இட ஒதுக்கீடு: சிபிஐ(எம்) அணுகுமுறை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் (மக்களவையிலும், மாநிலங்களவையிலும்) அனைத்துப் பிரிவினருக்கும் தனியார் துறையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான இட ஒதுக் கீட்டினை விரிவாக்க வேண்டுமென சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தனர். ஆனால் மோடி அரசு அதை நிராகரித்து விட்டது.

இடஒதுக்கீடு பிரச்சனை : ஜனநாயக இயக்கத்தின் பார்வை

பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதம் இட ஒதுக்கீடு செய்வது என்ற மத்திய அரசின் அண்மைக்கால முடிவு சில வட்டாரங்களிலிருந்து கடுமையான எதிர்ப்பைச்சந்தித்துள்ளது. நமது நாட்டு ஊடகங்கள் - தொலைக்காட்சி, பத்திரிக்கை, இணைய தளம் இத்யாதி பெரும்பாலும், அரசின் முடிவிற்கு எதிராக அந்தஸ்து மிகுந்த மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ சமுதாயத்தில் ஒரு சிறிய பகுதியினர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக, செய்தி - பிரச்சாரம் மேற் கொண்டுள்ளன.

இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அடிப்படைவாதிகள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா கண்டத்தில் பெரும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அதாவது ஆரிய இனத்தில் பிறப்பவர் அறிவாளி என்றும், வேறு இனங்களில் பிறக்கும் குழந்தைக்கு அவ்வளவு மதிநுட்பம் இருப்பதில்லை என்றும் விவாதம் நடந்தது. அதேபோல் தான், உயர்கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதமானம் இட ஒதுக்கீடு என்கிற, மத்திய அரசின் முடிவுக்கு, எதிரான விவாதங்களும் நடைபெறுகிறது. தகுதி என்பது, அவரவர் வளருகிற சமூக சூழ்நிலையில் இருந்தே உருவாகிறது. பிறக்கும் போதே எல்லோரும் எல்லாத் தகுதிகளுடன் பிறப்பதில்லை. உலகமயமாக்கல் கொள்கையைப் பற்றி குறிப்பிடுகிறபோது, அடிப்படைவாதம் உலக மயமாக்கலோடு சமரசம் செய்து கொள்கிறது என்று சமீர் அமீன் குறிப்பிடுகிறார். இங்கே அடிப்படை வாதம் என்பது மத, சாதி மற்றும் இன ரீதியிலான ஆதிக்க மனப்பான்மை ஆகும்.

பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்

தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வரும் எவரிடமும் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் இல்லை என்று அடித்துக் கூறியிருப்பார்கள். இது பெரியார் வாழ்ந்த மண்.