நூற்றாண்டு கண்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சாதித்தது என்ன?

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் உள்ள சாத்தியங்களையும், வாய்ப்புகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்திரமோ, கசப்புணர்வோ உதவாது. திறந்த மனதுடன் சாத்தியங்களை ஆய்வு செய்வதன் வழியாகவே கம்யூனிஸ்டுகள் முன்னேற முடியும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, இந்திய மக்கள் நலன்களை பாதுகாக்க மிக மிக அவசியமாகும். நாடு, அநாகரீக நிலைமைக்கு பின் தள்ளப்படாமல் தடுப்பதில், கம்யூனிஸ்டுகள் தங்கள் கடமையை வீரியமாக ஆற்றிட வேண்டும்.

சுகாதார நெருக்கடிக்கு இடையே கல்வியின் நிலை

ஆயிஷே கோஷ் ஆராய்ச்சி மாணவி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் மகாராஷ்டிரா மாநிலத்தில், லாத்தூர் நகரைச் சேர்ந்த  மாணவன் பராஸ் மடிக்கர் தன்னைப் போன்ற 11வயது சிறுவர்களைப் போலவேதான் நடந்து கொண்டான். ஊரடங்கால் பள்ளி மூடப்பட்டு தனது நான்காம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மகிழ்ந்து போன அவன் மேலும் நீண்ட விடுமுறையை எதிர்நோக்கியிருந்தான். ஆனால் அது நடைபெறவில்லை. அவனுடைய அக்கா சுருதிக்கு 14 வயது. அவளும் அதே பள்ளியில் படித்து வருகிறாள். இவர்களுடைய … Continue reading சுகாதார நெருக்கடிக்கு இடையே கல்வியின் நிலை

பெருந்தொற்றை வீழ்த்திய சீனாவின் சோசலிசம்!

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து சொந்த மக்களை பாதுகாப்பதில் அரசாங்கங்கள், பெரு நிறுவனங்கள், உள்ளூர் சமூகம் மற்றும் ஊடகங்களுடைய செயல்பாடுகளை பற்றிய ஆய்வினை சிங்கப்பூரின் இரண்டு முன்னணி ஆய்வு நிறுவனங்கள் நடத்தினார்கள். (Singapore’s leading social research agency Blackbox Research and technology company Toluna) 23 நாடுகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் முதல் இடத்தினை சீனமும், இரண்டாம் இடத்தை வியட்நாமும் பிடித்திருந்தன. ஏகாதிபத்திய நாடுகள் இந்த பட்டியலில் 50 புள்ளிகளைக் கூட பெற முடியாமல் பின் தங்கியிருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்!

குடியுரிமை என்பதை தன் அரசியலுக்கான புதிய ஆயுதமாக தீட்டத்தொடங்கியிருக்கிறது பாஜக. குடியுரிமை சட்டத் திருத்தத்தை கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் செய்தது. அதில் மத அடிப்படையில் இந்தியக் குடியுரிமையை தீர்மானிக்கும் தன் நோக்கத்தை அப்பட்டமாகவே வெளிப்படுத்தியுள்ளது.

குழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’

கம்யூனிசத்தின் நூற்றாண்டு, ‘கலக்கத்தோடு தொடங்குவதாக’ கட்டுரையாளர் நிறுவ முயல்கிறார். இன்று கலக்கத்தில் இருப்பது கம்யூனிஸ்டுகள் அல்ல, முதலாளித்துவமே மீள முடியாத தன் நெருக்கடியைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டுள்ளது. மனித குலத்தின் எதிர்காலத்தைக் காட்டுகின்ற ஒளிவிளக்காய் மார்க்சிய இயக்கம் ஜொலிக்கிறது.

அடிமைச் சங்கிலியைத் தகர்த்த தாதா அமீர் ஹைதர் கான்

அமீர் ஹைதர் கான் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை, ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையோடு பின்னிப் பிணைந்தது என்ற உண்மையை உணர்ந்த ஒரு போராளியாக இயங்கினார். பயணித்த இடத்திலெல்லாம் தன் முத்திரையைப் பதித்தார். இந்திய துணைக்கண்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் பரவி வளர்ந்ததில் அமீர் ஹைதர் கானின் பங்களிப்பு அதி முக்கியமானது.

மாவோ எழுதிய நமது பயில் முறை சீர்திருத்தம் கட்டுரையில் இருந்து …

”எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது எனவே அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கருதியும் உத்தரவுகளை மேற்கொள்கின்றனர். நம்மிடையே பெரிய அளவில் பல தோழர்களிடம் இன்னமும் இந்த அகநிலைவாதப் பாணி நிலவுகிறது அல்லவா?

கருந்துளை; அறிதல், அறிவியல், இயக்கவியல் பொருள் முதல்வாதம்!

இரா.சிந்தன் மனிதகுலம், தனது முதல் கருந்துளை படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. அறிவி யல் ஆராய்ச்சியில் இது ஒரு புதிய உயரம். கருந் துளை என்றால், அண்டத்தில் காணப்படுவதி லேயே புரிந்துகொள்ள சிக்கலான பொருளாகும். ஏற்கனவே நாம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற் கொண்டிருக்கிறோம், இப்போது நாம் அதனைப் படம்பிடிக்கும்முயற்சியில் முன்னேறியுள்ளோம். அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அனுமானித்த ஒன்றை, கண்ணுற்றுக் காண்பது மிக முக்கியமானது.  இப்போது  நமக்கு கிடைத்திருப்பது, எம் 87 என அழைக்கப்படுகின்ற கேலக்சி எனப்படும் ஒரு அண்டத்தின் … Continue reading கருந்துளை; அறிதல், அறிவியல், இயக்கவியல் பொருள் முதல்வாதம்!

மார்க்ஸ் 200: உபரிமதிப்பும், அன்னியமாதலும் …

மார்க்சின் புரட்சிகரத் திட்டத்திற்கும் பொருந்துகிற உண்மை இது. முதலாளித்துவத்தின் முழுமையை, ஏகாதிபத்தியத்தையும் உள்ளடக்கி நாம் காணும்போதுதான் புரட்சிக்கான வாய்ப்புகளும், சாத்தியங்களும் மிகவும் அதிகமாகின்றன; வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர் வர்க்க புரட்சியைப்பற்றி மட்டும் நாம் பேசாமல் முதலாளித்துவ வளர்ச்சி குன்றிய நாடுகளிலும் தொழிலாளர் - விவசாயிகள் கூட்டணியின் அடிப்படையில் ஜனநாயக புரட்சியை, சோசலிசம் நோக்கிய கட்டமாக வகுத்தெடுக்க முடிந்துள்ளது. தொழிலாளர் - விவசாயிகள் ஒற்றுமை என்ற கருதுகோளை லெனின் முன்வைத்ததற்கான பின்புலமாக, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புரட்சியை, தாமதமாக தான் அடியெடுத்து வைத்த நாடுகளில் முதலாளித்துவத்தால் நிறைவேற்ற முடியாத இயலாமையே இருக்கிறது.

மக்கள் ஜனநாயகத்தில் தேர்தலும், அரசியலும் ….

தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையும் அரசியலில் பல கட்சிகள் இயங்கிடும் நடைமுறையையும் மக்கள் ஜனநாயக அரசின் முக்கியமான நோக்கங்களாகும்.