அடிமைச் சங்கிலியைத் தகர்த்த தாதா அமீர் ஹைதர் கான்

அமீர் ஹைதர் கான் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை, ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையோடு பின்னிப் பிணைந்தது என்ற உண்மையை உணர்ந்த ஒரு போராளியாக இயங்கினார். பயணித்த இடத்திலெல்லாம் தன் முத்திரையைப் பதித்தார். இந்திய துணைக்கண்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் பரவி வளர்ந்ததில் அமீர் ஹைதர் கானின் பங்களிப்பு அதி முக்கியமானது.

தோழர் பி.ஆர் பற்றிய நினைவலைகள்!

டிசம்பர் 15 - தோழர் பி. ராமமூர்த்தியின் நினைவு நாள். பன்முகத்திறனோடு இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் களம் கண்ட அந்த தோழர் மறைந்து 20 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார தளங்களின் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பல சமயங்களில் தோழர் பி.ஆரின் நினைவு வந்து போனதுண்டு - வழிகாட்டுதல் வேண்டி. அரசியல் அரங்கில் அவர் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தீர்க்கமான வழிகாட்டுதல் கிடைத்துக் கொண்டிருந்தது. இக்கட்டுரையின் நோக்கம் ஒரு தனி மனித வழிபாட்டினை பதிவு செய்வது அல்ல; அவருடைய வாழ்க்கை சரிதத்தை விளக்கும் நோக்கமும் கொண்டதல்ல. இந்த நாட்டில் சோசலிச - கம்யூனிச கருத்துக்கள் பரவி மக்கள் மத்தியில் ஒரு பேரியக்கம் உருவாக அவர் ஆற்றிய தவக்க கால பணிகளை நினைவு கூரும் முயற்சி தான் இது.