கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (ஒலி வடிவில்)

(நவ. 20, 2020 - பாரதி புத்தகாலயம், சிவப்பு புத்தக தினத்திற்காக செய்யப்பட்ட ஒலிப்பதிவு - குரல்: அருந்தமிழ் யாழினி, இயல் குரல் கொடை) பிரெடெரிக் எங்கெல்ஸ்  தமிழில்: மு.சிவலிங்கம் பதிப்பாளர் குறிப்பு கம்யூனிஸ்ட் லீக்குக்காக 1847-இல் எங்கெல்ஸ் இரண்டு வரைவுத் திட்டங்களை (Draft Programmes) கேள்வி-பதில் வடிவில் தயாரித்தார். முதலாவதை, 1847 ஜூன் மாதத்தில், “Draft of Communist Confession of Faith” என்ற பெயரிலும், இரண்டாவதை, அக்டோபர்-நவம்பர் மாதத்தில், “Principles of Communism” என்ற … Continue reading கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (ஒலி வடிவில்)

லெனின் 150: லெனினும் தொழிலாளி வர்க்கமும்

ஒவ்வொரு வேலைநிறுத்தப் போராட்டமும் தொழிலாளர்களுக்கு தங்கள் மீதான அவநம்பிக்கையை போக்குகிறது. சுரண்டலில் இருந்து விடுதலையும், எதிர்காலமும் தங்கள் கையில் உள்ளது என்று நம்பிக்கை அவர்களுக்கு வலுப்படுகிறது. தாங்கள் தனி நபர்கள் அல்ல என்ற உண்மையும், தாங்கள் ஒரு வர்க்கம் என்ற உண்மையும் அவர்களுக்கு புலப்படுகிறது.

சோஷலிச கியூபாவும் கொரோனா பெருந்தொற்றும்

ஆரோக்கியம் தொடர்பான மனிதவளம் திட்டமிட்ட அடிப்படையில் தொலைநோக்குடன் போதுமான அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கியூபா நாட்டில் மேலோங்கியுள்ள சமூக விழுமியங்கள் ஆரோக்கியத்தை மனித உரிமை எனக் கருதுகின்றன. (கியூபாவின் சோசலிச அரசியல் சாசனம் இதை உறுதிபடக் கூறுகிறது.)­ கியூபாவின் மருத்துவர்களும் செவிலியர்களும் லாப நோக்கத்தால் உந்தப்பட்டு செயல்படுவதில்லை. மாறாக, மக்கள் நலம் பேண அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

உலகமயமாதல் காலத்தில் பெண்கள் மீதான சுரண்டல்

உலகமயமாதலின் கூடவே கஷ்டப்பட்டு வென்ற தொழிலாளர் உரிமைகள் மீறப்படுவதும் மறுக்கப்படுவதும் நடக்கின்றன. விற்பனைத் துறை, கடைகள், துணி உற்பத்தி, வாகன உற்பத்தித் துறை போன்ற பிற துறைகளில் பெண்கள் கடும் ஒடுக்குமுறையையும் மோசமான வேலைச் சூழலையும் சந்திக்கின்றனர். ஊதியம் சார் பாகுபாடுகளையும் எதிர்கொள்கின்றனர்.

வரலாறு என்னை விடுதலை செய்யும் – பிடல் காஷ்ட்ரோ

கீழ்தரமான எண்ணங்களை கொண்ட மனிதர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கிறார்கள். துன்புறுத்தி இன்பங்காண்போரும், கொடியவர்களும், தங்கள் முன்னோரின் இழிச்செயல்களையெல்லாம் தாங்கி, மனிதப் போர்வையில் வளையவரும் இவர்கள், உண்மையில் கொடூரர்கள்தான்.

மார்க்சியம் – புதிய சகாப்தம், புதிய சூழ்நிலை, புதிய தேவைகள்

(சீன கம்யூனிஸ்ட் கட்சியின்   மத்தியக் கமிட்டி  வெளியிடும்  கோய்ஷி என்ற பத்திரிக்கையின் குழுவில் உள்ள  லிஜே எழுதிய இக்கட்டுரை ஆங்கில மார்க்சிஸ்ட் (2018  ஜனவரி - மார்ச்) இதழில்  மறுபிரசுரமானது.) [வரலாற்றின் பல்வேறு கட்டங்களிலும் சரக்கு உற்பத்தி முறையில் தொடர்ந்து மாற்றங்கள் நேர்ந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பது எல்லா சமூகங்களிலும் மானுட வரலாற்று வளர்ச்சியில் இயல்பானதும் தவிர்க்க இயலாததும் ஆகும். அவ்வாறு உற்பத்தி சக்திகளில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப சந்தையும் மாறிவந்திருக்கிறது. … Continue reading மார்க்சியம் – புதிய சகாப்தம், புதிய சூழ்நிலை, புதிய தேவைகள்

