மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது …

  (குரல் : யாழினி) ஹர்கிசன் சிங் சுர்ஜித் (மார்க்சியத்தை திரித்து முன்வைக்கும்)  திரிபுவாதத்துக்கெதிரான பத்தாண்டு காலப் போராட்டம் 1964 கல்கத்தாவில் நடைபெற்ற ஏழாவது கட்சி மாநாட்டில் அதனிடமிருந்து மொத்தமாக பிரிந்து செல்வதில் முடிவடைந்தது… முதல் கட்டத்தில்  1964, ஏப்ரல் 11 அன்று ஒன்றுபட்ட (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) தேசிய கவுன்சிலிலிருந்து வெளியேறிய முப்பத்து இரண்டு உறுப்பினர்களின் அறிக்கை மிக முக்கியத்துவமுடையது.  இந்த அறிக்கை இந்தியாவில் ஒரு வலுவான கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கும், பெரும் தியாகங்களால் அது … Continue reading மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது …

ஜனநாயகத்துக்கான நெடிய போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு

சோஷலிசத்தின் கீழ் மாற்றுக் கருத்து கூறும் உரிமை, பேச்சு சுதந்திரம், பன்முகத்தன்மை கொண்ட கருத்துக்களை முன்மொழிவது போன்றவை பாட்டாளி வர்க்க அரசின் தலைமையின் கீழ் சோஷலிசத்தை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளாக இருக்கும்.

நாடு தழுவிய புரட்சிக் கட்சி …

அறிக்கையில் அனைத்து வர்க்க வெகுஜன அமைப்புக்களின் செயல்பாடுகள் குறித்து ஆழமான ஆய்வுகுறிப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புகளின் கிளை சார்ந்த கீழ்மட்ட அமைப்புக்களை பலப்படுத்துதல், கட்சி காட்டும் பணியில் அதிக கவனம் செலுத்துதல் போன்ற வழிகாட்டுதல்கள் வரும் மூன்றாண்டுகளில் அமலாக்கப்பட வேண்டும்.

பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை!

கடந்த கால அரசியல் நடைமுறை உத்திகளைப் பரிசீலித்து விசாகப்பட்டினம் அகில இந்திய மாநாட்டில் முன்வைத்த அரசியல் நடைமுறை உத்தி தொடர்கிறது. இது இடது ஜனநாயக அணியைக் கட்டுவதை முக்கிய கடமையாக வரையறுத்துள்ளது.

மக்கள் ஜனநாயகத்தில் தேர்தலும், அரசியலும் ….

தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையும் அரசியலில் பல கட்சிகள் இயங்கிடும் நடைமுறையையும் மக்கள் ஜனநாயக அரசின் முக்கியமான நோக்கங்களாகும்.

விவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …

நிலச்சீர்திருத்தம் என்பதற்கான அர்த்தமே இப்போது தலைகீழாக மாறி யுள்ளது. நிலத்தில் உழைப்பவர்களுக்கு நிலம் என்பதாக அது இல்லை; மாறாக, பெருநிறு வனங்களுக்கே நிலம் என்பதாக அது மாறி யுள்ளது.

மக்களே இறையாண்மை கொண்டவர்கள்

தேசிய இனங்களுக்கிடையே சமத்துவம் என்பது உண்மையில் பாட்டாளி வர்க்க நலனை பாதுகாக்கும். கட்சித் திட்டத்தில், அரசு கட்டமைப்பு பற்றி குறிப்பிடும்போது, ”இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கும் உண்மையான சமத்துவம் மற்றும் சுயாட்சி தந்து அதன் அடிப்படையில் இந்திய யூனியனின் ஒற்றுமையை பாதுகாத்து முன் னெடுத்துச் செல்ல” பணியாற்றும் என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ( பாரா: 6.3).

மதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)

ஜனநாயக, மதச்சார்பற்ற அணுகுமுறை கொண்ட ஒரு புதிய முற்போக்கான மக்கள் பண்பாட்டை வளர்த்தெடுக்க நமது மக்களின் ஆக்கப்பூர்வமான திறமைகளை மக்கள் ஜனநாயக அரசு மற்றும் அரசாங்கம் உரமூட்டி வளர்க்கும்.

பெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்

வரலாற்றில் தனியுடமை தோன்றியதும், பெண்ணடிமைத்தனம் உருவானதும் ஒத்திசைந்து நிகழ்ந்ததாக எங்கல்ஸ் ஆதாரங்களுடன் எடுத்து வைக்கிறார். வர்க்க சமூக அமைப்பு உருவான காலம் தொட்டு நிலவும் பெண்ணடிமைத்தனம், நில உடமை சமூகத்தில் தத்துவமாக நிலை பெறுகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பு, தன் லாபத்துக்காக அதைப் பயன்படுத்துகிறது. புதிய வடிவங்களில் பெண்ணின் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது. பண்பாடு அதைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது. எனவே முதலாளித்துவ சமூக அமைப்பிலும் நிலைபெற்று நீடிக்கிற இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல், ஒரு குடும்பத்தில் ஆணாதிக்கம், மற்றொரு குடும்பத்தில் பெண்ணாதிக்கம் என்று போகிற போக்கில் சமப்படுத்தி விட முடியாது.

இடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்

மக்கள் ஜனநாயக அணியை கட்டுவதை நோக்கி முன்னேறும்போது, தேவைப்படும் நேரங்களில் இடைக்கால நிலைமைகளுக்கேற்ப இடைக்கால முழக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்று கட்சியின் திட்டம் விளக்குகிறது.