கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்துப் போராட்டங்கள் : தோற்றமும், இயக்கத்தின் மீதான தாக்கமும்

1957 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் இரட்டிப்பானது, இரண்டாவது மிகப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்தது. கேரளாவில் பெரும்பான்மையை வென்றது. தேர்தலுக்கு பின், கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க்கி "வெகுஜன கட்சியாக" கட்டமைக்க மத்தியக்குழு அழைப்பு விடுத்தது. அமிர்தசரஸ் நகரில் கட்சியின் ஐந்தாவது "சிறப்பு" மாநாடு 1958 ஏப்ரல் 6 முதல் 13 வரை நடைபெற்றது. “திரிபுவாத, பிரிவினைவாத போக்கிற்கு எதிராக போராடி, இந்திய நிலையை கருத்தில் கொண்டு, மார்க்சிய - லெனினியத்தை பொருத்தி, திட்டங்களை வகுக்க" கட்சியின் செயல்திட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றும், வியட்நாமின் சாதனைகளும்

அபிநவ் சூர்யா கோவிட்-19 பெருந்தொற்றை கையாள்வதில் உலக நாடுகள் மத்தியில் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. சோசலிச கொள்கைகளை கடைப்பிடிக்கும் கடைபிடித்து வரும் சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளும், இந்தியாவின் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமும்  நோய்க் கட்டுப்பாட்டில் ஆகச்சிறந்த முன்னேற்றங்களை சாதித்திருக்கின்றன. சோசலிச கொள்கையான திட்டமிடப்பட்ட சமூக வளர்ச்சியே இந்த சாதனைகளுக்கு அடிப்படையாக உள்ளது. அனைத்து வளங்களையும் மக்களின் நல்வாழ்விற்காக திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி வந்த காரணத்தால்  சோசலிச நாடுகளின் கட்டமைப்பால் … Continue reading கொரோனா பெருந்தொற்றும், வியட்நாமின் சாதனைகளும்