இட ஒதுக்கீடு : சி.பி.ஐ (எம்) அணுகுமுறை

கே.பாலகிருஷ்ணன் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற் கான அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப் பட்ட பிறகு பிற்படுத்தப்பட்ட மக்களை அடை யாளம் காணுவது பெரும் பிரச்சனையாக இருந்தது. இவர்களை அடையாளம் காணுவதற்கு மத்திய அரசால் 1953-ம் ஆண்டு காகா காலேல்கர் தலைமையில் ஒரு குழுவும், 1979-ம் ஆண்டு பி.பி. மண்டல் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப் பட்டது. இதேபோன்று மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளங்காணு வதற்கான பல கமிசன்கள் அமைக்கப்பட்டன. 1. … Continue reading இட ஒதுக்கீடு : சி.பி.ஐ (எம்) அணுகுமுறை

வகுப்புவாத தேசியத்தை வீழ்த்தும் மாற்று எது?

சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மாநிலக்கட்சிகள்தான் என்றபோதிலும் அவர்கள் பிராந்திய அடையாளங்களை முன்வைக்கவில்லை, உத்தரப் பிரதேசத்தில் பிராந்திய அரசியலும் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கவில்லை. தங்களை தேசிய அடையாளங்களுடன் இணைத்துப் பார்த் துக் கொள்ளும் உ.பி. மக்களுக்கு பாஜகவின் ‘இந்து தேசியவாத’ அழைப்பு ஈர்ப்பைக் கொடுத் துள்ளது. வகுப்புவாத நெடியுடன் அந்தப் பிரச் சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மெரினா எழுச்சியை பின் நவீனத்துவமுறை போராட்டம் என மதிப்பிடுகிறார்களே அது சரியா?

ஜனநாயக எழுச்சியின் பகுதியாகப் பார்க்கப்பட வேண்டிய பிரதேசக் கோரிக்கைகள், மொழிப்போராட்டங்களை தீவிர அடையாள அரசியல் எல்லைக்குக் கொண்டு சென்றது ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கையும் இந்தியாவைப்பற்றிய கண்ணோட்டமும்தான்.