உடைமை… உரிமை… பறிக்கும் அந்நிய நேரடி முதலீடு…

எஸ். கண்ணன் இந்தியா போன்ற வளரும் நாட்டில் வேலைவாய்ப்பு, தொழில் நுட்பம், ஆகியவை அதிகரிக்க வேண்டுமெனில் அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்கின்றனர். வேலைவாய்ப்பும், தொழில் நுட்பமும் வளர்ச்சியின் பிரதான அடையாளம் என சித்தரிப்பதோடு, அதற்கு அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்ற பிரச்சாரத்தை, தாராளமயம் மற்றும் வலதுசாரி கொள்கையை பின்பற்றும் பாஜக போன்ற அரசுகள் தீவிரமாக மேற்கொள்கின்றன. இந்த பிரச்சாரம் உண்மையென்றால், இந்தியாவில் மட்டுமல்ல; வளர்ந்த நாடுகளிலும் வேலை வாய்ப்பு குறைந்து, வேலையின்மை அதிகரித்துள்ளது ஏன்? … Continue reading உடைமை… உரிமை… பறிக்கும் அந்நிய நேரடி முதலீடு…

விவசாயிகளின் போராட்டங்கள்: நகர்ப்புற ஏழைகளுடன் சேர்வதன் முக்கியத்துவம்

பிரபாத் பட்நாயக் ”ஜெர்மனியில் விவசாயிகளின் போராட்டம்” என்ற புத்தகத்தில், எங்கெல்ஸ் தொழிலாளி-விவசாயி கூட்டணியின் அவசியத்தைக் குறிப்பிட்டுள்ளார். 125-இல் ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம் தோற்றதற்கான காரணம் நகர்ப்புற சாமானிய மக்களுடன் (ப்ளேபியர்கள்) கூட்டணி இல்லாததுதான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். மத்திய அரசாங்கத்தின், மோசமான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் வீரம்செறிந்த போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கடும்குளிரையும் மழையையும் பொருட்படுத்தாமல் – டில்லியை அமைதியான முறையில் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்போது, நமக்கு ஜெர்மனியில் விவசாயிகளின் போராட்டத்தின்போது ஃபிரெடரிக் எங்கெல்ஸ் … Continue reading விவசாயிகளின் போராட்டங்கள்: நகர்ப்புற ஏழைகளுடன் சேர்வதன் முக்கியத்துவம்

5G சந்தையும் மூலதனமும்

ஆர். பத்ரி வளர்ந்து வருகிற நவீன தொழில்நுட்பம் உலக அளவிலானதொரு சந்தையை உருவாக்கி இருக்கிறது. சந்தையை தேடி அலையும் மூலதனம் புவிப்பரப்பின் அனைத்து இடங்களிலும் தனக்கான உறைவிடங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும் என்பதோடு எல்லா இடங்களிலும் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.-கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 172 ஆண்டுகளுக்கு முன்னால் மார்க்ஸ் – எங்கெல்ஸ் கூட்டுப் படைப்பில் உருவான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மூலதனத்தின் தன்மை குறித்து விவரிக்கப்பட்டிருக்கும் வரிகளே இவை. அபரிமிதமான … Continue reading 5G சந்தையும் மூலதனமும்

இன்றைய தேவை: எதேச்சாதிகாரத்திற்கு எதிரான பரந்துபட்ட ஒற்றுமை

பிரகாஷ் காரத் [இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் தோழர் பிரகாஷ் காரத் இந்தியாவின் சமூக மாற்றத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நாடாளுமன்ற அனுபவங்கள்- அதில் பெற்ற பாடங்கள், கம்யூனிஸ்டுகளுக்கு முன்பாக உள்ள இன்றைய சவால்கள், இன்றைய இந்திய அரசியல்சூழல் ஆகியவை குறித்து விரிவாகப் பேசியிருந்தார். அதன் சுருக்கமான வடிவம் கீழே தரப்படுகிறது. - ஆசிரியர் குழு] பேட்டி கண்டவர்கள்: ஜிப்சன் ஜான்,ஜிதீஷ், பி.எம். நன்றி: ஃப்ரண்ட்லைன் … Continue reading இன்றைய தேவை: எதேச்சாதிகாரத்திற்கு எதிரான பரந்துபட்ட ஒற்றுமை

