நூற்றாண்டு கண்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சாதித்தது என்ன?

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் உள்ள சாத்தியங்களையும், வாய்ப்புகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்திரமோ, கசப்புணர்வோ உதவாது. திறந்த மனதுடன் சாத்தியங்களை ஆய்வு செய்வதன் வழியாகவே கம்யூனிஸ்டுகள் முன்னேற முடியும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, இந்திய மக்கள் நலன்களை பாதுகாக்க மிக மிக அவசியமாகும். நாடு, அநாகரீக நிலைமைக்கு பின் தள்ளப்படாமல் தடுப்பதில், கம்யூனிஸ்டுகள் தங்கள் கடமையை வீரியமாக ஆற்றிட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது …

  (குரல் : யாழினி) ஹர்கிசன் சிங் சுர்ஜித் (மார்க்சியத்தை திரித்து முன்வைக்கும்)  திரிபுவாதத்துக்கெதிரான பத்தாண்டு காலப் போராட்டம் 1964 கல்கத்தாவில் நடைபெற்ற ஏழாவது கட்சி மாநாட்டில் அதனிடமிருந்து மொத்தமாக பிரிந்து செல்வதில் முடிவடைந்தது… முதல் கட்டத்தில்  1964, ஏப்ரல் 11 அன்று ஒன்றுபட்ட (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) தேசிய கவுன்சிலிலிருந்து வெளியேறிய முப்பத்து இரண்டு உறுப்பினர்களின் அறிக்கை மிக முக்கியத்துவமுடையது.  இந்த அறிக்கை இந்தியாவில் ஒரு வலுவான கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கும், பெரும் தியாகங்களால் அது … Continue reading மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது …

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8

கட்சி திட்டத்தில் வேளாண் பிரச்சினை விஜூ கிருஷ்ணன் இந்திய மக்களின் முன் உள்ள முதன்மையான தேசிய பிரச்சினை வேளாண் பிரச்சினை தான் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாகக் கூறுகிறது. இப்பிரச்சினையின் தீர்வுக்கு புரட்சிகர மாற்றம் அவசியம். நிலப்பிரபுத்துவத்தை அழித்தொழிப்ப தும் வேளாண் தொழிலாளருக்கு நிலங்களை பிரித்துக்கொடுப்பது உள்ளிட்ட தீவிரமான நிலச் சீர்திருத்தமும் தேவை. லேவாதேவி-வணிகர் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதும், பாலின மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை அழிப்பதும் அவசியம். புரட்சியின் முதல் கட்டத்தில் நாடு விடுதலை பெற்றது. … Continue reading கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கட்சித் திட்டம்’ குறித்து …

பிராந்திய முதலாளிகளிடையே கடந்த இருபதாண்டுகளில் வளர்ச்சியடைந்துள்ள மாற்றங்களை மார்க்சிஸ்ட் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்க முடியாதபோதும், அடுத்தடுத்த கட்சி தீர்மானங்களில் பிராந்திய முதலாளிகளின் பாத்திரத்திலும், நிலைமையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதன் விளைவாக பிராந்தியக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இடது ஜனநாயக அணி: தேவையும், நம் கடமையும்

ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் இந்த அரசியல் புரிதலையும், கட்சியின் அன்றாட செயல்பாட்டையும் இணைப்போம். இதற்கு ஏற்ப ஸ்தாபனத்தைப் பலம் பொருந்தியதாக மாற்ற நவம்பரில் கல்கத்தாவில் நடக்கும் ஸ்தாபன சிறப்பு மாநாடு உதவட்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினத்தின் ஐம்பதாம் ஆண்டு

சீத்தாராம் யெச்சூரி தமிழில்: ச. வீரமணி மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்று சாதனை படைத்த நவம்பர் 7 ஆம் தேதியன்றுதான் 1964 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமான முறையில் தன் அமைப்பை அதனுடைய 7ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புரட்சி திட்டத்துடன் அறிவித்தது. 1920 இல் தாஸ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. அதனையே கட்சி தொடங்கிய நாளாக எடுத்துக் கொண்டுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தன் பயணத்தைத் தொடர்கிறது. அதனால்தான் … Continue reading மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினத்தின் ஐம்பதாம் ஆண்டு

மாவோயிசம் அராஜகத்திற்கான ஒரு பயிற்சி II

மாவோயிஸ்ட்டுகள் கொரில்லா யுத்தக் கொள்கையிலேயே பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்கள் உபதேசத்தின் உள்ளடக்கத்தின் அமைப்பை லெனினைக் கொண்டே நாம் விளக்கலாம். ஒரு தொழிலாளி வர்க்க கட்சியானது கொரில்லா யுத்தத்தை மட்டும் தனது பாதையாக பின்பற்றுவது என்பதை கருத்தில் கொள்ள கூடாது என்று லெனின் எழுதியுள்ளார். கொரில்லா யுத்தமானது மற்ற போராட்ட வடிவங்களுக்கு உதவுவதாக இருத்தல் வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது….

ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவது என்பது பலமுறைகளிலும் ஒரு முக்கிய நிகழ்வாகவே காண வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது அந்த நபருடைய வாழ்க்கையில் மட்டுமின்றி அவருடைய சிந்தனைகள் உலகத்தைப் பற்றியும், சமூகத்தைப் பற்றிய பார்வை அவரின் மனோ நிலை ஆகியவற்றிலும் பெரிய மாறுதல்கள் ஏற்படுகின்றன.