வளர்ச்சி என்ற பெயரில் நிகழும் வன்முறைக்கு எதிராக…

விஜூ கிருஷ்ணன் தமிழில்: என். சுரேஷ் குமார் கார்ப்பரேட் ஆதரவு சக்திகள், அரசின் துணையோடு பெருமளவு நிலங்களை கையகப் படுத்த முயற்சிக்கின்றன. எனினும், அவர்களது இந்த நடவடிக்கைகளை,  நில உரிமையாளர்கள் மற்றும் நிலத்தை சார்ந்தவர்கள் முன்னெப் போதும் இல்லாத அளவிலான ஒற்றுமையோடு எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்தியா முழுமையும் கற்பனைக்கெட்டாத வகையில் நில அபகரிப்பு அரங்கேறி வருகிறது. மத்திய, மாநில அரசுகள், இந்திய, அந்நிய நிறு வனங்கள் மற்றும் தனிநபர்களும் கூட பெருமளவு நிலங்களை, மிகக் குறைந்த விலை … Continue reading வளர்ச்சி என்ற பெயரில் நிகழும் வன்முறைக்கு எதிராக…

விவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …

நிலச்சீர்திருத்தம் என்பதற்கான அர்த்தமே இப்போது தலைகீழாக மாறி யுள்ளது. நிலத்தில் உழைப்பவர்களுக்கு நிலம் என்பதாக அது இல்லை; மாறாக, பெருநிறு வனங்களுக்கே நிலம் என்பதாக அது மாறி யுள்ளது.

தீவிரமாகும் கிராமப்புற முரண்பாடுகள்

கிராமப்புற பெரும்பணக்கார கூட்டுச்சக்திகளின் சுரண்டலை எதிர்த்த போராட்ட முயற்சிகளை ஆங்காங்கே எடுத்த போதிலும், இதுகுறித்து நாம் விவாதித்த பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான கிராமப்புற நிலமற்ற அத்துக்கூலித்தொழிலாளர்கள், ஏழை சிறு , குறு விவசாயிகள், விவசாயம் சாரா கைத்தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட இதர தொழிலாளர்கள் , அனைத்துவகை வெகுஜன கிராமப்புற ஏழைகள் சேர்ந்த பரந்துபட்ட ஒற்றுமையை கட்டி, ஒன்று திரட்டி இன்னும் அதிகப்படியான போராட்ட புரட்சிப்போரினை முன்னெடுத்து நாம் விவாதித்த தீவிரமாகி வரும் கிராமப்புற முரண்பாடுகளை களைந்திட களம் காண்பதே அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதற்கும், இறுதியாக எதிர்கொள்ள இருக்கும் ”மக்கள் ஜனநாயக புரட்சிக்கு” முன் இன்றைக்கு நம் முன்னேயுள்ள மிகவும் அடிப்படையான சவால் இதுவென்றால் மிகையாகாது.