இந்துத்துவாவும் தமிழக தேர்தல் களமும்

அன்வர் உசேன் அடுத்த சில நாட்களில் தமிழகம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. மக்களின் ஆதரவை பெற இயலாத பா.ஜ.க. இந்த தேர்தல் மூலம் எப்படியாவது மாநில சட்டமன்றத்தில் காலூன்றத் துடிக்கிறது. இதற்கு அ.இ.அ.தி.மு.க. வை பயன்படுத்த இயலும் என்பது பா.ஜ.க.வின் திட்டம். அரசியல் தளத்தில் பா.ஜ.க. இயங்கும் அதே நேரத்தில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் தீவிரமாக தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டுள்ளன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். எனவே, இந்த தேர்தல் பாசிச சக்திகளுக்கு … Continue reading இந்துத்துவாவும் தமிழக தேர்தல் களமும்

நாட்டை விற்கும் மத்திய பட்ஜெட்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இந்த நாட்டின் மிகப்பெரிய படை- தலைநகர் தில்லியின் நுழைவாயில்களில் அணிவகுத்துள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் படை – பல மாதங்களாக மத்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு முக்கிய அரசியல் பாடம் கற்பித்துவருகின்றனர். அரசின் அடக்குமுறைகளை ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் வலுவாக எதிர்கொள்ளும் என்பதுதான் அந்தப் பாடம். ஆனால் நாட்டின் பெரும் துயர் என்னவென்றால் மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வை மட்டுமல்ல; நாட்டின் அனைத்து உழைப்பாளி மக்களின் வாழ்வையும் நாட்டின் பொஇந்தியாவை நிர்பந்திக்க ருளாதாரத்தையும் நாசப்படுத்தி … Continue reading நாட்டை விற்கும் மத்திய பட்ஜெட்

பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் அரசியல் பொருளாதாரம்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக அரசு 2011 இல் பதவி ஏற்றது. அச்சமயம் காங்கிரஸ் தலைமையிலான “ஐக்கிய முற்போக்கு கூட்டணி” (யூபிஏ)அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் அரசியல் வரைபடம் முற்றிலும் மாறியுள்ளது. மத்தியிலும் பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது. அதன் அதிதீவிர தாராளமய கொள்கைகள், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து அதிகாரங்களை மையப்படுத்துவது, அதன் வெறுப்பு உமிழும் மதவாத அரசியல் ஆகியவை இந்தியாவும் தமிழகமும் எதிர்கொள்ளவேண்டிய சவால்களாகியுள்ளன. … Continue reading பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் அரசியல் பொருளாதாரம்

சோஷலிசம் எதற்காக?

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் [1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரையின் சிறு பகுதி] பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுநராக இல்லாத ஒருவர் சோஷலிசம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன். விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம்... பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அநேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் … Continue reading சோஷலிசம் எதற்காக?

இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்

அ.சவுந்தரராசன் பிரடெரிக் எங்கெல்ஸ் எழுதிய முதல் முழுமையான புத்தகம் ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்’ ஆகும். இந்த புத்தகத்தை எழுதுகிறபோது அவருக்கு வயது 24 மட்டுமே. மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவருவதற்கு முன்பாக, கம்யூனிஸ்ட் லீக் மற்றும் முதலாம் அகிலம் போன்ற அமைப்பு வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பாகவே, ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம், பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமெரிக்க பதிப்பாக ஆங்கிலத்திலும் வெளியானது. மிக இளம் வயதிலேயே இந்த புத்தகத்தை … Continue reading இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்

விவசாயப் பிரச்னையும், சோசலிசமும்

என். குணசேகரன் மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் எழுச்சி, அவ்வப்போது விவசாய பாதிப்புகளுக்காக எழுகிற தற்காலிக போராட்டம் அல்ல. இந்திய விவசாய நெருக்கடி மிகக் கடுமையானது என்பதை இந்தப் போராட்டம் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது. ஆளும் வர்க்கங்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, விவசாய பொருட்களை சந்தை சரக்காக மாற்றி, ஏகபோக மூலதனத்தின் ஆதிக்கத்தை விவசாயத்தில் நிலைநாட்ட முயற்சிக்கிறது என்பதையும் இந்தப் போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது. மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் … Continue reading விவசாயப் பிரச்னையும், சோசலிசமும்