கொரோனா நோய் தொற்றும் முதலாளித்துவ “கொள்ளை“ நோயும்

எஸ். கண்ணன் கொரோனா நோய்த் தொற்று புலம் பெயர் தொழிலாளர்களை, அவர்களது பிறப்பிடம் நோக்கி விரட்டுகிறது. நடந்தே செல்வது உள்ளிட்டு அனைத்து வழிமுறைகளிலும் சொந்த ஊர்களை நோக்கிய பயணம் குவியல் குவியலாக அரங்கேறியது. முதலாளித்துவத்தை ஆதரிப்போரும் கூட இந்த பயணங்களை கண்டு பரிதாபப்பட்டார்கள். உணவு, தண்ணீர் தருவது என சிறு சிறு உதவிகளைச் செய்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்கள். தன்னார்வ குழுக்கள் ஒருபகுதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் அமைப்புகளும் பல்வேறு வகையில், அரசுகளை நிர்பந்தித்து, உணவு, … Continue reading கொரோனா நோய் தொற்றும் முதலாளித்துவ “கொள்ளை“ நோயும்

கொரோனா பெரும் தொற்று காலத்தில் மக்கள் மீது போர் தொடுக்கும் மோடி அரசு

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா இக்கட்டுரை எழுதும் நேரத்தில் கொரோனா தொற்று பாய்ச்சல் வேகத்தில் நாடு முழுதும் பரவிக்கொண்டிருக்கிறது. இன்றைய தேதியில் (ஜூன் 7, 2020) கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேருக்கு தொற்று பரவியுள்ளது என்றும் ஏறத்தாழ 7,000 பேர் இறந்துள்ளனர் என்றும் அரசின் தகவல்கள் கூறுகின்றன. எழுபது நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்தும் தொற்று கட்டுப்படவில்லை; சீறிப்பாய்கிறது. தொற்றை எதிர்கொண்டு மக்களை காப்பாற்றுவது என்ற சவாலில் மைய அரசு படுதோல்வி அடைந்துள்ளது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. … Continue reading கொரோனா பெரும் தொற்று காலத்தில் மக்கள் மீது போர் தொடுக்கும் மோடி அரசு

தோழர் கி. வரதராசன் – ஓர் பன்முகத் தலைவர்

ஆர். ஸ்ரீதர் உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தில் பேரதிர்ச்சியை சந்தித்துவரும் நிலையில் நமக்கெல்லாம் மற்றுமொரு பேரதிர்ச்சியாய் வந்தந்த செய்தி. நம் அன்புத் தலைவர் கே. வரதராஜனின் மறைவுச் செய்தி கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், இடதுசாரி அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. கே.வி. என்றழைக்கப்பட்ட தோழர் கே.வரதராஜன் திருச்சி மாவட்டம் பொதுவுடைமை இயக்கத்திற்கு அளித்த மகத்தான ஆளுமைகளின் வரிசையில் மற்றொரு அற்புதமானத் தலைவர்.              திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, பட்டய பொறியியல் படிப்பில் தேர்ச்சிபெற்று, நெல்லையில் … Continue reading தோழர் கி. வரதராசன் – ஓர் பன்முகத் தலைவர்

சுகாதார நெருக்கடிக்கு இடையே கல்வியின் நிலை

ஆயிஷே கோஷ் ஆராய்ச்சி மாணவி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் மகாராஷ்டிரா மாநிலத்தில், லாத்தூர் நகரைச் சேர்ந்த  மாணவன் பராஸ் மடிக்கர் தன்னைப் போன்ற 11வயது சிறுவர்களைப் போலவேதான் நடந்து கொண்டான். ஊரடங்கால் பள்ளி மூடப்பட்டு தனது நான்காம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மகிழ்ந்து போன அவன் மேலும் நீண்ட விடுமுறையை எதிர்நோக்கியிருந்தான். ஆனால் அது நடைபெறவில்லை. அவனுடைய அக்கா சுருதிக்கு 14 வயது. அவளும் அதே பள்ளியில் படித்து வருகிறாள். இவர்களுடைய … Continue reading சுகாதார நெருக்கடிக்கு இடையே கல்வியின் நிலை