உழைக்கும் வர்க்க இயக்கமும் பெண்களின் பங்களிப்பும்

இந்தியாவிலும், உழைக்கும் வர்க்க ஒற்றுமையை கட்டமைப்பதில் பெண்கள் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இடதுசாரி இயக்கத்தில், குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சிறந்த பங்களிப்பை செலுத்தியவர்கள் ஆவர். விமலா ரணதிவே, அஹல்யா ரங்கனேகர், தமிழகத்தில், விவசாய தொழிலாளிகளை கிராமம் கிராமமாக சென்று ஒன்று திரட்டி அவர்களது குரலை சட்டமன்றத்தில் ஒலிக்க செய்த கே.பி. ஜானகி அம்மாள், ரயில்வே தொழிலாளர் போராட்டம் தொடங்கி பல உழைக்கும் மக்கள் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், பெரிதும் அறியப்படாத திண்டுக்கல் ஆக்னஸ் மேரி ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

குறைத்து மதிப்பிடப்படும் பெண்களின் உழைப்பு, ஊதிய அசமத்துவம்

ராணுவத்தில் போர்முனையில் பெண்களின் பங்கு குறித்த பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தில் அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாஜக அரசின் இத்தகைய அணுகுமுறையைக் காண முடிந்தது சமீபத்திய உதாரணமாகும். ‘குறைந்த உடல் தகுதிகள், பெரும்பாலும் கிராமப்புற பின்னணியிலிருந்து வந்திருக்கும் ஆண்களை மட்டுமே நமது படைப்பிரிவுகள் கொண்டிருப்பது’ என்பதோடு, ‘தாய்மை, குழந்தைப் பராமரிப்பு, உளவியல் வரம்புகள்’ ஆகியன பெண்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதால் போர் முனையில் பணியாற்றுவதற்கு பெண்கள் தகுதியற்றவர்கள் என வெட்கமின்றி அரசு நீதிமன்றத்தில் கூறியது.

உலகமயமாதல் காலத்தில் பெண்கள் மீதான சுரண்டல்

உலகமயமாதலின் கூடவே கஷ்டப்பட்டு வென்ற தொழிலாளர் உரிமைகள் மீறப்படுவதும் மறுக்கப்படுவதும் நடக்கின்றன. விற்பனைத் துறை, கடைகள், துணி உற்பத்தி, வாகன உற்பத்தித் துறை போன்ற பிற துறைகளில் பெண்கள் கடும் ஒடுக்குமுறையையும் மோசமான வேலைச் சூழலையும் சந்திக்கின்றனர். ஊதியம் சார் பாகுபாடுகளையும் எதிர்கொள்கின்றனர்.