பொருளாதாரத்தில் போட்டியிடும் திறன் பற்றி முன்வைக்கப்படும் வாதங்கள் குறித்து

உழைப்பின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கும் நாடு, அதன் போட்டியிடும் திறன் போதுமான அளவு அதிகரிக்கும் வரை தன் நாணயமாற்று வீதத்தை குறைத்துக் கொண்டு, வேலையின்மையை ஒழித்துக் கொள்ள முடியுமா?

முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள் – 2

உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ் பிழிந்தெடுக்கப்படுகின்றனர். ஆனாலும், நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ், நடுத்தர வர்க்கத்தினர் என்ற ஒரு பிரிவினர் உருவாவதும், அவர்களுடைய வாழ்க்கைத்தரம் ஓரளவு நல்லநிலையில் இருப்பது என்பதும் ஒரு சில மூன்றாம் உலக நாடுகளில் நடக்கின்றது. இதை முன்னிலைப்படுத்தி, மூன்றாம் உலக நாடுகளில் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் காரணமாக செழிப்பான நிலையே இருக்கிறது என்பது போன்ற ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது.

ஆ.சி.ஈ.பி (RCEP) ஒப்பந்தம் இந்தியாவுக்கு உகந்த ஒன்றுதானா?

ஒரு சமூகத்தால் உற்பத்தி செய்ப்பட்ட பொருட்கள்- வளங்களின் அடிப்படையில் அது எவ்வளவு விலை அதிகமாக இருந்தாலும்- அதே சமூகத்தால் முழுவதும் பயன்படுத்தப்படும்போது, அந்தச் சமூகத்தில் அதிகமான வேலைவாய்ப்புகளும், நுகர்வும் இருக்கும். ஆனால், அந்தச் சமூகத்து மக்கள் தங்கள் சமூகத்தில் உற்பத்தியாகாமல், வெளியில் இருந்து உற்பத்தியான பொருட்களை வேண்டினால், வேலைவாய்ப்பும், உற்பத்தியும் மட்டும் வீழ்ச்சியடையாது (இறக்குமதி மதிப்புக்கு சமமான அளவுக்கு ஏற்றுமதிகளால் இந்த நிலை சரிப்படுத்தப்படாதவரை), திருத்தத்துக்கு இடமே இல்லாத வகையில் நுகர்வும் குறையும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், “தாராள வர்த்தம்” “திறன்” போன்ற வாதங்கள் எல்லாம், முதலாளித்துவ பொருளாதாரத்தின் தூய கருத்தியல் மரபே. அவை பொதுவாக செல்லுபடியாகாது; அவற்றை நாம் விரைவில் மறப்பது நமக்கு நல்லது.

இந்தியாவில் வேலையின்மை நெருக்கடி

வேலையின்மை பிரச்சினையின் இன்றைய அளவு மற்றும் தன்மை ஆகியவற்றுக்குள் செல்வ தற்கு முன், வேலையின்மையை கணக்கிடுவதில் உள்ள சில நுட்பமான அம்சங்கள் பற்றி பார்ப் போம். முதலில், உழைப்பு படை என்பதன் இலக்கணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நவீன தாராளமயத்தின் நெருக்கடி: அரசியல் சமூக விளைவுகள்

எங்கெல்லாம் இடதுசாரிகள் நவீன தாராளமயத்திற்கு எதிராக உறுதியான நிலை எடுக்க முடிந்ததோ, உழைப்பாளி மக்களின் நலன்களில் சமரசம் செய்து கொள்ளவில்லையோ அங்கெல்லாம் அவர்கள் மக்களின் அதிருப்தியை திரட்ட முடிந்துள்ளது. முன்னேறவும் முடிந்துள்ளது.

நவீன தாராளமயமும் தொழிற்சங்கமும்

டாக்டர் ஹேமலதா, தலைவர், இந்திய தொழிற்சங்க மையம் 1970களில் உருவான பொருளாதார நெருக்கடிக்கு முதலாளித்துவ அமைப்பு மேற்கொண்ட எதிர்வினை நவீன தாராளமயமாகும். அமெரிக்காவும் பிரிட்டனும் 1980–களில் நவீன தாராளமயத்தை அமல்படுத்தும் வண்ணம் பொருளாதார மறுகட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்த துவங்கின. இந்தத் திட்டங்கள், பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வங்கி போன்ற அமைப்புகளின் உதவியுடன் உலகம் முழுவதும் திணிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டுகளில் நுழையும்பொழுது உலகில் பெரும்பாலான நாடுகள் நவீன தாராளமயக் கொள்கைகளைத் தங்கள் திட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் துவங்கின. … Continue reading நவீன தாராளமயமும் தொழிற்சங்கமும்