மாநிலக் கட்சிகள், சாதி ஒடுக்குமுறை – மார்க்சிஸ்ட் அணுகுமுறை …

தமிழில்: இரா.சிந்தன் மாநிலக் கட்சிகளின் வர்க்கச் சார்பு எத்தகையது? மார்க்சிஸ்ட் கட்சியின் 21 வது அகில இந்திய மாநாடு, மாநிலக் கட்சிகளின் வர்க்கச் சார்பு பற்றி விவாதித்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள் - பிராந்திய முதலாளிகளின் நலன்களை மட்டுமல்லாது, அரசுக்கும் மற்றும் கிராமப்புற பணக்காரர்களுக்கும் இடையில் நிலவும் கூட்டின் பிரதிநிதிகளாகவும் உள்ளன, என்று கட்சி வரையறுத்துள்ளது. மாநிலக் கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் என்கிறோம். அவர்கள் பாஜகவுடன் கூட்டு சேர தயங்குவதில்லையே? தற்போது அரங்கேற்றப்படும் … Continue reading மாநிலக் கட்சிகள், சாதி ஒடுக்குமுறை – மார்க்சிஸ்ட் அணுகுமுறை …

 பல்கலைக் கழகங்களைக் குறிவைக்கும் பாசிசம்: கே.என். பணிக்கர் நேர்காணல்

பெரும்பாலான பிராமணர்கள் காங்கிரசில் இருந்தனர். வலுவான இடைப்பட்ட ஜாதிகள் ஏதுமில்லை. எனவே இந்து மதவாத கோட்பாடுகள் செழிப்பதற்குப் போதுமான வெளி தென்னிந்தியாவில் இருந்திடவில்லை.

சுயமரியாதையும், சமதர்மமும் !

திராவிடக் கட்சிகள் மதவெறி எதிர்ப்பு போன்ற விசயங்களில் சமீபத்தில் நடைபெற்ற பல பிரச்சனைகளில் அறிக்கை என்ற அளவோடு நிற்கின்றனர். அவர்களின் திராவிடக் கொள்கை நீர்த்துப் போனதைத்தான் இது காட்டுகிறது. அதே சமயம், திராவிடர் கழகம் இவ்விஷயத்தில் செயல்பட்டிருக்கிறது.

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் தோற்றுவாய் எது?

அமெரிக்கப் படையெடுப்பின் ஒரு உடனடி விளைவாக குறுங்குழுவாதத்தின் தோற்றம் அமைந்தது. இத்தாக்குதலில் ஈடுபட்ட படையினரும் அதன் சிவிலியன் இயக்குனர் பால் பிரேமரும் அறிவுக் கூர்மையுடன் ஷியா, சன்னி, குர்து இனக் குழுக்களை பிளவுபடுத்தி ஒருவர் மற்றொருவரின் கழுத்தை நெறிக்கும்படி செய்தனர். இந்தப் படைகள் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அங்கு கொடூரமான பிரிவினைவாத முரண்பாடுகளை வெடிக்கச் செய்தன.

இரண்டு புதை குழிகள் நோம் சாம்ஸ்கியுடன் ஓர் உரையாடல்!

20ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர் என்ற புகழ் சோம்கிக்கு உண்டு. 77 வயதான சோம்கி இந்தப் பாராட்டைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தெரிந்த, இறுகிப்போன விதிகளிலிருந்து, மாறுபட்ட கருத்துக்களை மக்கள் கேட்க விரும்புகிறார்கள். இத்தகைய புதுமையான கருத்துக்கள் ஊடகங்கள் மூலம் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை - என்கிறார். சோம்கி சிறந்த மொழியியல் அறிஞர். பின்னர் அரசியல் சிந்தனையாளராய்ப் புகழ் பெற்றார். 1960 களின் துவக்கத்தில் தோன்றிய யுத்த எதிர்ப்பைக் குறித்த முன்னணிச் சிந்தனையாளர். ஏராளமான கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ஆறு புத்தகங்களை எழுதியுள்ளார். ந்யூ வீக் பத்திரிக்கையைச் சார்ந்த மைக்கேல் ஹேடிங் என்பவருடன் கீழ்க்கண்ட உரையாடலில் தற்போது நிலவும் பூகோள அரசியல் நிலையைப் பற்றித் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.