பெருநிறுவன-நிதி மூலதன கூட்டாளிகளும் அதற்குள் அமைந்த அடுக்குகளும்

பேராசிரியர் பிரபாத் பட்நாயக் தமிழில்: வயலட் நாம் முழுமையான ஒன்றாக காண்கிற அனைத்துமே வேறுபாடுகள் கொண்ட பல்வேறு கூறுகளால் ஆனது என்பதையும், அவைகளுக்குள்ளாக முரண்பாடுகள் உள்ளன என்பதையும் மார்க்சியப் பார்வை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. அவ்வாறு நாம் முழுமையாக பார்க்கிற ஒன்றை கருத்தாக்க அளவில் முழுமையாகவே குறிப்பிடுகிற போதும், அதன் உள்ளார்ந்த பகுதியாக அமைந்திருக்கும் இந்த முரண்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருக்க வேண்டும். எதேச்சதிகார, ஃபாசிசத்தனமான அரசுகளின் அரசியல் பொருளாதாரத்தைப் படிக்கும்போது இந்த கட்டளையை மறந்துவிடக் … Continue reading பெருநிறுவன-நிதி மூலதன கூட்டாளிகளும் அதற்குள் அமைந்த அடுக்குகளும்

மநுவாத பொருளாதாரமும், இந்து வலதுசாரிகளும்

கடந்த ஆறு ஆண்டுகளில் தாங்கள் ஏற்படுத்திய பொருளாதாரச் சீர்குலைவுகளை மறைத்து மக்களிடையே பிரிவினையைத் தூண்ட முட்டி மோதிப்பார்த்தனர். அதே சமயம் இந்த நிதியறிக்கையை உற்று நோக்கும்பொழுது, இந்த அரசின் பொருளாதாரப் பார்வை கார்ப்பரேட் மூலதனத்தின் நலன்களை முன்னிறுத்துவது தெரிகிறது. மேலும், இந்த அரசின் கொள்கைகளை பார்ப்பனீயம் வழிநடத்துவதும் புலப்படுகிறது.

மத்திய பட்ஜெட் 2020: வருமான மறு பங்கீட்டில் பெரும் அநீதி

தொழில் மந்தம், கிராக்கி வீழ்ச்சி, வேலையின்மை, சிறு தொழில் நசிவு, விவசாய வருமானங்களில் சரிவு, உணவுப் பொருள் பணவீக்கம், அரசின் வருமான திரட்டலில் தோல்வி, ஏற்றத்தாழ்வு இடைவெளி அதிகரிப்பு என பல பரிமாணங்களில் வெளிப்படுகின்றன. ஆனால் அரசு நெருக்கடி இருப்பதாகவே ஏற்றுக் கொள்ளாமல் நவீன தாராள மயப் பாதையிலேயே பயணிக்க முனைந்துள்ளது.

கவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்

கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு செலவிடப்பட்ட பணத்தை மொத்தமாக விரயம் செய்யும் வகையில், ஒரு கணக்கெடுப்பு விபரங்கள் முற்றிலுமாக நசுக்கப்படுவது இதுவே முதல் முறை. தான் உருவாக்கி வைத்திருக்கும் ‘அச்சே தின்’ என்ற மாயை அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, தேசத்தின் இத்தனை வளங்களை விரயம் செய்ய இந்த அரசு துணிகிறது என்றால், இது இந்த அரசாங்கம் கொண்டிருக்கும் பிம்பப் போதையின் உச்சத்தைக் காட்டுகிறது.

பொருளாதாரத்தில் போட்டியிடும் திறன் பற்றி முன்வைக்கப்படும் வாதங்கள் குறித்து

உழைப்பின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கும் நாடு, அதன் போட்டியிடும் திறன் போதுமான அளவு அதிகரிக்கும் வரை தன் நாணயமாற்று வீதத்தை குறைத்துக் கொண்டு, வேலையின்மையை ஒழித்துக் கொள்ள முடியுமா?

முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள் – 2

உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ் பிழிந்தெடுக்கப்படுகின்றனர். ஆனாலும், நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ், நடுத்தர வர்க்கத்தினர் என்ற ஒரு பிரிவினர் உருவாவதும், அவர்களுடைய வாழ்க்கைத்தரம் ஓரளவு நல்லநிலையில் இருப்பது என்பதும் ஒரு சில மூன்றாம் உலக நாடுகளில் நடக்கின்றது. இதை முன்னிலைப்படுத்தி, மூன்றாம் உலக நாடுகளில் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் காரணமாக செழிப்பான நிலையே இருக்கிறது என்பது போன்ற ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது.

நோபல் பரிசு 2019 – ஒரு விமர்சனப் பார்வை

தாராளமய காலகட்டத்தில் எப்படியாவது அரசின் செலவுகள் குறைக்கப்பட வேண்டும், நலத் திட்டங்கள் வெட்டப்படவேண்டும் என்று கடுமையாக வாதிட்டுவரும் உலக வங்கி, ஐ எம் எஃப் போன்ற அமைப்புகளுக்கும் RCT ஒரு ஆயுதமாக பயன்படும்.

ஆ.சி.ஈ.பி (RCEP) ஒப்பந்தம் இந்தியாவுக்கு உகந்த ஒன்றுதானா?

ஒரு சமூகத்தால் உற்பத்தி செய்ப்பட்ட பொருட்கள்- வளங்களின் அடிப்படையில் அது எவ்வளவு விலை அதிகமாக இருந்தாலும்- அதே சமூகத்தால் முழுவதும் பயன்படுத்தப்படும்போது, அந்தச் சமூகத்தில் அதிகமான வேலைவாய்ப்புகளும், நுகர்வும் இருக்கும். ஆனால், அந்தச் சமூகத்து மக்கள் தங்கள் சமூகத்தில் உற்பத்தியாகாமல், வெளியில் இருந்து உற்பத்தியான பொருட்களை வேண்டினால், வேலைவாய்ப்பும், உற்பத்தியும் மட்டும் வீழ்ச்சியடையாது (இறக்குமதி மதிப்புக்கு சமமான அளவுக்கு ஏற்றுமதிகளால் இந்த நிலை சரிப்படுத்தப்படாதவரை), திருத்தத்துக்கு இடமே இல்லாத வகையில் நுகர்வும் குறையும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், “தாராள வர்த்தம்” “திறன்” போன்ற வாதங்கள் எல்லாம், முதலாளித்துவ பொருளாதாரத்தின் தூய கருத்தியல் மரபே. அவை பொதுவாக செல்லுபடியாகாது; அவற்றை நாம் விரைவில் மறப்பது நமக்கு நல்லது.

தேவை நேர் எதிரான ஒன்று – பொருளாதார மந்த நிலை குறித்து பிரபாத் பட்நாயக்

இந்த வரிலக்கு சிறு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால், அதனால் முதலீடுகள் உயர்ந்திருக்ககூடும். ஏனென்றால், இந்நிறுவனங்கள் பெரும்பாலும் நிதியை பொறுத்து செயல்படுபவை கட்டுப்படுபவை. மாறாக பெருநிறுவனங்கள் சந்தையில் நிலவும் தேவையைப் பொறுத்து செயல்படுபவை

முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள்-1

சிறுஉற்பத்தியில் பங்கெடுக்கும் ஒரு பிரிவினரின், குறிப்பாக, பாரம்பரியமாக தொழிலாளர்கள் அனுபவித்துவரும் சில வழக்கமான உரிமைகளும் சேர்த்தே பறிக்கப்படுகின்றன. முதலாளித்துவத்தால் அவர்களது கோரிக்கைகளும் எப்போதுமே கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன.