எங்கெல்ஸ் 200: இணையவழி தொடர் உரைகள் – நிகழ்ச்சிநிரல்

மார்க்சிஸ்ட் இதழ் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து, மாமேதை எங்கெல்ஸ் தொடர்பான இணைவழி தொடர் உரைகளை ஒளிபரப்பவுள்ளோம். எங்கெல்சின் எழுத்துக்களை தமிழ் வாசகப் பரப்பிற்கும் அறிமுகம் செய்வதாகவும், பரவலாக்குவதாகவும் இந்த முயற்சி அமைகிறது. இந்நிகழ்வுகளின் இறுதியில், நவம்பர் 28, 2020 அன்று, சிவப்பு புத்தக தினம் நிகழவுள்ளது. தமிழகமெங்கும் 10 ஆயிரம் இடங்களில் 'கம்யூனிசத்தின் கோட்பாடுகள்' நூல் வாசிக்கப்படவுள்ளது.

பி.சுந்தரய்யா நினைவு தினம்: மார்க்சிஸ்ட் இதழ் இனி மின் நூல் வடிவிலும் கிடைக்கும்…

இனி மாதம் மாதம் மார்க்சிஸ்ட் இதழ் மின் நூல் வடிவிலும் கிடைக்கும். தோழர் சுந்தரய்யா நினைவு நாளில், கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.

இந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு

தேவி பிரசாத் சட்டோபாத்யாயா நூற்றாண்டு நிகழ்வு வீ.பா.கணேசன் அறிவியல் மனப்பான்மையையும் மதச் சார்பின்மையையும் தமது இரு கண்களாகக் கருதுவோர் அனைவரும் ஒருபுறமும், இந்துத்துவவாதிகள், அவர்களது புரவலர்கள், பரிவாரங்கள் மறுபுறமும் நிகழ்த்திவரும் ‘வாழ்வா, சாவா?’ என்ற போராட்டம் நடைபெற்று வரும் இத்தருணத்தில்தான் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் நூற்றாண்டும் வந்து சேர்ந்துள்ளது. இந்தியாவின் தத்துவ மரபு என்பது ஆன்மிகம் தவிர வேறல்ல; மேற்கத்திய தத்துவங்களுக்கெல்லாம் மாறாக, மனிதனின் ஆன்ம மீட்சியை மட்டுமே முன்னுரிமையாகக் கொண்ட மேன்மை படைத்தது என்று சர்வபள்ளி … Continue reading இந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு

10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …

மார்க்சிய லெனினிய அடிப்படையில் இந்தியாவில் சோசலிசத்தை நோக்கிச் செல்ல பாட்டாளி வர்க்கத் தலைமையில் மக்கள் ஜனநாயக அரசு அமைய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாக எடுத்துரைக்கிறது. மக்கள் ஜனநாயக புரட்சியை முன்னெடுத்துச் செல்ல, மார்க்சின் 2௦௦-வது பிறந்த தினத்தில் உறுதியேற்போம்.

தமிழில் முதல் ஒலி இதழாக மார்க்சிஸ்ட் வெளியீடு !

சென்னை, தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழின் முதல் ஒலி இதழாக மார்க்சிஸ்ட் இதழின் புதிய வசதி தொடங்கப்பட்டது.

சோசலிச எழுத்திற்கான பயிலரங்கு – பி.கே.ராஜன்

’சோசலிச எழுத்தின் அடிப்படைகள்’ குறித்து விஜய் பிரசாத் அவர்கள் மார்க் நோவாக் அவர்களுக்கு அளித்த நேர்காணல், பயிலரங்கிற்கு ஒரு வாரம் முன்பே தமிழ்ப்படுத்தப்பட்டு (தமிழில் : சி.சுப்பாராவ்) பங்கேற்பாளருக்கு அளிக்கப்பட்டிருந்தது. (பார்க்க : புத்தகம் பேசுது ஜூன் 2017) அது இருநாள் விவாதங்களுக்கு ஒரு துவக்கப் புள்ளியாக இருந்தது.