வரலாறு என்னை விடுதலை செய்யும் – பிடல் காஷ்ட்ரோ

கீழ்தரமான எண்ணங்களை கொண்ட மனிதர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கிறார்கள். துன்புறுத்தி இன்பங்காண்போரும், கொடியவர்களும், தங்கள் முன்னோரின் இழிச்செயல்களையெல்லாம் தாங்கி, மனிதப் போர்வையில் வளையவரும் இவர்கள், உண்மையில் கொடூரர்கள்தான்.

கார்ல்மார்க்ஸ் 17 வயதில் எழுதிய அரிய கட்டுரை (தமிழில்)

"எதிர்கால தொழிலை தேர்ந்தெடுப்பது பற்றி" காரல் மார்க்ஸ் தனது பள்ளி இறுதி வகுப்பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். மதத்துடனும் கடவுளுடனும் இன்னும் முழுமையாக கணக்கு தீர்த்து விட்டு இயக்கவியல் பொருள்முதல்வாதியாக வளர்வதற்கு முன்பு, கடவுளின் பெயரையும் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது இந்தக் கட்டுரை. இக்கட்டுரை 17 வயதிலேயே மார்க்சிடம் இருந்த சமூக வாழ்வு பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.

மாவோ எழுதிய நமது பயில் முறை சீர்திருத்தம் கட்டுரையில் இருந்து …

”எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது எனவே அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கருதியும் உத்தரவுகளை மேற்கொள்கின்றனர். நம்மிடையே பெரிய அளவில் பல தோழர்களிடம் இன்னமும் இந்த அகநிலைவாதப் பாணி நிலவுகிறது அல்லவா?

ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் லண்டன் காங்கிரஸ்: ஒரு பிரதிநிதியின் குறிப்பு …

ஸ்டாலின் தொகுப்பு நூல்களில் இருந்து... - தமிழில் வீ.பா. கணேசன் 1907 ஆம் ஆண்டு, ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் லண்டன் காங்கிரஸில் பங்கேற்ற பிரதிநிதி என்ற வகையில், அந்த மாநாட்டு செயல்பாடுகளை ஆய்வு செய்து பகுப்பாய்ந்து ஆழமான ஒரு குறிப்பை தோழர் ஸ்டாலின்  எழுதினார். முழுமை பெறாத இந்தக் குறிப்பு ஸ்டாலின் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. கட்சிப் பிளவுக்கான முயற்சிகளை தொழிலாளி வர்க்க தத்துவக் கண்ணோட்டத்துடன் எதிர்கொண்டு போல்ஷ்விக்குகள் நடத்திய போராட்டத்தை இதில் பதிவு செய்திருக்கிறார் … Continue reading ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் லண்டன் காங்கிரஸ்: ஒரு பிரதிநிதியின் குறிப்பு …

கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை

தமிழ்நாட்டிலும் உணவுப் பஞ்சம் தலை விரித்தாடியது. சிவகாசிக்கு அருகில் உரத்திற்காக வயலில் போட்ட கடலைப் பிண்ணாக்கை பசி தாங்காது எடுத்து தின்ற மக்கள் பலர் காலரா நோய்க்கு பலியாகி மாண்டனர். இந்த சமுதாய அரசியல் சூழ்நிலையில்தான், இப்படி பெரும் வேலைகள் நிறைந்திருந்த சூழ்நிலையில்தான், கிராமத்து மக்களை அமைப்பு ரீதியாக ஒன்று திரட்ட, தமிழக விவசாயிகள் இயக்கம் முன்னுக்கு வர முற்பட்டது.

இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் எழுதிய கடிதம் …

நான் ஒரு புரட்சியாளன், ஒரு நீண்ட கால போரட்டத்தை குறித்து விவாதிக்கும் திடமான கருத்துக்கள் கொண்ட புரட்சியாளன். என் தோளோடு தோள் நின்ற ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற நண்பர்கள் சிலர் குற்றம் சாட்டலாம் நான் சிறைப்பொந்தில் தள்ளப்பட்டதால் இப்படி பேசுகிறேன் என. அது உண்மை அல்ல. நான் சிறைக்கு வெளியிலிருந்த போது கொண்டிருந்த அதே கருத்துக்களை, அதே மன உறுதியை, அதே உத்வேகத்தை , அதே துடிப்பை; சொல்லப்போனால் இன்னும் அதிகமாக தீர்மானமாகப் பெற்றுள்ளேன். ஆகவே என் கருத்துக்களை படிப்போரை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கட்சித் திட்டம்’ குறித்து …

பிராந்திய முதலாளிகளிடையே கடந்த இருபதாண்டுகளில் வளர்ச்சியடைந்துள்ள மாற்றங்களை மார்க்சிஸ்ட் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்க முடியாதபோதும், அடுத்தடுத்த கட்சி தீர்மானங்களில் பிராந்திய முதலாளிகளின் பாத்திரத்திலும், நிலைமையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதன் விளைவாக பிராந்தியக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒரு சரியான கொள்கை வழி மட்டும் போதாது- டிமிட்ரோவ் (2)

போல்ஷிவிக் உள்ளுறுதி, புரட்சிகரமான பலம் கொண்ட குணப்பண்பு, அவற்றைச் செயல்படுத்தும் உள வலிமை ஆகியவற்றுடன் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்னும் ஞானத்தையும் நமது தலைமையிலான ஊழியர்கள் ஒன்றிணைக்க வேண்டும்.

ஒரு சரியான கொள்கை வழி மட்டும் போதாது- டிமிட்ரோவ் (1)

தோழர்களே! கம்யூனிஸ்ட் அகிலத்திற்கும் அதன் பிரிவுகளுக்கும் அடிப்படையான விஷயம் ஒரு சரியான கொள்கை வழியை வகுப்பதாகும் என்பது தெளிவான ஒரு விஷயம். ஆனால் வர்க்கப் போராட்டத்தில் திட்டவட்டமான தலைமைக்கு ஒரு சரியான கொள்கை வழி மட்டும் போதாது. அதற்கு பல நிபந்தனை நிலைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகக் கீழ்க்கண்டவை முக்கிய மானதாகும். முதலாவது ஸ்தாபன (கட்சி அமைப்பு) உத்திரவாதங்கள்: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைமுறையில் செயல்படுத்தப் படுவதற்கும் அதற்குக் குறுக்கே நிற்கும் இடையூறுகளை உறுதியாக நின்று சமாளித்து … Continue reading ஒரு சரியான கொள்கை வழி மட்டும் போதாது- டிமிட்ரோவ் (1)

கொல்கத்தா ப்ளீனம் (சிறப்பு மாநாடு) தீர்மானம் முழுமை

கொல்கத்தா, டிசம்பர் 27-31, 2015 21வது கட்சி காங்கிரசின் முடிவின் படி நடைபெற்ற ஸ்தாபனம் குறித்த பிளீனம்: கீழ்க்கண்டவற்றை நடத்திடத் தீர்மானிக்கிறது: தற்போதுள்ள சவால்களை சந்திக்கும் தன்மையுடன் கட்சி ஸ்தாபன செயல்திறன்களை வலுப்படுத்தி, முறைப்படுத்துவது; இந்திய மக்கள் மத்தியில், மக்கள் ஜனநாயக அணியின் முன்னோடியான இடதுஜனநாயக அணியைக் கட்டுவதற்கு சாதகமாக வர்க்க சமன்பாட்டை மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப் பட்ட அரசியல் நடைமுறை உத்திக்கு இசைந்தாற் போல், பிரம்மாண்டமான வெகுஜன போராட்டங்களைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம், கட்சியின் சொந்த … Continue reading கொல்கத்தா ப்ளீனம் (சிறப்பு மாநாடு) தீர்மானம் முழுமை