இந்துத்துவா அரசியலை பாஜக கைவிடுமா? அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்

பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியது ஒரு பாசிச வெளிப்பாடு என்றும், ஆர் எஸ் எஸ் தனித்துவமான பல பாசிச தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்றும் நான் இப்போதும் நம்புகிறேன். இருந்தபோதிலும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் வரலாற்று ரீதியாகவே மிகவும் தனித்துவமான அரசியல் கட்சியாக இருக்கும் அதன் வெகுஜன அரசியல் முன்னணிப் படைக்கும் இடையே ஒரு வேறுபாட்டையும் நான் காண்கிறேன்.

உலக முதலாளித்துவம் எதிர்கொள்ளும் அமைப்பு சார் நெருக்கடி, மேற்பூச்சு போதாது…

சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் தொடருகிற காலம் வரை, மேலும் உலக மூலதன பரவலின் வலையில் நாடுகள் சிக்கியுள்ள வரையில், நெருக்கடி தொடரும் என்பது மட்டுமின்றி அதை சமாளிக்க அமைப்பின் வரையறைக்குள் நின்று எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் நெருக்கடியை தீவீரப்படுத்தவே செய்யும்.

மீண்டுமொருமுறை சாதிகள், வர்க்கங்கள் குறித்து…

பொது வாழ்வில் உள்ள முற்போக்கு சக்திகள் சாதிய ஒடுக்குமுறைகள் நிலவுவதை கவனிக்கும் அதே நேரத்தில் வளர்ந்து வரும் வர்க்கங்களைத் தங்களது அடிப்படையாகக் கொள்ள வேண்டும்

திரைப்பட முன்னோடி மிருணாள் சென்

எம். சிவகுமார் 2018-ம் ஆண்டு நம்மிடமிருந்து விடை பெறுவதற்கு சற்று முன்பாக வங்க சினிமாவின் மூவேந்தர்கள் என போற்றப்பட்டவர்களில் கடைசி வேந்தரான மிருணாள் சென்னும் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுக் கொண்டார். அவர் மறைவு குறித்த செய்திகளை தேசிய ஊடகங்களில் பார்த்தபோது ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. கொல்கத்தாவிற்கு வெளியே இளம் இயக்குநர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினருக்கு அவர் பற்றிய பல விவரங்கள் அவரது மறைவுக்குப் பின் வெளியிடப்பட்ட கட்டுரைகளில் இருந்துதான் தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மேற்கு … Continue reading திரைப்பட முன்னோடி மிருணாள் சென்

சமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு

ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் தத்துவங்களையும் ஆதிக்கம் புரியும் அரசியல் அதிகாரத்தையும் எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் புதிய மாற்றங்களினால் பழைய ஆதிக்க வர்க்கங்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே அவர்களது தத்துவங்களை எதிர்ப்பது அவசியமாகிறது.

பேரிடரான காலகட்டம்

நவதாராளமயம் நீடித்திருக்கும்வரை பாசிசம் வற்றாது ஜீவித்திருக்கும் நிலையில் சிக்கிக் கொண்டுள்ளோம். இது தற்கால நிலைமையை பேரிடரானதாக ஆக்குகிறது. பாசிசம், பாசிச அரசை நோக்கி நகருமாயின், அபாயம் இன்னும் வெளிப்படையானதாகிறது. அது 'தேர்தல் விளையாட்டுகளை' விளையாடும் போதிலும், வாக்குகளைப் பெற முடியாமல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அது ஒரு மாற்றாக தொடர்ந்திருக்கும், காலச் சுற்றோட்டத்தில் அதிகாரத்திற்கு வரும், அரசியல் மற்றும் சமூக 'பாசிசமயத்தை' நோக்கி சீராக முன்னேறும்.

சோசலிசத்திற்காக இளைஞர்கள் போராட வேண்டும்: சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யா

உலகத்தில் தொழிலாளி வர்க்க உழைப்பாளிகளின் தலைமையில் இடது சாரிகள், மத்தியதர வர்க்கத்தினர், சாதாரண மக்கள் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமெனில், சோஷலிசம் தவிர வேறு எந்த சமூக அமைப்பினாலும் முடியாது என்பது உறுதி.

வகுப்புவாத தேசியத்தை வீழ்த்தும் மாற்று எது?

சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மாநிலக்கட்சிகள்தான் என்றபோதிலும் அவர்கள் பிராந்திய அடையாளங்களை முன்வைக்கவில்லை, உத்தரப் பிரதேசத்தில் பிராந்திய அரசியலும் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கவில்லை. தங்களை தேசிய அடையாளங்களுடன் இணைத்துப் பார்த் துக் கொள்ளும் உ.பி. மக்களுக்கு பாஜகவின் ‘இந்து தேசியவாத’ அழைப்பு ஈர்ப்பைக் கொடுத் துள்ளது. வகுப்புவாத நெடியுடன் அந்தப் பிரச் சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்று கால கட்டங்கள்…

மறுமலர்ச்சி என்பது சமூக சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் மதிப்புகளில் மாற்றத்தை விளைவிக்க கூடியது. மனிதம் குறித்து புது விளக்கம் உருவாக்குவது. புதிய மனிதன் தோன்றினான். இந்த புதிய மனிதன் கலாச்சார படைப்பாக்கத்திற்கு புத்துயிர் அளித்தான். இசை, இயல், நாடகம், சிற்பம், ஓவியம் என அனைத்திலும் புதிய கருத்துகள் உருவாயின.

தேவை புதியதொரு செயல் திட்டம் !

குறுகலான வரையறைகளுக்குள் இந்திய முதலாளித்துவம் வளர்ந்து வருவதன் விளைவாக, வர்க்க உருவாக்க நிகழ்வானது - வரலாற்று ரீதியாக நிலைத்து நிற்கும் சாதிப் பிரிவினைகள் நிறைந்த சமூகத்தின் வரையறைக்கு உட்பட்டுத் தான் அமைந்துள்ளது. இதுவெல்லாம் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக உறவுகளைச் செப்பனிட்டு மாற்றியமைக்கப்படுவதற்கு பதிலாக, அவற்றுடன் சமரசம் செய்து கொண்டே வளர்ந்திருக்கிறது.