இந்தியாவின் தொடரும் வேளாண் கிளர்ச்சி: மார்க்சீய புரிதலை நோக்கி

மாநில நிலைமைகளுக்கு ஏற்றவாறு, விவசாயத் தொழிலாளர்கள் அமைப்பு மட்டுமின்றி அனைத்து கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகளுக்கான அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். விவசாய தொழிலாளர் சங்கம், ஊரக தொழிலாளர் சங்கம், விவசாய சங்கம் ஆகியவை இணைந்து பொது பிரச்சினைகளின் மீது ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்த வேண்டும். இது கிராமப்புற செல்வந்தர் வர்க்கத்தை எதிர்கொள்ள மிகவும் அவசியம்.

ஜே.டி. பெர்னலின் வரலாற்றில் அறிவியல் ஒரு பின்னணி

ஆங்கிலப் புத்தகத்தைப் படிப்பதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு பேராசிரியர் முருகன் அவர்களின் இந்தப் புத்தகம் அரிய வாய்ப்பாகும். புத்தகத்தின் முக்கிய அம்சங்களை எளியமுறையில், புரிந்துகொள்ளக்கூடிய வகையில், உள்ளூர் உதாரணங்களோடு விளக்கி இருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பாகும். ஒரு நாடகத்தின் கட்டியங்காரனாக மட்டுமல்ல; புத்தகத்தின் தாக்கங்களையும் முருகன் அவர்கள் மிகச்சிறப்பான முறையில், வாசிப்பதற்கு எவ்வித தடையுமின்றி கொடுத்திருப்பது மேலும் சிறப்பாகும்.

தேர்தல்களும், மார்க்சியவாதிகளும் …

ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு குறிப்பிட்ட அணி சேர்க்கை ஏற்படும்.  இவையெல்லம் நிலையானவை அல்ல.  ஆனால், நமது சுயேட்சையான வேலைகள், செயல்பாடுகள் மற்றும் இடதுசாரி, ஜனநாயக மாற்றை கட்டமைக்க செயல்படும் வர்க்க அடிப்படையிலான நமது ஐக்கிய முன்னணி ஆகியவையே நமது அடிப்படை நோக்கமாக, செயல்பாடாக இருக்க வேண்டும்.  தேர்தல் கூட்டணி மற்றும் ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்பது முழுக்க முழுக்க தேர்தல் நேரத்தில் செய்யப்படும் தற்காலிக நடவடிக்கையாகவே இருக்க வேண்டும். 

தடுப்பு மருந்துகளும், அறிவுசார் காப்புரிமம் மூலமான கொள்ளையும்

கொரோனா தடுப்பூசி காப்புரிமங்களை ரத்து செய்து, உற்பத்தியை பெருக்கி, மக்களை காக்கும் முடிவிற்கு சீனா, கியூபா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இதை கடுமையாக எதிர்ப்பது (முன்பு) அமெரிக்கா, மற்றும் கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா. தனியார் லாபவெறி கொள்ளைக்கு ஏதுவான காப்புரிமச் சட்டங்களை இறுக்கமாக பிடித்து வைத்துள்ளது இந்த ஏகாதிபத்திய அரசுகள் தான்.

உழைப்பை விற்கவேண்டிய கட்டாயத்திலிருந்து விடுதலை

1865ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் மார்க்ஸ் ஆற்றிய உரையே “கூலி, விலை, லாபம்” எனும் இந்நூலாகும்.

சமகால முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் 1945 முதல் 1970களின் நடுப்பகுதிவரை தொடர்ந்து 30 ஆண்டுகள் ஆண்டுக்கு 5% என்ற விகிதத்தில் உலக முதலாளித்துவ அமைப்பு வரலாறு காணாத வளர்ச்சியைக் கண்டது. இதனால் குவிக்கப்பட்ட பெரும் கம்பெனிகளின் சூப்பர் லாபத்தொகைகளும், மேலைநாடுகளின் உழைப்பாளி மக்களின் ஓய்வுகாலத்துக்கான வாழ்நாள் சேமிப்புகளும், 1970களில் ஏற்பட்ட பெட்ரோலியம் கச்சா எண்ணெய்விலையின் பன்மடங்கு அதிகரிப்பில் குவிந்த பணம் மேலை நாடுகளின் பன்னாட்டு வங்கிகளில் வைக்கப்பட்டதும், பன்னாட்டுப் பொருளாதாரத்தில் நிதி மூலதன ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது. இப்படி … Continue reading சமகால முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி

சமரசமற்ற சித்தாந்த போராட்டம்

"என்ன செய்ய வேண்டும்?" : செவ்வியல் நூல் அறிமுகம் ச.லெனின் பெரும்பாலான உலக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சந்தித்த வலது மற்றும் இடது திரிபுவாதங்களை ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கமும் எதிர்கொண்டது. அவைகளுக்கு எதிரான கருத்துப் போராட்டமாகவும் ரஷ்யப் புரட்சிக்கு வழிகாட்டும் வகையிலான, இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையுடன் கூடிய சித்தாந்த தெளிவை வழங்கும் படைப்பாகவும் லெனினின் “என்ன செய்ய வேண்டும்?” நூல் விளங்கியது. இந்நூல் 1902 –ம் ஆண்டு வெளியானது. ரஷ்யாவில் வெளிவந்த ரபோச்சியே தேலோ, ரபோச்சியே மிசல் … Continue reading சமரசமற்ற சித்தாந்த போராட்டம்

