.க்கு இழைக்கப்பட்ட கொடுமையானது, அவர் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் என்பது மட்டுமல்ல; மாறாக, இந்திய விடுதலை குறித்து அவர் கொண்டிருந்த மாறுபட்ட அணுகுமுறையும் காரணமாகும்.

சீனாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் – சில கேள்விகளும் பதில்களும்

சோவியத் யூனியன் சிதறுண்டு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலவிய ஆட்சிகள் வலுவிழந்து உலக அளவில் சோஷலிச சக்திகளை பலவீனப்படுத்திய போதிலும்கூட, குறிப்பிட்ட சில நாடுகளில் தற்போது நீடித்து வரும் சோஷலிசமானது பொருளாயத அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு முரணான ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற உண்மை தொடர்ந்து நீடிக்கிறது.

மீண்டு வருமா வெனிசுவேலா?

சோசலிசமே தீர்வு என்கிற கருத்தும் மக்களிடத் தில் அவ்வாட்சி உருவாகிற வரையிலும் அழுத் தமாக சொல்லப்படவுமில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்ததுமே சாவேசும் அவரது அரசும், முதலாளித் துவத்தின் காலடியில் மண்டியிட்டெல்லாம் எவ்வித சமூக மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என்றும், சோசலிசப் பாதையை நோக்கி நடைபோடுவது மட்டுமே சரியான தீர்வை நோக்கை அழைத்துச் செல்லும் என்றும் பேசத் துவங்கினர்.

ஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்

citu struggle

  (ஏ ஆர் சிந்து,  மத்திய குழு உறுப்பினர்,  சி பி எம்) தமிழில்: ஜி.பாலச்சந்திரன் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கம், வாழ்வின் நாள்தோறுமான மூலதனத்தின் தாக்குதலையும், அரசியல் ரீதியான ஏகாதிபத்திய தாக்குதலையும் தீவிரமான வர்க்க போராட்டத்தால் எதிர்கொண்ட வளமான அனுபவத்துடன் இந்த மே தினத்தை – சர்வதேச தொழிலாளர் தினத்தை - மிகுந்த உற்சாகத்துடனும், வர்க்க பெருமிதத்துடனும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய தாக்குதலும், உலகளாவிய எதிர்ப்பும்: முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியின் பின்புலத்தில் ,சிஐடியு 2018 நவம்பரிலேயே கீழ்வருமாறு … Continue reading ஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்

பேரிடரான காலகட்டம்

நவதாராளமயம் நீடித்திருக்கும்வரை பாசிசம் வற்றாது ஜீவித்திருக்கும் நிலையில் சிக்கிக் கொண்டுள்ளோம். இது தற்கால நிலைமையை பேரிடரானதாக ஆக்குகிறது. பாசிசம், பாசிச அரசை நோக்கி நகருமாயின், அபாயம் இன்னும் வெளிப்படையானதாகிறது. அது 'தேர்தல் விளையாட்டுகளை' விளையாடும் போதிலும், வாக்குகளைப் பெற முடியாமல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அது ஒரு மாற்றாக தொடர்ந்திருக்கும், காலச் சுற்றோட்டத்தில் அதிகாரத்திற்கு வரும், அரசியல் மற்றும் சமூக 'பாசிசமயத்தை' நோக்கி சீராக முன்னேறும்.

ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் நம் வரலாற்றுக் கடமை !

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என மார்க்சும், ஏங்கெல்சும் 150 ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய அந்த முழக்கத்தை நடைமுறைப்படுத்த, இன்றைய உலகில் ஏற்பட்டுள்ள தேவை கிளர்ந்தெழும் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களை ஒருங்கிணைப்பதில்தான் உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 5

மக்கள்ஜனநாயக புரட்சி நிலப்பிரபுத்துவம், அந்நிய ஏகபோக முதாளித்துவத்தை சமரசமின்றி எதிர்ப்பதோடு மட்டுமின்றி, அதனுடன் சேர்ந்து அந்நிய நிதி மூலதனத்துடன் சமரசம் செய்து ஒத்துழைக்கும் நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டு வைத்திருக்கும் அரசுக்கு தலைமை தாங்கும் பெரு முதலாளித்துவத்தையும் எதிர்க்கிறது

‘மூலதனம்’, ‘ஏகாதிபத்தியம்’ : சிதைபடும் கோட்பாடுகள்!

கருத்தியல் தளத்தில், உருவமற்ற “கோட்பாட்டு பிரச்சினையை” உருவம் கொண்டதொரு “ஸ்தூலமான பிரச்சினையாக” அதாவது, பன்னாட்டுக் கார்ப்பரேஷன் என்ற தளத்திற்கு மாற்றுவது என்பது, வெறும் தளமாற்றமாக இராது.

ஏகாதிபத்தியம் எதிர்கொள்ளும் நெருக்கடி…!

இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைமை தாங்கும் நிதிமூலதன உலகின் நலன்களுக்கு எதிரான மற்றும் சவால்விடும் ஒரு புதிய சக்தியை அதன் முதலாளித்துவ கட்டமைப்பிற்குள்ளேயே சந்திக்க வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் முதலாளித்துவ உலகிற்கு யார் தலைமை தாங்குவது என்ற நிலைக்கும்கூட இட்டுச் செல்லலாம்...!

முதலாளித்துவ நெருக்கடியும் சோசலிச புரட்சியும்!

நாம் இப்போது பேசுகிற நான்கு முரண்பாடுகளை பற்றி கட்சிக்குள் பெரிய அளவிலான விவாதங்களை நடத்திய பிறகு மிகத் தெளிவான ஒரு முடிவுக்கும் வந்தோம். அவை நான்கும் அடிப்படையான முரண்பாடுகள், முதன்மையானவையும் கூட. எதுவும் தாழ்ந்ததோ, உயர்ந்ததோ கிடையாது. ஆனாலும் இந்த நான்கிலும் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான முரண்பாட்டை மையமான முரண்பாடாக நாம் பார்க்கிறோம், ஏனெனில் அந்த முரண்பாட்டிற்கான தீர்வு உலகம் ஏகாதிபத்தியத்தில் இருந்து சோசலிசத்தை நோக்கி மாற்றுவதைப் பொறுத்தே இருக்கிறது. எனவே இந்த காலகட்டத்திற்கான மையமான முரண்பாடாக உள்ளது, அதே சமயம் இந்த நான்கு முரண்பாடுகளில் (மையமான முரண்பாடு உட்பட) எதுவும் எந்த நேரத்திலும் முன்னுக்கு வரலாம்.