இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்ட திட்டமிடல் எதுவும் நடந்ததா?

வர்க்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சுரண்டப்படும், ஒடுக்கப்படும் பிரிவினரை ஒன்று படுத்தி, போராட்ட வியூகம் வகுக்கப்பட வேண்டும். அவர்களை அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் உறுதிப்படுத்த வேண்டும். இதனை செயல்படுத்தக் கூடிய விதத்தில் இடதுசாரிகள் வலுப்பெற வேண்டும்.

டோனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாகியிருக்கக் கூடிய சூழல் எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்தும்?

அயல்துறை கொள்கைகளைப் பொறுத்த வரை அவர் பாதை முரண்பாடுகள் நிறைந்ததாக இருக்கும். பாரம்பர்யமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுத்து வந்த சில நிலைபாடுகளில் மாற்றம் வரலாம்.

திராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது?

கேள்வி: திராவிட அரசியல் கட்சிகள் பிராந்திய முதலாளிகளின் நலன்களை பிரதிபலிக்கின்றனவா? அவர்களிடம் தற்போது திராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது? டி.கே.ரங்கராஜன் : குறிப்பிட்ட கருத்தியல் என்பது குறிப்பிட்ட காலச் சூழலில் உருவாகிறது. அந்த காலம், தேவை மாற்றம் பெற்று, முடிவடைகின்றபோது வேறு சில கருத்துக்கள் சமூக முரண்பாடுகள் அடிப்படையில் உரு வாகின்றன. வரலாற்றில் ஒரு கருத்தியல் என்றைக்கும் அதே நிலையில் உயிருடன் இருக்க வேண்டுமென்ற அவசியம் இருப்பதில்லை. திராவிட இயக்கம் தோன்றிய காலத்தின் அரசியல், பொருளாதாரச் … Continue reading திராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது?

மத நம்பிக்கைகள், சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும்?

உள்ளூர் அளவில் மதச்சார்பற்ற நிகழ்வுகள் பலவற்றை உருவாக்கி மக்களை அவற்றில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.மதம் சார் நடவடிக்கைகள் இயல்பாகவே எண்ணிக்கையில் அதிகமாக அமைந்திருப்பது நீங்கள் குறிப்பிடுவது சங் பரிவாரத்துக்கு சாதகமான சூழலைத் தானாகவே ஏற்படுத்தித் தருவது உண்மை.

கேள்வி – பதில்: மே 2016

கேள்வி: பெண் விடுதலை பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் வர்க்க போராட்டங்களின் பங்கு என்ன? பதில்: ஆண்களுடன் சேர்ந்து தோளோடு தோள் நின்று போராடி சமூகத்தை மாற்றுவது தான் பெண்களின் விடுதலையை உறுதி செய்யும். அதே சமயம், ஆண்களை விடவும் கூடுதலாக, பெண்கள் பாலின ஒடுக்குமுறைக்கும் சேர்த்தே ஆளாக்கப்படுகின்றனர். இவ்வாறான ஒடுக்குமுறையை வர்க்க ஒடுக்குமுறையின் மூலம் பாதிக்கப்பட்ட ஆண்களும் செயல்படுத்துகிறார்கள் என்பதையும் ஒருங்கே பார்க்க வேண்டி இருக்கிறது. இவ்வாறு இரட்டை ஒடுக்குமுறை நடப்பதைப் பார்க்கவேண்டுமென ரஷ்யப் புரட்சி … Continue reading கேள்வி – பதில்: மே 2016

சாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்?

னிப்பட்ட தலித் நிறைவான சம்பளம் பெறுவதோ அல்லது ஒரு தலித் முதலாளி ஆகிவிட்டார் என்பதல்ல பிரச்னை. சமூக சொத்து, சமூக உற்பத்தி ஆகியவற்றில் யாருடைய அதிகார மேலாண்மை இருக்கிறது என்பதுதான் முக்கிய பிரச்னை. இந்த அதிகார மேலாதிக்கத்தில் மாற்றம் கொண்டு வருவதுதான் முக்கிய அடிப்படைப் பிரச்னை.

வெனிசுவேலா தேர்தல் முடிவுகள் பற்றி …

2010ஆம் ஆண்டுத் தேர்தலை ஒப்பிடுகையில் புரட்சிகர சக்திகளின் வாக்கு விகிதம் அப்படியே இருந்த போதிலும், எதிர்க்கட்சிகளின் ஆதரவு தளம் பெருமளவு அதிகரித்திருப்பதும், குறிப்பாக புதிய வாக்காளர்களின் ஆதரவை அவை கணிசமான அளவில் கவர்ந்துள்ளதையும் காண முடிகிறது.

தமிழகத்தில், இடது ஜனநாயக “முன்னணி” உருவாகும் வாய்ப்பு எவ்வாறு உள்ளது?

தமிழகத்தில், இன்றைய சூழலில் இடது ஜனநாயக “முன்னணி” உருவாகும் வாய்ப்பு எவ்வாறு உள்ளது? தமிழகத்தில் வேறு மாநிலங்களைப் போன்று, காங்கிரஸ்,பாஜக வலுமிக்க கட்சிகளாக இல்லை. இங்கு, திமுக,அதிமுக கட்சிகள் கணிசமான மக்களிடம் செல்வாக்கு தளத்தையும், வாக்கு வங்கியையும் வைத்துள்ளன. எனினும், உழைக்கும் மக்களுக்கு விரோதமான நவீன தாராளமயப் பாதையில் அந்த இரண்டு கட்சிகளும் பயணிக்கின்றன. சாதி ஒடுக்குமுறைகள் நீடிப்பது பற்றி எவ்வித தலையீடும் செய்வதில்லை. பிரதேச முதலாளித்துவக் கட்சிகள் எனும் வகையில் உழைக்கும் வர்க்கங்களுக்கு விரோதமான செயல்பாடுகள் … Continue reading தமிழகத்தில், இடது ஜனநாயக “முன்னணி” உருவாகும் வாய்ப்பு எவ்வாறு உள்ளது?

கம்யூனிஸ்டுகள் ஏன் அதிகமாக “முன்னணி”அமைப்பது பற்றி பேசுகின்றனர்?

“மக்கள் ஜனநாயக முன்னணி” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் பேசுகிறது. “இடது ஜனநாயக முன்னணி” பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் 21-வது அரசியல் தீர்மானம் பேசுகிறது. கம்யூனிஸ்டுகள் ஏன் அதிகமாக “முன்னணி”அமைப்பது பற்றி பேசுகின்றனர்? கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னணிகள் எப்படிப்பட்டவை என்பது மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்திலும், அரசியல் தீர்மானத்திலும் விளக்கப்பட்டுள்ளது. கட்சி திட்டத்தில் மக்கள் ஜனநாயக முன்னணி என்பது பல வர்க்கங்களை உள்ளடக்கியதாகவும், அந்த வர்க்கப் பிரிவுகளை எவ்வாறு திரட்ட வேண்டுமென்றும் விளக்கப்பட்டுள்ளது. தொழிலாளி - விவசாயி வர்க்கக் … Continue reading கம்யூனிஸ்டுகள் ஏன் அதிகமாக “முன்னணி”அமைப்பது பற்றி பேசுகின்றனர்?