இந்திய சூழல்கள் சில குறிப்பிட்ட பிரச்சனைகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விசாகப்பட்டினம் காங்கிரஸ் நிறைவேற்றிய அரசியல் தீர்மானம் சமகால நிகழ்வுகள் பற்றி குறிப்பிட்டிருந்த சில பகுதிகளை வாசகர்களின் கவனத்திற்காக கீழே தருகிறோம். இந்த இதழில் வெளிவந்துள்ள ‘ஒரு விரல் புரட்சி’ கட்டுரையின் தொடர்ச்சியாக இதை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.ஆசிரியர் குழு 10.1        இந்திய சூழலில், இன்றைய இடைமாற்ற காலத்தில் வர்க்க சக்திகளின் பலாபலம் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக மாறியுள்ள நிலையில் நமது நீண்ட காலக் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்திய மக்கள் மத்தியில்  வர்க்க சக்திகளின் பலாபலன்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு  பலரும் ஒன்றுபட்டு முயற்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு இன்று நாம் வாழும் மெய்யான சூழல்களில் நமது சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்த கூர்மைப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு பெற்ற சக்திமிக்க மக்கள்  போராட்டங்களை கட்டவிழ்த்துவிடுவது அவசியமாகிறது. 10.2        நாடாளுமன்றத்துக்குள்ளேயும், வெளியேயுமான வடிவங்கள்: இக்கடமையை நிறைவேற்றுவதற்கு மேம்படுத்தப்பட்ட கட்சித்திட்டம் பின்வருமாறு குறிப்பிடுகிறது :“மக்கள் ஜனநாயகம் மற்றும் சோஷலிச சமூக மாற்றத்தை அமைதியான  வழியில் அடையவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) விழைகிறது.  வலிமையான வெகுஜன புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும்  நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறுகிற போராட்ட  வடிவங்களை இணைப்பதன் மூலமும் பிறபோக்கு சக்திகளின் எதிர்ப்பை  முறியடிக்க தொழிலாளி வர்க்கமும் அதன் கூட்டாளிகளும் முயல்வதோடு,  அமைதியான வழிமுறைகளில் இந்த உருமாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கும். எனினும் ஆளும் வர்க்கங்கள் தங்களுடைய அதிகாரத்தை  ஒருபோதும் தாமாக விட்டுத்தர மாட்டார்கள் என்பதை எப்போதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  மக்களின் விருப்பத்திற்கு மாறாக  சட்டத்திற்கு புறம்பாகவும், வன்முறை மூலமாகவும் இதைப் பின்னுக்குத் தள்ள  அவர்கள் முயல்வார்கள்.  எனவே, நாட்டின்  அரசியல்  வாழ்க்கையில்  ஏற்படக் கூடிய திருப்பங்கள் மற்றும் திருகல்களை கவனத்தில் கொண்டு அனைத்து  … Continue reading இந்திய சூழல்கள் சில குறிப்பிட்ட பிரச்சனைகள்

தேர்தல்கள், ஒருவிரல் புரட்சியா?

என்.குணசேகரன் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் அவ்வப்போது நிலவுகிற நிலைமைகளை அடிப்படையாகக்கொண்டு கம்யூனிஸ்டுகள் நிலை எடுக்கின்றனர். இன்றைய சூழலில் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிற கொள்கைகள், வகுப்புவாதம் போன்ற உழைக்கும் மக்கள் ஒற்றுமையை குலைக்கின்ற பிரச்சனைகளை மையமாக வைத்து நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கிற நோக்கத்துடன் பொருத்தமான அரசியல் சக்திகளோடு அணி சேர்ந்து கம்யூனிஸ்டுகள் தேர்தலை சந்திக்கின்றனர். கம்யூனிஸ்டுகளின் தொலைநோக்கு இலக்கு, தேர்தல்களில் பெறப்படும் வெற்றிகள் அல்ல; தேர்தலுடன் கம்யூனிஸ்ட்களின் கடமை முடிவடைவதில்லை. காலம் காலமாக அடிமைப்பட்டு, … Continue reading தேர்தல்கள், ஒருவிரல் புரட்சியா?

சீனா & ஷின்ஜியாங்: உண்மைகளும் பொய்களும்

அபிநவ் சூர்யா தன் பேராதிக்கத்தை கேள்விக்குள்ளாக்குவோரை கட்டுக்குள் கொண்டு வர உலக ஏகாதிபத்திய சக்திகள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் ஆயுதங்களில் ஒன்று "பொய் பரப்புரைகள்". தன்னை எதிர்க்கும் நாடு/இயக்கம் “படுகொலைகள்/மனித உரிமை மீரல்களில் ஈடுபடுகிறது" என்றோ, “உலக அமைதிக்கு அச்சுறுத்தல்" என்றோ கட்டுக்கதைகள் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு, இதை காரணமாக வைத்து அந்த நாடு/இயக்கம் மீது தடைகளை விதிப்பது முதல் போர் தொடுப்பது வரையிலான செயல்பாடுகள் நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன. சோவியத் ஒன்றியம், வட கொரியாவில் துவங்கி, பின் … Continue reading சீனா & ஷின்ஜியாங்: உண்மைகளும் பொய்களும்