ஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்

மக்களுடன் வைத்திருக்கும் தன்னுடைய தொடர்புகளை கட்சி பன்மடங்கு அதிகமாக்க வேண்டும். தன்னுடைய வர்க்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை பெருமுயற்சி செய்து பெற வேண்டும்.

புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம் …

ஜி. செல்வா "அது கடினமானதல்ல, சட்டென புரிந்து கொள்ளக்கூடிய எளிமை உள்ளது அது. நீ சுரண்டல்வாதியல்லன். எனவே உன்னால் அதை  எளிதில் புரிந்துகொள்ள முடியும். அது உன் நன்மைக்கு வழி. எனவே அதைப் பற்றி நீ தெரிந்து கொள். அதனை மடமை என்போர் மடையர்கள். அது மோசம் என்போர் மோசடிக்காரர். மோசடிகளுக்கு எதிரானது அது. சுரண்டல்வாதிகள் அதனை 'கிரிமினல்' ஆனது என்பர். ஆனால் உண்மை விஷயம் நமக்குத் தெரியும். கிரிமினல் ஆன அனைத்திற்கும் அது முடிவு கட்டும். … Continue reading புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம் …

கீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்

கீழத்தஞ்சையில் உக்கிரமாக நடந்துவந்த வர்க்கப் போராட்டத்தின் விளைவாக ஏகபோக நிலவுடமையாளர்கள் சீற்றமடைந்தார்கள். சாதி ஆதிக்கத்தையும், பொருளாதாரச் சுரண்டலையும் எதிர்த்து மக்கள் திரள்வதை, ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. கீழ்வெண்மணியின் படுகொலைகளுக்கு பிறகும் அவர்களால் வர்க்க இயக்கத்தை வீழ்த்த முடியவில்லை என்பது ஒருபக்கம் இருக்க. இப்படி தங்கள் அடக்குமுறைத் தாண்டவம் செய்திகளிலோ, சினிமா ஊடகத்திலோ பிற பகுதி மக்களுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் முயற்சிகளும் இருந்தன.

தாமஸ் பிக்கெட்டின் மூலதனமும், கார்ல் மார்க்சும்

பணபுழக்கத்தை நெறிப்படுத்துவதின் மூலம் ஜனநாயக மாண்புகளை காக்கமுடியும் என்பதே இந்த புத்தகத்தின் ஜீவநாடியாகும். மார்க்சிய பொருளாதார கோட்பாடுகளுக்கு இது ஒரு சவாலாகும். கீழ்கண்ட காரணங்களால் இதனை மார்க்சிஸ்டுகள் படிப்பது அவசியம்.

புரட்சி மீது புது நம்பிக்கை பாய்ச்சும் புத்தகம்

சோசலிசப் புரட்சியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியை கெட்டிப்படுத்தி, உலக முதலாளித்துவத்தை எதிர் கொண்டு வெல்வதற்கு ஒளிவிளக்காக அறிவொளி பிரகாசிக்கச் செய்கிறது "புரட்சி! 1917ல் லெனின்" எனும் ஆங்கில நூல்.

வியப்பூட்டும் கூபா … – எமிலி மோரிஸ்

கியூபா (மொழியாக்கத்தில் கூபா) குறித்து நியூ லெப்ட் ரிவியூ என்ற இணையதளத்தில் எமிலி மோரிஸ் எழுதிய கட்டுரை தமிழில் புத்தகமாக வந்துள்ளது. ரூ.60 விலையில் தடாகம் பதிப்பகத்தார் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். அதிலிருந்து சிறு பகுதி.

பண்பாட்டுத் தளத்தில் களமாட…

ஜனநாயக போராட்டத்தின் கட்டாய பங்காக இம்முறையிலான போராட்டங்கள் இருந்தாலும் தற்போதுள்ள சூழலில் உள்ளூர் சமூகங்களோடு, மக்களோடு ஆழமான உறவுகளை உருவாக்கும் வகையில் போராட்ட முறைகள் குறித்து தீவிரமான மறுபரிசீலனை செய்ய வேண்டும். மறுப்பு, எதிர்ப்பு மட்டும்போதுமானதல்ல. ஒரு எதிர்க்கலாச்சாரத்தை உருவாக்குவதுதான் இன்றைய தேவை.

செவ்வியல் நூல்: மார்க்சியமும், தேசிய இனப் பிரச்சனையும் …

பாட்டாளிவர்க்கம் குறிப்பிடும் சுய நிர்ணயம் என்பதும் கூட ஏட்டில் உள்ள உரிமை அல்ல. பிரத்யேக நிலைமைகளுக்கு ஏற்றவாறு நடைமுறைப் படுத்த வேண்டும். எனவே, அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏற்ப சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியம். பாட்டாளி கள் குறிப்பிடும் சுய நிர்ணயம் என்பது வர்க்க நலன் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படு கிறது. எனவே, முதலாளித்துவ முழக்கங்களை அப்படியே ஏற்காது.

நவீன தகவல் யுகத்தில் மார்க்சை வாசித்தல்

மனிதர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். சமூகம் மனிதர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு தாங்கிப் பிடிக்கப்படுகிறது. சமூகம் பொருள் அமைவின் ஒரு மட்டம் ஆகும். சமூகத்தில் தகவல் தொடர்பு என்பது மனிதர்களின் சமூக இடைச் செயல்முறையாகும்.

முகிலினியில் கலந்த முதலாளித்துவம் …

நேற்றுவரை இது வேறொருவருடைய போராட்டம், இன்று இது இவர்களுடைய போராட்டம். இவ்வாறு பிரித்தது யாருடைய வெற்றி? எங்கே தொழிற் சங்கம் தவறியது? எங்கே நதிநீர்ப்பாதுகாப்பு அமைப்பு தவறியது? என்ற பல கேள்விகளை கௌதம் வாயிலாக வாசகர்களுக்கு கடத்து கிறார் ஆசிரியர்.