அறிவுசார் சொத்து, அறிவில் ஏகபோக உரிமை மற்றும் வாடகை பொருளாதாரம் !

பல்வேறு வளஆதாரங்களையும், சமூகங்களையும்ஒருங்கிணைத்து கொண்டுவரும் சாத்தியம் இப்போது போல வேறெப்போதும் ஏற்பட்டதில்லை. புதிய அறிவை உருவாக்க இவையெல்லாம் வழிவகுக்கின்றன. உழைப்பு மேலும் மேலும் சமூக மயமாகியுள்ளது, அனைத்து உழைப்பாக மாறியுள்ளது. அதனை பயன்படுத்தி மக்களின் பொது நன்மைக்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சிக்கு இடையூறாக அறிவுசார் சொத்துடைமையின் தனியார் கையகப்படுத்துதல் நோக்கம் செயல்படுகிறது.

கொரோனா தொற்றும், பொது சுகாதாரக் கட்டமைப்பும்

இதுவரை தடுப்பூசியோ, சிகிச்சைக்கான மருந்தோ கண்டுபிடிக்கப்படாத நிலையில், “மந்தை நோய்எதிர்ப்புசக்தி” அல்லது ”திரள் நோய்எதிர்ப்புசக்தியை” (HERD IMMUNITY) குறித்து கருத்தாக்கம் பொதுவெளியில் பேசப்படுகிறது. ”திறன் எதிர்ப்புசக்தியை தடுப்பூசிகளைக் கொண்டு உருவாக்குவதுதான் மருத்துவ ரீதியாகப் பாதுகாப்பானது.

கருந்துளை; அறிதல், அறிவியல், இயக்கவியல் பொருள் முதல்வாதம்!

இரா.சிந்தன் மனிதகுலம், தனது முதல் கருந்துளை படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. அறிவி யல் ஆராய்ச்சியில் இது ஒரு புதிய உயரம். கருந் துளை என்றால், அண்டத்தில் காணப்படுவதி லேயே புரிந்துகொள்ள சிக்கலான பொருளாகும். ஏற்கனவே நாம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற் கொண்டிருக்கிறோம், இப்போது நாம் அதனைப் படம்பிடிக்கும்முயற்சியில் முன்னேறியுள்ளோம். அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அனுமானித்த ஒன்றை, கண்ணுற்றுக் காண்பது மிக முக்கியமானது.  இப்போது  நமக்கு கிடைத்திருப்பது, எம் 87 என அழைக்கப்படுகின்ற கேலக்சி எனப்படும் ஒரு அண்டத்தின் … Continue reading கருந்துளை; அறிதல், அறிவியல், இயக்கவியல் பொருள் முதல்வாதம்!

நெய்தல் நிலையும் கார்பரேட் வலையும் …

வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், அது செயல்படுத்தும் விதம், மீனவர் கள், விவசாயிகள், விவசாயக் கூலிகள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள். சூழலியல் ரீதியாக வளர்ச்சி திட்டத்தின் நிலை என்ன என்ற அடிப்படை யிலேதான் இனி வளர்ச்சி திட்டங்கள் அணுகப்பட வேண்டும். அதற்கு ஏற்றவாறு மக்களுக்காகச் செயல்படும் அரசியல் இயக்கங்களின் செயல் திட்டம் மாற்றம் காண வேண்டும்.

கடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்

‘கடவுள்’ எனும் கருதுகோள் இல்லாமலேயே இந்தப் பேரண்டத்தின் உருவாக்கம், வளர்ச்சி, இருப்பு, ஏன் நாளைய நிலைமாற்றம், மரணம் ஆகிய அனைத்தையும் விளக்க இயலும் என்பதை அவர் தெளிவாக்கியுள்ளார். அவரது நிரூபணம் இந்தப் பேரண்டத்தில் கடவுளுக்கு இருந்த கடைசி இடத்தையும், வேலையையும் இல்லாது செய்துவிட்டது.

சுற்று சூழலும் பொருளாதார வளர்ச்சியும்: மார்க்சிய அணுகுமுறை

பொது வெளியில் அறிவியல் விரோத சூழல் அடிப்படை வாதிகளையும் ஆளும் வர்க்கங்களின் வளர்ச்சி மற்றும் சூழல் தொடர்பான மக்கள் விரோத கொள்கைகளையும் அம்பலப்படுத்த இத்தகைய விவாதம் உதவும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

பேரழிவின் மீது முதலாளித்துவம் நடத்தும் பேரம்

பாரிஸ் உடன் படிக்கையில் அமெரிக்கா ஒப்புக்கொண்டபடி அதன் உமிழ்வானது 2005ம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 2025ம்ஆண்டுக்குள் 25-28% குறைப்பது என்பது போன்ற மற்றொரு ஒப்பந்தத்தை சீனாவுடனும் செய்திருக்கிறது. எனவே சீனா உடன்பாட்டை அமல்படுத்த நெருக்கடி கொடுக் கும்.

பேரிடர் தொடரோட்டம் …

இந்த இக்கட்டான சூழலில் நடந்துமுடிந்த COP-21 வெற்று வார்த்தைகளோடுதான் முடிவுற்றுள்ளது என்றே அரசு சாரா சூழலியல் நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 32 பக்கங்களும் 140 சரத்துகளும் (Clauses) 29 அம்சங்களும் (Articles) கொண்ட ஒப்பந்தத்தில் யாரையும் கட்டுப் படுத்தும் எந்த சொற்றொடரும் இல்லை. நாடுகளை அவர்களால் இயன்ற உமிழ்வுக் குறைப்பைக் கூறுமாரு கேட்டுக் கொண்டதைத் தவிர வேறு எந்த முடிவும் எட்டப்பட்டத்ற்கான அறிகுறியும் இல்லை.

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்கு!

சுற்றுச் சூழல் பற்றிய ஞானம் இன்றையத் தேவையாகும். ஆண், பெண் சமத்துவத்திற்கு இந்த ஞானம் மிக அவசியமான ஒன்று. ஆணும், பெண்ணும் இணைந்து இந்த ஞானத்தோடு செயல்படும் பொழுதுதான் இயற்கை நமக்கு உதவுகிறது.